இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு அனைத்துக்கட்சி நாடாளுமன்ற குழுவின் பங்களிப்புடன் உள்ளுரில் தீர்வு ஒன்றுக்கே இலங்கை அரசாங்கம் முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியுறவு அமைசசர் ஜீ.எல்.பீரிஸ் இந்த கருத்தை இன்று கண்டியில் வைத்து வெளியிட்டுள்ளார்.
இந்த விடயத்தை தெளிவுப்படுத்துவதற்காக அமைச்சர் கடந்த வாரத்தில் இந்தியா சென்றிருந்தார்.
இதன் போது அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழுவில் கட்சிகளின் பங்களிப்புக்கு இந்தியாவின் உதவியை தாம் கோரியதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை இலங்கை இனப்பிரச்சினை தீர்வுக்கு வெளியாரின் தலையீட்டை இந்தியா விரும்பவில்லை என்று அமைச்சர் கூறினார்.
இதற்கிடையில் தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக்காண இந்தியா எதிர்ப்பார்ப்பதாகவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.
அடேய் பொறம்போக்கு எவன் விரும்பினால் என்ன? விரும்பாவிட்டால் என்ன? முதேவி! இந்திய,சிறிலங்கா அரசியல்வாதிகள் குடும்பங்களை அகதிகள் முகாம்களில் ஐந்து வருடங்கள் இருந்து காட்ட சொல்லும்! மனித உரிமையாம்! மண்ணாங்கட்டி உரிமை!