புலிகளின் தலைவர்களை தப்பிக்க விடாததனாலேயே மேற்குலக நாடுகள், மஹிந்தவை பழிதீர்க்க முயற்சி!- டளஸ்

dallasLTTE இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உட்பட இயக்கத்தின் முதல்மட்ட தலைவர்களை இறுதி யுத்தத்தின் போது தப்பிச் செல்ல அனுமதி அளிக்காத காரணத்தாலேயே மேற்குலக நாடுகள், மஹிந்த ராஜபக்சவை பழி தீர்க்க முயற்சிப்பதாக இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அலகப்பெரும தெரிவித்தார்.

கட்டுகஸ்தோட்டையில் நேற்று மாலை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் உரையாற்றிய அவர்,.

2005ஆம் ஆண்டு 183,000ம் வாக்குகளால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெற்றி பெற்றிருக்காவிடின் இந்த நாடு இப்போது எங்கே இருந்திருக்கும் என்று மக்கள் சிந்திக்க வேண்டும்.

மஹிந்த ராஜபக்ச இன்று தேசிய தலைவர் மட்டுமல்ல அவர் ஒரு சர்வதேச தலைவராக ஆகியுள்ளார்.

பஹ்ரேன், பலஸ்தீன், பொலிவியா போன்ற நாடுகளுக்கு சென்ற போது அதி உயர் விருதுகளை வழங்கினார்கள்.

இலங்கை வரலாற்றில் இவர் போன்று ஒரு தலைவர் உருவாகி உள்ளாரா என்று நாங்கள் எங்களையே கேட்டுக் கொள்ள வேண்டும்.

இறுதி யுத்தம் இடம்பெற்ற போது பிரபாகரன், உட்பட முதல் மட்ட தலைவர்களை தப்பிக்க வைக்க மேற்கத்திய உலகம் பாரிய முயற்சிகளை எடுத்தது.

அதற்காக முல்லைத்தீவை அண்மித்த கடலில் யுத்த கப்பல்களை நிறுத்தி வைத்திருந்தனர்.

இவர்கள் எல்ரீ.ரீ.ஈயினருக்கு உறுதி அளித்திருந்தார்கள் எவ்வாறாவது தலைவர்களை இறுதி நேரத்தில் காப்பாற்றுவதாக. அவர்களுக்கு அது முடியாது போனது.

நீங்கள்தான் எங்கள் தலைவர்களை கொலை செய்வதற்கு காரணமாக இருந்தீர்கள் என்று தமிழ் டயஸ்போரா மேற்கத்திய உலகத்தை குற்றம் சாட்டுகிறது

இதன் காரணமாகத்தான் இவ்வளது கஷ்டங்களை அவர்கள் எமது நாட்டுக்கு கொடுக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.

TAGS: