அகதிகளின் நிலைதான் என்ன? – தமிழ் அமைப்புகள் கவலை

asylum-seekersஅகதிகளின் உண்மையான நிலையை அறிய அவுஸ்திரேலியாவில் உள்ள அகதிகளுக்காக போராடும் அமைப்புகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தினால், இவர்களின் பிரச்சினைக்கு ஏதேனும் உண்மையான நிலைமைகளை அறிய வாய்ப்புகள் உள்ளது என்று தெரிவிக்கப்படுள்ளது.

அண்மையில் படகு மூலம் வந்த 153 அகதிகள் தொடர்பான உண்மையான நிலைமைகள் தெரியாத நிலையில் இருக்கின்ற காரணத்தால், இவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்பது கூடவும் அராசாங்கத்தால் அறிவிக்கப்படாத காரணத்தால் 153 பேரும் இலங்கைக்கு சென்றிருந்தால் அவர்கள் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் உறவினர்களிடம் ஒப்படைக்கபடுகிறார்களா? இல்லை சிறையில் அடைக்கபட்டு சித்திரவதைக்கு உட்படுத்தபடுகின்றார்களா? என்பதை அவுஸ்திரேலியா அரசுக்கு உண்மையான நிலைமையை அறிவிக்க வேண்டியது பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களின் கடப்பாடாக உள்ளதென தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளது.

தற்போது அவுஸ்திரேலியா அரசாங்கம் இலங்கை ஒரு சமாதானம் மிக்க நாடாக உள்ளது என ஆஸி. பிரதமர் அறிவித்துள்ள நிலையில், இலங்கையில் தமிழர்களுக்கு பிரச்சினை இருக்கின்றது என்பதை அவுஸ்திரேலியா வாழ் மக்களுக்கு நிருபிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

உண்மையான நிலைமையை அறிவதற்காக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை அவுஸ்திரேலியாவில் உள்ள செஞ்சிலுவை சங்கத்திற்கோ அல்லது அவுஸ்திரேலியா வாழ் தமிழ் அமைப்புகளுக்கோ அறிவிக்கும்படி அவுஸ்திரேலியா தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளது.

காரணம் அவுஸ்திரேலியா அரசாங்கம் கூறுவது போல் இலங்கையில் தமிழர்களுக்கு சரியான பாதுகாப்பு இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

ஆகவே இவர்களின் உறவினர்களை இவர்களுடைய சரியான அடையாளத்தை உறுதிப்படுத்தி அவுஸ்திரேலியாவில் உள்ள இந்த அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளும்படி தமிழ் அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.

TAGS: