எதிர்வரும் ஜூலை 26,27 மிட்லாண்ட்ஸ் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவிருக்கும் இரண்டாம் உலக சைவ சமய மாநாடு தமிழர் சமய வாழ்வுக்குப் பல சீர்திருத்தங்களை முன்மொழிகிறது. கலந்து கொள்ள விரும்புவோர் saivaperavai.org என்னும் இணைய தளத்திற்குச் சென்று விளக்கம் பெறுவதோடு முன்பதிவும் செய்து கொள்ளலாம். தொடர்புக்கு: [email protected]
முனைவ ர் நாகப்பன் ஆறுமுகம் 0169691090.
உலக 2வது சைவ மாநாடு என்பது சரியான தமிழ் என்று நினைக்கிறேன்
2வது உலக என்பதில் கருத்து பிழை உள்ளது
2வது உலகம் என்பது சூச்சம உலகம் என்று பொருள் !
2ஆம் உலக போர் என்பதற்கும் மேலே உள்ள தலைபிற்கும் என்ன பிழை உள்ளது? இதுவரை நாம் கண்டது ஒரு உலகம் ஆகவே இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை! திரு பொன் ரங்கன் கூறுவது எனக்கு புரிகிறது,ஒரு வேலை நடைமுறையில் இன்னொரு உலகம் இருந்தால் இந்த தலைப்பில் கருத்துப்பிழை நிச்சையமாக உள்ளது.
ஊக்கு விற்பவனானாலும் ஊக்குவிப்பு தரலாம்
நல்ல ஊடகனுக்கு என்ன தரலாம்?
===========================================
என்ற ஒரு பழமொழி ஞாபகத்துக்கு வந்ததது. செம்பருத்தி தமிழர்களுக்கான ஒரு அருமையான ஊடக தகவல் பெட்டகம்.
இதில் இதுவரை சுமார் 6,000 பதிவு பெற்ற வாசகர்களும் 50,000
மேற்பட்ட வெறும் வாசிப்பு வாசகர்களும் இருக்கலாம் என்று நம்புகிறேன்.
மலேசியா பத்திரிக்கை ஊடக PRINT MEDIA வரவில் இன்று வரை 6 நாளிதழ்களும் சுமார் 10கும் மேற்பட்ட மாத இதழ்களும் இருக்கும் என்று நினைக்கிறேன்!
ஆய்வு கணக்குப படி மொத்தத்தில் ; வார நாட்களில் 500,000 நாளிதழ்களும் 20 ஆயிரம் மாத இதழ்களும் , வார ஞாயிற்றுகிழமைகளில் 700,000 நாளிதழ்களும் திரும்ப பெறாமல் தமிழர்களை சென்று சேர்வதாக தகவல். திரும்பி அதாவது ஞாயிற்று கிழமைகளில் மட்டும் விற்காமல் திரும்புவது 100,000 என்று கணிக்கப்படுகிறது. இது அதிகம் தான்.
ஆக ஒரு நாளைக்கு 500,000 என்று சராசரி என்றாலும் ஒரு மாதத்திற்கு 15,மில்லியன் தமிழ் நாளிதழ்கள் இதன் மொத்த விற்பனை @ 1.30 என்றாலும் ஏறக்குறைய RM 20 மில்லியனை தொடுகிறது.ஒரு வருசத்துக்கு RM 234 மில்லியனை மக்கள் செலவு செய்கிறார்கள். ஆங்கில பத்திரிக்கைகள் விற்பனைக்கு investment என்று பொருள் காரணம் மக்கள் படித்து அறிவு ஆய்வு என்ற முதலீட்டை பெறுகிறார்கள். ஆனால் நமது பத்திரிக்கைகள் எதிர்மாறான செய்திகளில் சவாரி செய்கின்றனர்.நமது பத்திரிக்கை செலவு நேர்த்தியான பயனை தருவதில்லை. இதுகாரம் இந்த சமுதாய சீர்கேடுகளுக்கு பத்திரிக்கைகள் பரிகாரம் காண வில்லை. ஆண்டுக்கு 234 மில்லியனை கொடுத்தும் இந்த சமுதாயத்தை காப்பாற்ற முடியவில்லை. ” இந்து வாரியம் சீனரிடம் போகுமா?”
தமிழ்ப பத்திரிக்கைகள் ஏன் தமிழகளால் குறிப்பாக பணக்கார தமிழர்களிடம் வாங்கும் பழக்கம் இல்லை என்ற சுய ஆய்வில் இறங்கி நேராக பேட்டி வழி ஆராய்ந்த போது ,நமக்கு திடிக்கிடும் தகவல்கள் கிடைத்தது;
அதில் முதல் குற்றம் தமிழ் பத்திரிக்கை செய்திகளால் சமுதாயம் குழம்பி போய் உள்ளதாம். “என பிள்ளைகளிடம் தவறான இன உணர்வை வளர்க்க விரும்பவில்லை “என்ற நல்ல எண்ணமும் உண்டு என்பதில் நமக்கு பெருமைதான்.
இரண்டாவது சமுதாய தலைவர்களிடம் இன உணர்வு இல்லையாம். அரசியல் ஆதங்கம் பிறரை “தலைவர்களை” ஒருத்தரை ஒருவர் தாக்கும் விளமபரச்செய்திகள் அதற்கு எதிர்ப்பும், ஆதரவும் தரும் பிற தலைவர்கள் ஓலமும் வாசகர்களை கடுப்பு ஏத்தி விடுகிறதாம்.
இவங்கள் கொப்பளிப்பது போதாது என்று, சமுதாய உணர்வுகளையும் நமது பண்பாடு நாகரீகம் தாண்டி துப்புவதும் அறுவறுப்பாக உள்ளதாக குறிப்பிடுகின்றனர் தமிழ் படித்த சகிக்க முடியாத பணக்கார கூட்டங்கள்.
சில தமிழ் ஆர்வ ஏழைத தமிழர்களை கேட்டேம் ,விவரமாகத்தான் பதில் சொன்னார்கள்; நாட்டின் தேசிய மேம்பாட்டு செய்திகள் தலைப்பில் வருவதில்லை, அல்லது தமிழர்கள் இனம் சார்ந்த செய்திகள் கொலை, கொள்ளை, அடி தடி, மட்டும் வரும். பத்திரிக்கை விற்க வேண்டும் என்பதிற்காக தமிழ் நாடு மூன்று அல்லது நான்கு பக்க செய்திகள் இங்கு தேவை இல்லையே ! தமிழ் சினிமா ASTRO தொல்லை போதுமே என்றனர்.
இங்கு தமிழர் சார்ந்த எத்தனையோ நிகழ்வுகள் சிறப்பாக நடக்கும் போது தமிழ் சினிமா நடிகர், நடிகையர் திருமண ,காதல் ,விவாகரத்து செய்திகளுக்கு முக்கியம் தந்து நமது நாடு தமிழர் நிகழ்வுகளை ,செய்திகளை காசு கொடுத்து போடும் அவலம் நிருபர்களை அவர்களின் ஊடக தர்மததை கொச்சை படுத்தி விடுகிறது. இதில் தலைவர்களின் ஆவேச, அவதூறு , வேச செய்திகள் மனசாட்சி இன்றி விலை போவதை காண முடிகிறது.
அடுத்து தமிழ் உலக மொழியானது தெரியும். ஆனால் தமிழ் பத்திரிகை உலகம் இன்னும் வணிக மொழி ,வணிக வாய்ப்புகளை, வணிக விளம்பர செய்திகளை, தொழில் நுட்பம் , தொழில்மயம் , தொழில் பேட்டைகள், விவசாயம், வேலை வாய்ப்புகள், career opportunities ,நிபுணத்துவ தொழில்கள், ஏற்றுமதி இறக்குமதி தொடர்புகள், அடிப்படை roar materials
அடைவுகள் போன்ற செய்திகள் குறைந்ததது ஒரு பக்கமாவது வந்தால் நமது பத்திரிக்கைகள் விலைபோகும் தமிழும் உயரும்.
இது பத்தரிக்கை நிர்வாக ஆசிரியர்கள் குறையா ? நிருபர்கள் குறையா? என்ன செய்யலாம்.? என்று அறிவார்ந்த செம்பருத்தி வாசகர்கள் எழுதுங்கள். இது ஒரு புதிய விடியலாக இருக்கட்டும்,சவாலும் சவடாலும் வேண்டாம். பத்திரிக்கைகளும் தவராக யோசிக்க வேண்டாம். இது தமிழ் மொழி ஊடக வளப்பத்துக்கு தேவையான கேள்விதான்?
அதை விடுத்தது இங்கு எழுதும் கட்டுரைகளுக்கு குறை கூறி அற்ப சொறித்தன காலும், கையும் மூக்கும் வைத்து தாக்காமல் கட்டுரை சார்ந்த அல்லது விபரமான எதிர்ப்பை தெளிவா நிருபித்து எழுதுங்கள்.
பிற நாளிதழ்கள் போல இல்லாமல் செம்பருத்தி தன தரம் நினைத்து பொறுப்புடன் எழுதுங்கள். இதிலாவது நமது தமிழ் மொழி, தமிழர் இன தரத்தை நல்ல ஊடகவியல் தன்மையை முன் வைப்போம்.
இதற்குதான் இந்த தலைப்பு ….ஊக்கு விற்பவனுக்கு கூட (கட்டுரை எழுதுபவருக்கு ஆறுதல்) ஊக்குவிப்பு தந்து ஒரு சிறந்த எழுத்து படைப்பாளிகள் வட்டத்தை செம்பருத்தியில் வளர்ப்போம்.
நமது செம்பருத்தி எழுத்தாளர்களின் ,எழுத்தும் ஊடக தெளிவும் இந்த தமிழர் வருங்கால சமூகத்தை வார்த்தெடுக்கும் என்ற நம்பிக்கையில்… தீட்டி திருந்துவோம்!
மலேசிய சைவ சமய பேரவை, 2-வது முறையாக நடத்தும் உலகளாவிய மக்கள் அனைவரும் கலந்து கொள்ளும் சைவ சமய மாநாடு என்பதனை சுருக்கி. மாநாட்டு தலைப்பு வைக்கப் பட்டுள்ளது என்பதனை செம்பருத்தி வாசகர்கள் பெருமக்களுக்கு விளக்குவதற்கு அடியேன் கடமைப் பட்டுள்ளேன்.
திருவள்ளுவர் யாரை வணங்க சொன்னார்? ஆதி தமிழன் யாரை வணங்கி நான்?
திருக்குறளின் முதல் அதிகாரத்தில் வரும் முதல் குறளில் உள்ள “பகவன்” எனும் சொல் திட்டமிட்டு இணைக்கப்பட்ட ஒரு சொல். மதவெறி பிடித்த எவனோ ஒருவன் வள்ளுவனைக் காப்பாற்றுவதாக எண்ணிக்கொண்டு , “பகலன்” எனும் சொல்லைப் “பகவன்”என்று எழுதி வள்ளுவனின் உள்ளத்தை அறியாத பாவியாகிவிட்டான். இதை நம்பிய தமிழர்கள் முதல் அதிகாரத்தை “கடவுள் வாழ்த்து” என்று தவறாக எடுத்துக்கொண்டனர். தமிழ் மதவாதிகளோ அனைவரும் வள்ளுவர் கடவுளைக்குறித்து பாடினார் என்று பிதற்றுகின்றனர். தயவுசெய்து ஒர் இனத்தையே முட்டாளாக்கியது பொதும். இனியாகிலும் வள்ளுவனை , வள்ளுவத்தை வாழவிடுங்கள். அடுத்துவரும் ஒன்பது குறளும் புத்தனை,இயேசுவைப் போன்ற ஒரு அப்பழுக்கற்ற ஆசிரியனைக் குறித்தே (குரு,மாஸ்டர்) பேசுகிறது. நல்ல குருநாதனே மனித குலத்தை கடையேற்ற வல்லவன் என்பதே வள்ளுவனின் எண்ணம். இதைக் கொண்டே வள்ளுவர் சமணத்தவர் என ஒரு சார ர் எண்ணுகின்றனர். அதுவும் தவறே. வள்ளுவர் சமயத்திற்கு,மதத்திற்கு அப்பாற்பட்டே பொதுவாக எழுதியுள்ளார்.அவர் எந்தக் கடவுளையும் குறிக்கவில்லை. வேண்டுமானால் ,இறைவனையே குருவாக உருவகப்படுத்தி எழுதினார் என்று சொல்லிக்கொள்ளுங்கள். அவர்…ஒரு சாமி, திருசாமி,குருசாமி ,நல்ல தமிழ்ச்சாமி என்று வேண்டுமானால் எடுத்துக்கொள்ளுங்கள். தமிழையும் தமிழர்களையும் தயைகூர்ந்து குழப்பாதீர்கள் தமிழ்ப்புலவன்களே!
சரியான தமிழ் என்று தமிழர் பொன் ரங்கன் சொன்னதற்காகச் சொல்கிறேன். “உலகம்” என்பது தமிழ்ச்சொல் அல்ல. அது “லோகம்” எனும் வடமொழியின் தமிழாக்கம். வையம், வையகம் என்பது தமிழ்.
நண்பர் தமிழன்!
நான் வடச்சொல் தமிழ்ச்சொல் என்ற வார்த்தை விவாதம் தவற்றை எழுதவில்லை ! அப்படியாயின் பல நூறு வடமொழி வார்த்தைகள் தமிழில் உண்டு.
உங்கள் கூற்றுப்படி ஆய்வு செய்தால் தமிழ் பத்திரிக்கைகளையும் தமிழ்ப்பள்ளிகளையும் மூடிவிடலாம் ..
அது வேற விசியம் .நான் வாக்கிய பொருள் பிழையை சுட்டினேன். அமாம் உலகம் தமிழ் சொல் அல்ல என்று யார் சொன்னது?
இரண்டாம் உலகம் என்று ஒன்று இல்லை என்பதை சுட்டினேன் ஒன்றாம் ,இரண்டாம் சைவ மாநாடு என்று எழுதல் வேண்டும்.
உலகத்துக்கும் லோகத்துக்கும் என்ன சம்மதம் ..லோகனாதனை உலகநாதனை என்றுதானே எழுதுகிறோம் உலோகநாதன் என்று எழுதினால் minaral ஆகிவிடுமே? தமிழா!
உலகத்துக்கு வடமொழி கலந்த தமிழில் அர்த்தங்கள் பல உண்டு. நடைமுறை தென்னவர்கள் சொல் “உலகம்தான்.” லோகமல்ல !
முடிந்தால் இதற்கும் அர்த்தம் சொல்லுங்கள் :பூமி ,கிரகம் ,கோள்,திரளை,மண்டலம்,உண்டை.தரை ,பூகோளம்,உரண்டை எல்லாம் உலகம் என்றுதான் பொருள் வடமொழி எது எந்த அகராதி? தமிழன்??? எழுதுங்கள் படித்துக்கொள்வோம்.
அனைத்துலகம் என்பதினை உங்கள் வையம் அல்லது வையகம் எப்படி சேர்த்து எழுதும்? எழுதி அனுப்புங்கள் . நல்ல தமிழ் பயிற்சியாக இருக்கட்டும். ஆர்வத்துக்கு நன்றி ..வளர்வோம். தமிழ் வளர்ப்போம்.
ஈபோர் தமிழ் பள்ளி நன்கு வளர்க்கும்,மானியம் கொடுங்கள் வுங்கள் பிள்ளை பரிசு வாங்கும்,நாராயண நாராயண.
தமிழன்,மற்றும் பொன்.ரெங்கன், நலம் தரும் கலந்துரையாடல்!!!.நாளும் தொடரட்டும். வாழ்த்துக்கள்.