150 இலங்கை தமிழருடன் இன்னொரு கப்பல் நிற்கிறது!

REFUGEEBOATஇலங்கைக்கு அவுஸ்திரேலியா திருப்பியனுப்பிய புகலிடக்கோரிக்கையாளர்கள் 41 பேரும் சட்டவிரோத பயணத்தை மேற்கொள்வதற்கு உதவியவர்களில், விசேட அதிரடிப்படையை சேர்ந்த  ஓருவரும் உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நபர் சட்ட விரோத குடியேற்ற வாசிகளை தடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இது இலங்கை அரசாங்கத்திற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தும் விடயமாக அமைந்துள்ளது.

எனினும் அவர் .இரண்டாவது சந்தேக நபர்தான், முக்கிய குற்றவாளி  படகு உரிமையாளர் ஒருவர், அவர் மீன்பிடித்தொழில் ஈடுபட்டிருக்க வேண்டும்  என  அவர்களுக்காக  வாதாடும்  சட்டத்தரணி எபா அருண சாந்த தெரிவித்துள்ளாh.

இதேவேளை சுஜீவ சப்ரமாது என்ற பெண்மணி தனது கணவரே இந்த ஆட்கடத்தலில் முக்கிய குற்றவாளி என இலங்கை அதிகாரிகளால் குற்றம் சுமத்தப்பட்டு  உள்ளதாகவும்,விசேட அதிரடிப்படை உறுப்பினரின் பெயர் மகேஸ் இந்திகா எனவும் தெரிவித்துள்ளார்.

~~அவருக்கு 30 வயதிருக்கும், அவர் தனது குழந்தையையும் படகில் கொண்டு வந்தார், நாங்கள் புறப்பட ஆரம்பித்த வேளை அந்த குழந்தைக்கு 4 வாரங்கள் தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.; அவர் ஏன் இலங்கையிலிருந்து தப்பியோட முயன்றார்; என கேட்டதற்கு ~~ அவருக்கு அரசியல் பிரச்சினைகள் உள்ளன என அந்த பெண்மணி தெரிவித்தார்.

தங்களுடைய நோக்கம் நியுசிலாந்தை சென்றடைவதே எனவும், நாங்களே இதனை ஏற்பாடு செய்தோம், ஏனைய பயணிகளை ஏற்பாடு செய்தோம்,நியுசிலாந்து செல்ல முடியும் என நினைத்தோம், அவுஸ்திரேலியாவிற்கு ஒரு போதும் செல்ல விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அவுஸ்திரேலிய வானொலிக்கு பேட்டியொன்றை வழங்கிய பின்னர் நான் அதிகாரிகளால் துன்புறுத்தல்களிற்கு உள்ளானேன் இதன் காரணமாக நியுசிலாந்து போன்ற வேறு ஒரு நாட்டிற்கு – பொருளாதார ரீதியாக சிறந்த வாய்புகளை வழங்க கூடிய நாட்டிற்கு செல்வதே சிறந்தது என கருதினோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இரண்டு வார கடற்பயணத்திற்கு பின்னர் எங்களால் அங்கு சென்றடைய முடியாது என்பதை உணர்ந்தோம், இதன் பின்னர் நியுசிலாந்து அதிகாரிகளை செய்மதி தொலைபேசியில் அழைத்து எங்களை வந்து காப்பாற்றுமாறு கதறினோம், ஆனால் அவர்கள் தாங்கள் மிக தொலைவிலிருப்பதாக தெரிவித்தனர்’’
நாங்கள் அவ்வேளை கிறிஸ்மஸ் தீவுகளுக்கு அருகிலிருந்ததால் வேறு வழியின்றி அவுஸ்திரேலிய அதிகாரிகளை அழைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம் என்றும் சுஜீவ சப்ரமாது குறிப்பிட்டார்.
~~நாங்கள் அவுஸ்திரேலிய கப்பலில் ஏறிய வேளை அந்த கப்பல் கப்டன் டொனி பிரட் 150 இலங்கை தமிழருடன்  இன்னொரு கப்பல் நிற்பதாகவும் அங்கு சென்று அனைவரையும் ஒரே கப்பலில் ஏற்றப்போவதாகவும் தெரிவித்தார்,’’
~~ மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு பின்னர் டொனி பிரட் மற்றைய கப்பல் தொடர்பாக சில பிரச்சினைகள் உள்ளதாகவும், அவர்களை என்ன செய்வது என்பது தெரியவில்லை அது தொடர்பாக அரசு ஆராய்ந்து வருவதாக தெரிவித்தார்’’mb_narrow_Aruna_CI
தானும் தனது 3 குழந்தைகளும் தங்களது நாயும் அவுஸ்திரேலிய கப்பலில் இருந்த வேளை தங்களை விட நாய்க்கு நல்ல உணவு வழங்கப்பட்டதாக சுஜீவ சப்ரமாது தெரிவித்தார்.
அவர்கள் நாயிடம் இரக்கம் காட்டினர், ஆனால் எங்களிடம் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. மூர்க்கத்தனமாக நடந்து கொண்டனர்,திட்டினர், கெட்ட வார்தையால் ஏசினர்
இன்னொரு பயணியான 59வயது எம் ஜி சுமணதாச- நியுசிலாந்து செல்வதாக தன்னிடம் தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிட்டார், பணம் உழைத்து அங்கு வீடொன்றை வாங்குவதற்காக நான் இந்த பயணத்தை மேற்கொண்டேன், இதற்காக பணம் எதனையும் செலுத்தவில்லை, அ;ங்கு சென்றதும் திருப்பி செலுத்தலாம் என தெரிவித்தார்கள், அதிகாரிகள் என்னிடம் கேள்வி எதனையும் கேட்கவில்லை, இரவில் அவர்கள் எங்களை கண்டுபிடித்தார்கள் பகல என்றால் நாங்கள் அவுஸ்திரேலியா கரையை நாங்கள் அடைந்திருக்க முடியும் என்றனர் எங்களுக்கு நல்ல உணவை வழங்கினர் என தெரிவித்தார். நீர்கொழும்பை சேர்ந்த 38 வயது வாகன சாரதி தங்கள் படகு 14 நாட்கள் கடலில் தத்தளித்தாகவும் யூன் 11 ம் திகதி  புறப்பட்ட படகை அவுஸ்திரேலிய அதிகாரிகள் 25 ம்திகதி இடைமறித்ததாக குறிப்பிட்டார்.

TAGS: