மீண்டும் வெடித்துள்ள வெள்ளைக்கொடி சர்ச்சை

vanni_04போரின் இறு­திக்­கட்­டத்தில் இடம்­பெற்ற வெள்­ளைக்­கொடிச் சம்­பவம் மீண்டும் உலக அரங்கில் பேசப்­படும் விவ­கா­ர­மாக மாறி­யுள்­ளது.

போரின் போது இலங்­கையில் இடம்­பெற்ற மீறல்கள் குறித்து விசா­ரிக்க நிய­மிக்­கப்­பட்­டுள்ள, 13 பேர் கொண்ட ஐ.நா. விசா­ரணைக் குழு, தமது விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்ள நிலையில், தான் இந்த விவ­காரம் மீண்டும் ஊட­கங்­களில் முன்­னி­லைக்கு வந்­தி­ருக்­கி­றது.

போரின் இறு­தி­நா­ளான, 2009 மே 18ஆம் திகதி அர­சாங்­கத்­துடன் ஏற்­ப­டுத்திக் கொள்­ளப்­பட்ட ஒரு இணக்­கப்­பாட்டின் அடிப்­ப­டையில், வெள்­ளைக்­கொ­டி­யுடன் சர­ண­டையச் சென்ற விடு­தலைப் புலி­களின் முக்­கிய உறுப்­பி­னர்கள் கொல்­லப்­பட்­டமை அல்­லது காணா­மற்­போன விவ­காரம், கடந்த ஐந்து ஆண்­டு­க­ளாக அர­சாங்­கத்­துக்குப் பெருந்­த­லை­வ­லியை ஏற்­ப­டுத்தி வந்­தி­ருக்­கி­றது.

அவ்­வப்­போது இந்த விவ­கா­ரத்­துடன் தொடர்­பு­டைய, ஒளிப்­ப­டங்கள், வீடி­யோக்கள் மற்றும் தக­வல்கள் வெளி­யாகி பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி வந்­துள்­ளன.

vanni_tamilsஅது­போ­லவே, இந்தச் சம்­பவம் தொடர்­பாக வெளி­யான விசா­ரணை அறிக்­கைகள் மற்றும் முன்­னுக்குப் பின் முர­ணாக வெளி­யி­டப்­பட்ட அர­ச­த­ரப்பு அறிக்­கைகள் எல்­லாமே இந்த விவ­கா­ரத்தின் பின்னால் உள்ள கேள்­வி­களை வலுப்­ப­டுத்தி வந்­துள்­ளன.

அதிலும், இந்தச் சம்­ப­வத்­துடன், அர­சாங்­கத்தின் உயர்­மட்டத் தலை­வர்கள் தொடர்­பு­பட்­டுள்­ளது பற்­றிய குற்­றச்­சாட்­டுகள் தான், இந்த விவ­கா­ரத்தை இன்னும் தீவி­ர­மான கட்­டத்­துக்கு கொண்டு சென்­றி­ருப்­ப­துடன், அர­சாங்­கத்­துக்குத் தலை­வ­லி­யா­கவும் அமைந்து விடு­கி­றது.

கடந்த வாரம், சர்­வ­தேச விசா­ர­ணை யால் இலங்கை மீதான அழுத்­தங்கள் அதி­க­ரிப்­பது குறித்து ஏ.பி. எனப்­படும் அசோ­சி­யேட்டட் பி ரஸ் வெளி­யிட்ட ஒரு கட்­டுரை உலகின் பெரு­ம­ளவு ஊட­கங்­க ளால் பிர­சு­ரிக்­கப்­பட்­டி­ருந்­தன.

அந்தச் செய்திக் கட்­டு­ரையில், சர்­வ­தேச விசா­ரணை குறித்த அழுத்­தங்கள் பற்றி ஆரா­யப்­பட்­டதை விட, வெள்ளைக் கொடி விவ­கா ரம் குறித்தே கூடுதல் அக்­கறை காட்­டப்­பட்­டி­ருந்­தது.

அது­பற்றி விலா­வா­ரி­யாக விப­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது. இது, வெளி­யு­ல­கினால், இந்த விவ­காரம் எவ்­வாறு பார்க்­கப்­ப­டு­கி­றது எந்­த­ள­வுக்கு முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­ப­டு­கி­றது என்­ப­தற்கு ஒரு உதா­ரணம்.

அந்தக் கட்­டு­ரையை எழு­திய மத்யூ பென்­னிங்டன், ஏ.பி.யின் கொழும்பு செய்­தி­யா­ள­ராக இருந்­தி­ருந்தால், இந்­த­ள­வுக்கு முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­பட்­டது குறித்து அவ்­வ­ள­வாக கரி­சனை கொள்ள வேண்­டி­ய­தில்லை.

அவர் வாஷிங்­டனில் இருக்கும் ஒரு ஆய்­வாளர் என்­பதால், இதன் பெறு­மானம் அதி­க­ரித்­துள்­ளது. சர்­வ­தேச விசா­ரணை என்று வரும் போது, வெள்­ளைக்­கொடிச் சம்­ப­வத்­துக்கு அதிக முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­படும் என்­பதை இது­போன்று வெளியில் இருந்து, கவ­னிப்­ப­வர்கள் காட்டும் முக்­கி­யத்­து­வத்தைக் கொண்டே கணிப்­பிட முடி­கி­றது.

அதே­வேளை, சர்­வ­தேச விசா­ரணை குறித்து குசும்புச் செய்­தி­களை வெளி­யி டும் சிங்­கள ஊட­கங்­களும் கூட, முத­லா ­வ­தாக, வெள்­ளைக்­கொடிச் சம்­பவம் குறித்தே, ஐ.நா. விசா­ர­ணைக்­குழு ஆரா­ய­வுள்­ள­தாக செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

போரின் இறுதி ஏழு ஆண்­டு­களில் எண்­ணற்ற மனித உரிமை மீறல்கள் இடம்­பெற்­றி­ருந்­தாலும், இறுதி நாளன்று அரங்­கே­றிய வெள்­ளைக்­கொடிச் சம்­பவம் அதில் முக்­கி­ய­மா­ன­தா­கவே பார்க்­கப்­ப­டு­கி­றது. இது தான் அர­சாங்­கத்­துக்குச் சிக்­கலை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

vanniஅர­சாங்கம் சுதந்­தி­ர­மான உள்­நாட்டு விசா­ரணை ஒன்­றையோ, சர்­வ­தேச விசா­ரணை ஒன்­றையோ நிரா­க­ரித்து வரு­வ­தற்கு, இந்த வெள்­ளைக்­கொடிச் சம்­ப­வமும் ஒரு காரணம்.

இந்தச் சம்­பவம் ஒன்று நிகழ்ந்­தி­ராது போயி­ருந்தால், அல்­லது இந்தச் சம்­ப­வத்­துடன் அர­சாங்க உயர்­மட்­டத்­தினர் தொடர்­பு­ப­டாது போயி­ருந்தால், அல்­லது இது­பற்­றிய தக­வல்கள் வெளி­வ­ராமல் போயி­ருந்தால், ஒரு வேளை, அர­சாங்கம் சர்­வ­தேச விசா­ர­ணையை நிரா­க­ரித்­தி­ருந்­தாலும் கூட, நம்­ப­க­மான, சுதந்­தி­ர­மான உள்­நாட்டு விசா­ர­ணைக்கு இணங்­கி­யி­ருக்கக் கூடும்.

அதே­வேளை, வெள்­ளைக்­கொடிச் சம்­பவம் ஐ.நா. விசா­ர­ணையில் முக்­கி­ய­மா­ன­தொரு கட்­ட­மா­கவே இருக்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை. ஏனென்றால், இது ஒன்றும், சாட்­சி­யங்­களோ, ஆதா­ரங்­களோ இல்­லாத ஒன்று அல்ல.

அதை­விட, இத­னுடன் தொடர்­பு­டைய நபர்கள், முக்­கிய பிர­மு­கர்­க­ளா­கவும் இருப்­பதால், இந்த விவ­கா­ரத்தில் கூடுதல் முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­படும்.

அதா­வது விடு­தலைப் புலி­களின் அர­சியல் தலை­வர்கள் நடேசன், புலித்­தேவன் உள்­ளிட்டோர், சர­ண­டைந்த பின்னர், சட­லங்­க­ளாக காட்­டப்­பட்­டதும், அர­சாங்­கத்தின் பொது­மன்­னிப்பு அழைப்பின் பேரில், சர­ண­டைந்த 100இற்கும் அதி­க­மான புலி­களின் முக்­கி­யஸ்­தர்கள், மற்றும் அவர்­களின் குடும்­பத்­தினர் காணா­மற்­போ­னதும், இறுதிப் போரின் மர்­மங்கள் சூழ்ந்த விவ­கா­ரங்களா­கவே இருந்து வரு­கின்­றன.

இவ்­வாறு சர­ண­டைந்­த­வர்கள், சிலர் உயி­ருடன் பிடித்து வைக்­கப்­பட்­டுள்ள வீடியோ, ஒளிப்­பட ஆதா­ரங்கள் வெளி­யான நிலை­யிலும், சர­ண­டைந்­த­தற்கு சாட்­சி­யான அவர்­களின் குடும்­பத்­தினர் பலரும் உள்ள நிலை­யிலும், இது அர­சாங்­கத்­துக்கு சிக்­க­லையே ஏற்­ப­டுத்தும்.

mullivaikkal-300x173தாம் படை­யி­ன­ரிடம், ஒப்­ப­டைத்த தமது பிள்­ளைகள், கண­வ­னுக்கு என்ன நடந்­தது? என்று அவர்­களின் பெற்றோர் அல்­லது மனைவி, பிள்­ளைகள், நல்­லி­ணக்க ஆணைக்­குழு, காணா­மற்­போனோர் குறித்து விசா­ரிக்கும் ஜனா­தி­பதி ஆணைக்­குழு ஆகி­ய­வற்றின் முன்­பாக, சாட்­சி­யங்­களை அளித்­துள்­ளனர்.

எனவே, வெள்­ளைக்­கொடிச் சம்­பவம் என்­பது தனியே நடேசன். புலித்­தேவன் ஆகி­யோ­ருடன் மட்டும் தொடர்­பு­டைய ஒரு விவ­கா­ர­மாக மட்டும் மட்­டுப்­ப­டுத்­தப்­படப் போவ­தில்லை.

அது போரின் இறுதி நாட்­களில் காணா­மற்­போன, அல்­லது மர்­ம­மான முறையில் கொல்­லப்­பட்ட புலி­களின் தலை­வர்கள், பொறுப்­பா­ளர்கள் பற்­றிய ஒட்­டு­மொத்த  விசா­ர­ணை­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தா­கவே அமையப் போகி­றது.

தென்­னா­பி­ரிக்க சட்ட நிபு­ணரும், பான் கீ மூன் நிய­மித்த ஐ.நா. நிபுணர் குழுவில் இடம்­பெற்­றி­ருந்­த­வ­ரு­மான யஸ்மின் சூகா அண்­மையில் வெளி­யிட்ட ஒரு அறிக்­கையில், இந்தச் சம்­பவம் குறித்து விரி­வாக ஆரா­யப்­பட்­டுள்­ள­துடன், காணா­மற்­போன, அல்­லது கொல்­லப்­பட்ட சுமார் 143 பேரின் பெயர் விப­ரங்­களும் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன.

இந்த ஆவ­ணமும் கூட, ஐ.நா. விசா­ரணைக் குழுவின் முக்­கி­ய­மான விசா­ரணைச் சான்­றாக அமை­ய­வுள்­ள­தாகத் தக­வல்கள் கூறு­கின்­றன.

இந்த வெள்­ளைக்­கொடிச் சம்­ப­வத்தை அர­சாங்கம் ஒரு­போதும் நடக்­க­வில்லை என்றே மறுத்து வந்­துள்­ளது.

ஆனால், அதன் முன்­னுக்குப் பின் முர­ணான கருத்­து­களும், ஆளா­ளுக்கு கூறிய வெவ்­வேறு தக­வல்­களும், அவ்­வப்­போது வெளி­யான ஆதா­ரங்­களும் இந்த விவ­கா­ரத்தை அவ்­வ­ளவு சுல­ப­மாக மறைப்­ப­தற்கு இட­ம­ளிக்­க­வில்லை.

வெள்­ளைக்­கொடிச் சம்­பவம் உள்­ளிட்ட இறுதிப் போர்க்­கா­லத்தில் எடுக்­கப்­பட்ட வீடி­யோக்கள், ஒளிப்­ப­டங்­களை ஆராய்­வ­தற்­கா­கவே – ஐ.நா. விசா­ர­ணைக்­கு­ழுவில் தட­ய­வியல் நிபு­ணர்­களும் சேர்க்­கப்­பட்­டுள்­ளனர்.

எனவே, சனல் 4 உள்­ளிட்ட ஊட­கங்­களில் வெளி­யான காட்­சிகள், உண்­மை­யா­னவை தானா என்று அர­சாங்­கத்­தினால், எழுப்­பப்­பட்ட சந்­தே­கங்கள் அனைத்­துக்கும், ஐ.நாவின் இந்த விசா­ரணை அறிக்கை தெளி­வான முடிவு ஒன்றைத் தரும் என்று உறு­தி­யாக நம்­பலாம்.

அதற்குப் பின்­னரும், இலங்கை அர­சாங்­கத்­தினால், அவை பொய்­யா­னவை போலி­யா­னவை திரி­பு­ப­டுத்­தப்­பட்­டவை என்று கூறவும் முடி­யாது.

அவ்­வாறு கூறினால் அதனை உலகம் ஏற்கப் போவதும் இல்லை.

இந்த வெள்­ளைக்­கொடிச் சம்­பவம் பற்றி வெளி­யான ஒளிப்­பட, வீடியோ ஆதா­ரங்கள் அனைத்­துமே, உண்­மை­யா­னவை என்று விசா­ர­ணையில் நிரூ­பிக்­கப்­ப­டு­மானால், போரின் இறு­திக்­கட்­டத்தில், சர­ண­டைந்த பின்னர், பலரும் கொல்­லப்­பட்­ட­தாக கூறப்­படும் குற்­றச்­சாட்டு நிரூ­ப­ண­மாகும்.

ஏனென்றால், பின்னர், சட­ல­மாக காணப்­பட்ட இசைப்­பி­ரியா, கேணல் ரமேஸ், புலி­களின் திரு­கோ­ண­மலை மாவட்ட தள­ப­தி­யாக இருந்த உதயன் உள்­ளிட்ட பலரும், உயி­ரோடு தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த காட்­சி­களும் வெளி­யா­கி­யுள்­ளன.

அது­போ­லவே, புலி­களின் முக்­கி­யஸ்தர் பால­கு­மா­ரனும் அவ­ரது மகனும் மரம் ஒன்றின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்ட காட்­சி­களும் வெளி­வந்­தி­ருந்­தன.

ஆனால், இவர்கள் போரில் கொல்­லப்­பட்­ட­தா­கவே அர­சாங்கம் கூறி வந்­துள்­ளது.

அது­போ­லவே, நடேசன், புலித்­தேவன் போன்­ற­வர்கள், சர­ண­டைய வந்த போது, பின்­பு­ற­மாக இருந்து புலி­க­ளா­லேயே சுட்டுக் கொல்­லப்­பட்­ட­தாக முன்னர் கூறி­யி­ருந்தார், அப்­போ­தைய வெளி­வி­வ­காரச் செய­லாளர்.

இப்­போது ஐ.நாவில் தூது­வ­ராக இருக்கும் அவர், கடந்­த­வாரம் ஏபிக்கு அளித்த பேட்­டியின் போது, என்ன நடந்­தது என்று தனிப்­பட்ட முறையில் தனக்குத் தெரி­யாது என்று கூறி­யி­ருக்­கிறார்.

ஆனால், எவ்­வாறு சர­ண­டை­வது என்று ஐரோப்பிய இடைத்தரகர் மூலம் தாம் புலிகளுக்கு குறுந்தகவல் அனுப்பியதை அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

அதனை அவரால் நிராகரிக்க முடியாது, ஏனென்றால், அதற்கான ஆதாரங்கள் ஏற்கனவே, இந்த விவகாரத்தில் இடைத்தரகராகச் செயற்பட்டவர்களில் ஒருவரும், சிரியாவில் கொல்லப்பட்டவருமான ஊடகவியலாளர் மேரி கொல்வின் உள்ளிட்டவர்களால் பகிரங்கப்படுத்தப்பட்டிருந்தன.

எனினும், சரணடைதல் தொடர்பாக ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்பாடு பற்றித் தனக்குத் தெரியாது என்று சாதிக்க முனைகிறார் அவர்.

எவ்வாறாயினும், இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தால், அது அரச உயர்மட்டத்தில் உள்ளவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

ஐ.நாவின் இந்த விசாரணையில் முக்கிய இடம் வகிக்கப்போகும், வெள்ளைக்கொடிச் சம்பவம் பற்றிய உண்மைகள் வெளிவரும் போது, அது அரசாங்கத்துக்கு வெளியுலகில் இன்னும் பல புதிய சிக்கல்களை உருவாக்கலாம் என்பதை ஏபி வெளியிட்ட கட்டுரையில் குறிப்புணர்த்தப்பட்டுள்ளதை அலட்சியம் செய்ய முடியாது.

– சுபத்ரா

TAGS: