இலங்கை, சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தக் கோரிக்கையை ஐக்கிய நாடுகளின் இணை பேச்சாளர் பர்ஹான் ஹக் விடுத்துள்ளார்.
மனித உரிமைகள் விடயத்தில் இலங்கை உள்ளக முனைப்புகளை தீவிரப்படுத்த வேண்டும். போருக்கு பின்னர் ஏற்பட்டுள்ள சவால்களை ஐக்கிய நாடுகள் சபை அறிந்துள்ளது.
எனவே அவற்றை வெற்றிக்கொள்வதற்கு சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புகளை இலங்கை அரசாங்கம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஹக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் மனித உரிமைகள் குற்றச்சாட்டு தொடர்பில், சர்வதேசத்துடன் ஒத்துழைக்க முடியாதென இலங்கை அரசாங்கம் தெரிவித்து வருகின்மை குறிப்பிடத்தக்கது.