மலையகத்தில் சிறுவா் உரிமை மீறல்கள் மரணிக்க வேண்டும்

malaiyangam_children_001பள்ளி செல்லும் வயதில் பல்வேறு விதமான இன்னல்களுக்கு முகங்கொடுத்து மரணித்துக்கொண்டிருக்கும் 200 மில்லியனுக்கு மேற்பட்ட அதிகமான சிறுவர்கள், சிறுவர் தொழிலாளர்களாக அமர்தப்படுவதனால், அச்சிறுவர் உடல், உள மற்றும் உணர்வு ரீதியாக பாதிக்கப்படுகின்றனர்.

குடும்ப வறுமையிலிருந்து தப்பி உயிர் பிழைக்க அவர்களது பெற்றோரே சிறுவர்களை இவ்வாறு வேலைக்கமர்த்தப்பட காரணமாக உள்ளனர் என்று, கொழும்பு, வசன்தா வீதி என்ற இடத்தில் உள்ள வீடோன்றில் சிறுவர் தொழிலாளியாக சென்று பல சித்திரவதைகளுக்கும், வன்முறைகளுக்கும் உள்ளான, பொகவந்தலாவை, கிலனுஜளி தோட்டத்தை சேர்ந்த மனோகரன் கீர்த்திகா என்பவர் குறித்து மனித அபிவிருத்தி தாபன கள ஒருங்கிணைப்பாளர் திரு. ஆர். நடராஜா அவர்கள் கருத்து தெரிவித்தார்.

மேலும், அவர் கருத்து தெரிவிக்கும் போத,

பாதிக்கப்பட்ட மேற்படி மனோகரன் கீர்த்திகா தோட்ட தொழிலாளிகளாகிய வேலு மனோகரன், விஜயகுமாரி ஆகியோரின் மகளாவார். இவரை தோட்ட கண்காணிப்பாளர் ஒருவரினால் கொழும்பில் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.

ஆனால் தான் வேலை செய்த காலங்களில் அவருக்கு பல சித்திரவதைகள் அந்த வீட்டு முதலாளியினால் ஏற்பட்டுள்ளது. இவ்விடயத்தை தனது பெற்றோரிடம் கூறியும் அவர்கள் கவனத்தில் எடுத்துகொள்மையினால், இன்று இப்பிள்ளை பாரிய இழப்புகளுக்கு உள்ளாகியுள்ளார். உடல், உள ரீதியான அனேகமான பாதிப்புக்களை சந்தித்துள்ளார்.

மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் தான் வேலை செய்த வீட்டுக்கு அருகில் திருத்த வேலைகளில் ஈடுபட்டிருந்தவர்களிடம் தான் படும் கஷ்டங்களை கூறியதன் பின்னர், அவர்கள் வெள்ளவத்தை பொலீஸ்நிலையத்திற்கு முறைபாடுகளை செய்தனர்.

பின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, அந்த வீட்டு முதலாலியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து வைத்திய சிகிச்சையின் பின்பு கொழும்பு நீதிமன்றம் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை செய்ததோடு, ஒரு மாத சம்பளத்தை பெற்றுக்கொடுத்து, வேலைக்கு அமர்த்தியவர்களை எச்சரித்து கீர்த்திகா பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக நியாயமான தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதற்காக, மனித உரிமைகள் ஆணைக்குழு, சிறுவர் பாதுகாப்புச்சபை, சிறுவர் நன்னடத்தை பிரிவு, பொகவந்தலாவ, ஹட்டன், அம்பகமுவ பிரதேச செயலகம் ஆகியோருக்கு மனித அபிவிருத்தி தாபனம் முறைப்பாடுகளை செய்துள்ளது.

அத்தோடு இச்சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, தொழில் திணைக்களம் ஆகிய அமைப்புக்களுக்கு மனித அபிவிருத்தி தாபனம் செய்துள்ள முறைப்பாட்டினைக் கருத்திற்கொண்டு அவர்களும் இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளைத் துரிதமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எனவே பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்களை மேற்படி விசாரணைகளுக்கு அழைத்து சென்று அவர்களுக்கு நியாயமான தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதற்கான சகல ஒத்துழைப்பையும், வழிகாட்டல்களையும், ஆலோசனைகளையும் மனித அபிவிருத்தி தாபனம் வழங்கி வருவதுடன் மேலும் இது சம்பந்தமாக தொடர்ந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.

சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான பிரசாரம் என்ற தொணிப்பொருளில் மக்கள் மத்தியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக கண்டி மாவட்டம் மற்றும் நுவரெலியா மாவட்ட மஸ்கெலிய, ஹட்டன், பொகவந்தலாவ, நோர்வூட், அக்கரப்பத்தனை போன்ற பிரதேசங்கள், கேகாலை, தெரணியாகலை போன்ற பிரதேசங்களில் பதாதைகளும், துண்டுப்பிரசுர விநியோகம், சுவரொட்டிப் பிரசாரம் ஆகியவற்றின் மூலமாக மக்களை, சிறுவர்களை விழிப்புணர்வுப் படுத்தும் நிகழ்வுகளை மனித அபிவிருத்தி தாபனம் ஏற்பாடு செய்துள்ளது.

அத்தோடு மலையகப் பிரதேசங்களில் சிறுவர்கள் விருப்புக்கு மாறாக சிறுவர், சிறுமிகளின் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை மறுக்கப்பட்ட நிலையில் நகர்ப்புறச் செல்வந்தர்களின் வீடுகளிலும் விற்பனை நிலையங்களிலும் தொழிற்சாலைகளிலும் தொழில்களில் அமர்த்தப்படும் சிறுவர்கள் துன்புறுத்தப்படுவதுடன் சிலவேளைகளில் மர்மமான முறையில் இறந்தும் விடுவது இலங்கையில் சிறுவர் உரிமைகள் வரலாற்றில் கவலை தரும் நிகழ்வுகளாக தொடர்ந்து கொண்டு இருக்கின்றது.

இவ்வாறான பிரச்சினைகள் நடைபெறாமல் இருப்பதற்காக மனித அபிவிருத்தி தாபனம் சட்ட ஆலோசனை, பிரசாரம், சட்ட ரீதியான உதவி என்பவற்றையும் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

TAGS: