இலங்கை படையதிகாரிகள், அமெரிக்கத் தூதுவர் மற்றும் இராஜதந்திரிகளை சந்திக்கக்கூடாது!– கோத்தபாய உத்தரவு

katabaya-sisonதாம் உடனிருக்கும் போது மாத்திரம் அமெரிக்க தூதுவர் மிச்செல் ஜே சிசனை சந்திக்க முடியும் என்று இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, தமக்கு கீழ் இயங்கும் இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் நிறுவன தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தமது பிரசன்னமில்லாமல் கோத்தபாய ராஜபக்சவை சந்திக்க யுஎஸ்எய்ட் நிறுவன தலைவருக்கு அமெரிக்க தூதுவர் சிசன் அனுமதி மறுத்தநிலையிலேயே கோத்தபாய இவ்வாறான மாற்று உத்தரவை பிறப்பித்துள்ளார்.

உள்ளுர் தேர்தல் தொடர்பில் அமெரிக்கா அறிவித்துள்ள தெளிவாக்கல் செயற்திட்டம் தொடர்பில் கலந்துரையாட கோத்தபாய ராஜபக்ச, யுஎஸ்எய்ட் நிறுவன தலைவரை நேற்று முன்தினம் இரவு அழைத்திருந்தார்.

எனினும் அமெரிக்க தூதுவர் இன்று தம்மால் இந்த சந்திப்புக்கு வர முடியாது என்று யுஎஸ்எய்ட் நிறுவன தலைவர் தரப்பில் இருந்து பாதுகாப்பு அமைச்சுக்கு பதில் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நேற்று முதல் இலங்கை படைத்தரப்பினர் அமெரிக்க அதிகாரிகள் உட்பட்ட ஏனைய நாட்டு இராஜதந்திரிகளை வடக்கு கிழக்கில் வைத்து சந்திப்பதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கோத்தபாய அறிவித்துள்ளார்.

ஐ.நா விசாரணைக்குழு முன்னாள் சிரேஸ்ட இராணுவ அதிகாரிகளிடம் சாட்சியம் பெற்றுக் கொள்ள முயற்சி!

sl_army_soldiersஐக்கிய நாடுகள் விசாரணைக்குழு, முன்னாள் சிரேஸ்ட இராணுவ அதிகாரிகளிடம் சாட்சியங்களைப் பெற்றுக்கொள்ள முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் போர் இடம்பெற்ற காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அரசாங்கப் படையினரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சர்வதேச சட்ட மீறல்கள் மற்றும் போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்தும் ஐநா விசாரணைக்குழு இவ்வாறு சாட்சியம் பெற்றுக்கொள்ளவுள்ளது.

அரசாங்கத்தினால் கட்டாய ஓய்வு வழங்கப்பட்ட முன்னாள் சிரேஸ்ட இராணுவ அதிகாரிகளை விசாரணைகளில் இலங்கைக்கு எதிராக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கப்படுவதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் பத்து முன்னாள் இராணுவ அதிகாரிடம் சாட்சியம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இந்த அதிகாரிகள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த இராணுவ அதிகாரிகள் வன்னிப் போரில் பங்கேற்றவர்கள் அல்ல எனவும் ஒரே ஒரு படையதிகாரி மட்டும் யாழ்ப்பாணத்தில் கடமையாற்றியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதில் ஒர் அதிகாரி ஏற்கனவே இராணுவத்திற்கு எதிராக சத்தியக்கடதாசியொன்றை விசாரணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளார்.

எதிர்வரும் 7ம் திகதி ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழு,  விசாரணைப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கவுள்ளது.

TAGS: