புலிகளால் கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் தொடர்பாக இன்று அதிகளவு முறைப்பாடுகள்!

karathuraiகாணாமற்போனவர்களை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் 3ம் நாள் அமர்வுகள் முல்லைத்தீவு- கரைதுறைப்பற்று பிரதேச செயலர் அலுவலகத்தில் நடைபெற்றிருக்கும் நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் தொடர்பாக அதிகளவு முறைப்பாடுகள் ஆணைக்குழுவிற்கு முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

மேற்படி ஆணைக்குழு கடந்த 2 தினங்களாக முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் விசாரணைகளை மேற்கொண்டிருக்கும் நிலையில் இன்றைய தினம் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் அலுவலகத்தில் நடைபெற்ற 3ம் நாள் அமர்வின் போது 61பேர் சாட்சியமளிப்பதற்காக அழைக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் 40 பேர் வரையில் கலந்து கொண்டு சாட்சியங்களை வழங்கியிருந்தனர்.

இந்நிலையில் 2007,2008 2009ம் ஆண்டுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் வலுக்கட்டாயமாக பிடிக்கப்பட்டு பின்னர் கா ணாமல்போனதாகவே முழுமையான முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாட்சியங்களின் போது,

விடுதலைப் புலிகளினால் வீட்டுக்கு ஒருவர் போராட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என்பதற்க மைவாக வீட்டிலிருந்தவர்களை, விடுதலைப் புலிகள் ஆயுதங்களை காண்பித்தும், தமக்கு அடித்தும் தங்கள் பிள்ளைகளை கொண்டு சென்றதாக மக்கள் சாட்சியமளித்துள்ளதுடன், அதன் பின்னர் அவர்கள் காணாமல்போயுள்ளதாக சாட்சியம் வழங்கியிருக்கின்றனர்.

மேலும் இவ்வாறு காணாமல்போனவர்கள் பலர் போர் 2009ம் ஆண்டு நிறைவடைந்ததன் பின்னர் பi டயினரின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த ஓமந்தை மற்றும் வட்டுவாகல் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்தi மயினை உறவினர்கள் கண்டுள்ளதாகவும், சாட்சியமளித்திருந்த மக்கள் தங்கள் சாட்சியின்போது குறிப் பிட்டுச் சொல்லியிருக்கின்றனர்.

இன்றைய தினம் முழுவதுமான தமிழீழ விடுதலைப் புலிகளினால் வலிந்து சேர்க்கப்பட்டவர்கள் பின்னர் காணாமல்போனமை தொடர்பாகவே அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. என்பதுடன், கடுமையான ஷெல் வீச்சுக் காரணமாக தங்கள் இருப்பிடங்களை விட்டு அவசர அவசரமாக வெளியேறும் போது உறவினர்களையும், பிள்ளைகளையும் கைவிட்டுச் சென்றவர்கள் தொடர்பான சாட்சியங்களும் இன்றைய தினம் வழங்கப்பட்டிருக்கின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.

 

TAGS: