இன்று தமிழ் பல இடங்களில் புறக்கணிக்கப்படுகின்றது.
தமிழ், அரசாங்க அதிகாரபூர்வ மொழிகளில் ஒன்று. இதில் நமக்கு எந்த ஐயப்பாடும் இல்லை. ஏன்? அரசாங்கத்துக்கும் கூட அப்படி ஒரு ஐயப்பாடும் இல்லை. ஆனாலும் தமிழ் புறக்கணிக்கப்படுகின்றது!
அரசாங்கத்தின் கொள்கைகளில் எந்த மாற்றமும் இல்லை. பிரச்சனைகள் எல்லாம் அரசாங்கத்தின் கொள்கைகள் பின்பற்றப்படுவதில்லை. பின் பற்றப்பட வேண்டும். அரசாங்கத்தின் கொள்கைகளை யாரும் மாற்றமுடியாது. அதுவும் சம்பளம் வாங்கும் ஒரு அரசாங்க அதிகாரியால் மாற்றமுடியாது. அதுவும் தேச நிந்தனைதான். அப்படி மாற்றுகின்ற அந்த அரசாங்க அதிகாரிகள் மீது அரசாங்கம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது தான் இப்போது நம் முன்னே உள்ள பிரச்சனை! நடவடிக்கை எடுக்காவிட்டாலும் பரவாயில்லை! அரசாங்கமே தட்டிக்கொடுத்து தாலாட்டுவதால் தான் அவர்கள் இன்னும் ஊக்கத்தோடு தங்களது தவறுகளைத் தொடர்கிறார்கள். அப்படிச் செய்பவர்களுக்கு நல்ல பெயரும் கிடைக்கிறது! யார் கண்டார், பொற்கிழியும் கிடைக்கலாம்!
சமீபத்தில், குறைந்தக் கட்டண விமான நிலையத்தில் வழக்கம் போல தமிழ் முற்றிலுமாகப் புறக்கணிக்கப் பட்டிருக்கின்றது.
நமது இயக்கங்கள், மன்றங்கள், கட்சிகள் ஒரு சேர பத்திரிக்கைகளுக்குக் கண்டனங்களைத் தெரிவித்தனர்; ஒய்ந்தும் போய்விட்டனர். அவ்வளவு தான் எங்களால் செய்ய முடியும் என்னும் நிலைமைக்கு அவர்கள் வந்து விட்டனர். ஆனால் இவர்களின் கண்டனங்கள் யாரிடம் போய்ச் சேர வேண்டுமோ அங்குப் போய்ச் சேராது என்பது எழுதுபவர்களுக்கே தெரியும். சும்மா பத்திரிக்கைகளுக்கு நாங்களும் எங்களது எதிர்ப்பினைத் தெரிவித்தோம் என்பதைத் தவிர வேறு எந்தச் சாதனையும் இவர்கள் புரியவில்லை!
சீனாவுக்குச் சென்ற மாஸ் விமானம் சமீபத்தில் மறைந்து போனது. அது என்ன ஆனது என்று இதுவரை எந்தச் செய்தியும் இல்லை. அதன் எதிரொலி என்ன? இங்கிருந்து மாஸ் விமானம் சீனா போகவில்லை! சீனாவிலிருந்து மாஸ் விமானம் இங்கு வரவில்லை! காரணம் பயணிகள் இல்லை! இரண்டு பக்கத்திலிருந்தும் சீனர்கள் புறக்கணித்து விட்டனர்! அங்குள்ள மாஸ் அலுவலகம் மூடப்பட்டு விட்டது!
நம்மாலும் இப்படி ஏதாவது செய்ய முடியுமா? முடியும். இப்போது இங்கிருந்து ஏர் ஏசியா, ஏர் மெலிண்டோ, மாஸ் விமானங்கள் அதிகமான பயணங்களை இந்தியாவிற்கு மேற்கொள்கின்றன. நாம் இந்த விமானங்களைப் புறக்கணிக்க வேண்டும். அவசியம் போக வேண்டும் என்னும் சூழ்நிலை இருந்தால் மற்ற விமானங்களை[ப் பயன்படுத்தலாம். முடிந்தவரை குறைந்த கட்டண விமான நிலையத்தைப் பயன் படுத்தக்கூடாது!
நாம் இதனைத் தனியாகச் செய்வதை விட பயண முகவர்களிடம் இந்தப் பிரச்சனையை விட்டுவிட வேண்டும். அவர்கள் நினைத்தால் எதையும் செய்ய முடியும். வேறு விமானங்களுக்குப் பயணங்களை அவர்களால் மாற்றிவிட முடியும். தனிப்பட்ட முறையில் பலர் இந்தியா போக கூட்டுப் பயணங்களை ஏற்பாடுகள் செய்கின்றனர். இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் போதும். நாம் தனிப்பட்ட முறையில் யாரிடமும் பேச வேண்டிய அவசியமில்லை. இந்தப் பயண முகவர்களே பேச வேண்டிய இடத்தில் பேசி அதற்கு ஒரு தீர்வு காண்பார்கள். பண அடியைப் போல எந்த அடியும் உதவாது!
நமது என்.ஜி.ஒ.க்கள் இந்தப் பயண முகவர்களிடம் பேச்சு நடத்தினாலே இந்தப்பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்துவிடும். அங்கும் இங்கும் போய் நமது எதிர்ப்பினைத் தெரிவிப்பதை விட பயண முகவர்கள் இதனைக் கையில் எடுக்கட்டும். ஒரு வழி பிறக்கும்
ATM இயந்திரத்தில் தமிழ்மொழி இல்லை என எல்லாக் காலங்களிலும் கூப்பாடுப் போட்டுக் கொண்டிருக்கிறோம். எந்த ஒரு முடிவும் எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை.
நமது வர்த்தகர்கள் நினைத்தால் இதற்கும் ஒரு முடிவு காணலாம். நம்முடைய வர்த்தகர்கள் வங்கிகளில் பணம் தினசரி போடத்தான் செய்கின்றனர். ஒவ்வொரு நாளும் நமது இந்திய வர்த்தகர்களால் கோடிகணக்கில் பணம் வங்கிகளில் போடப்படுகின்றது. ஏன்? அதை விட கூடுதலாகவும் இருக்கலாம்.
நாம் செய்ய வேண்டியதெல்லாம் நமது குறைபாடுகளை இந்திய வர்த்தகர் சங்கத்திடம் எடுத்துச் செல்லவேண்டும். அது நமது என்.ஜி.ஒ.க்களின் வேலை. எந்த வங்கி தங்களது ATM இயந்திரத்தில் தமிழ் மொழி பயன்படுத்துகின்றதோ அந்த வங்கியில் எங்களது பணத்தைப்போட நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதை வங்கிகளுக்குப் புரியவைக்க வேண்டும். ஒரே வங்கியில் வர்த்தர்களின் பணம் போடப்பட்டால் அது ஒரு பெரிய தொகை தானே!
இந்த விஷயத்தில் ஹாஜி தஸ்லிம், கென்னெத் ஈஸ்வரன், ஆர்.கே.நாதன், கே.ஆர்.சோமசுந்தரம், ஞானலிங்கம் போன்ற தொழில் அதிபர்களின் தலையீடு பயன் தரும் அல்லவா. கூட்டுறவு சங்கம் தனது கட்டுப்பாட்டில் உள்ள தோட்டங்களின் பணப் பட்டுவாடாக்களை ஒரே வங்கியில் செய்தால் அது சாதாரண விஷயம் அல்லவே! கென்னெத் ஈஸ்வரன் அவர்கள் ஒரு நாளிதழை ஒரு வெள்ளிக்கு விற்பனைச் செய்கிறவர். வேறு யாராலும் செய்ய முடியாததை அவர் செய்கிறார். அப்படி என்றால் அவருடைய மற்றைய நிறுவனங்களின் வங்கிக்கணக்கில் எத்தனை கோடி புரளும் என்று யோசித்துப் பாருங்கள். கப்பல் தொழிலதிபர் ஞானலிங்கம் என்ன சாதரண மனிதரா? ஆர்.கே.நாதன் இரும்பு மனிதர் அல்லவா! ஹாஜி தஸ்லிம் அவர்கள் இனப்பற்று, மொழிபற்று என்று வரும் போது முன்னிலையில் உள்ளவர். வங்கிகளைப் பொறுத்த வரை இவர்கள் அனைவரும் பலம் வாய்ந்தவர்கள்; சக்தி வாய்ந்தவர்கள். இவரைப் போல் இன்னும் பலர் உள்ளனர். மேலும் இவர்கள் அனைவரும் தமிழர்கள் என்பது கூடுதல் நன்மை.
இதல்லாம் சிறிய முயற்சிகள் தாம். உண்மையைச் சொன்னால் நமது முயற்சிகள் சரியாக அமையவில்லை. நாம் சூரியனைப் பார்த்துக் குலைத்துக் கொண்டிருக்கிறோம்! ஒரு வேளை நாம் இந்த முயற்சிகளில் கவனம் செலுத்தினால் இதற்கெல்லாம் ஒரு முடிவு காணலாம். ‘எனக்கென்ன’ என்னும் போக்கும் நம்மிடத்தில் இருந்தால் வருங்காலங்களில் வங்காள தேசிகளின் மொழி, தமிழின் இடத்தைப் பிடித்திக்கொள்ளும்! இப்போதும் காற்று அவர்கள் பக்கம் தான் வீசுகிறது என்பதை மறக்கவேண்டாம்!
பணத்தால் அடிக்க வேண்டிய இடத்தில் பணத்தால் தான் அடிக்க வேண்டும்! வங்காள தேசிகள், சீனர்களைப் போலவே, பணத்தைக் கொடுத்து காரியத்தைச் சாதிப்பவர்கள் என்பது நமக்குத் தெரிந்த விஷயம் தானே!
இவைகள் எல்லாம் சில ஆலோசனைகள் தாம். இவைகளை விட இன்னும் சிறப்பான ஆலோசனைகள் உங்களிடமும் இருக்கும். அவைகளையும் தெரியப்படுத்துங்கள். இந்தப் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு காண்போம்.
இது மட்டும் அல்ல. இன்னும் பல வழிகளில் தமிழ் புறக்கணிக்கப் படுகின்றது. கொடிபிடிப்பது, ஆர்ப்பாட்டம் செய்வது ஆகியவை பழைய முறைகள். வேறு வழிகளை ஆராய்வோம்.
அரசு சாரா இயக்கங்கள் தான் இதற்கான வழி வகைகளை ஆராய வேண்டும்.
முடிந்த வரை பணத்தால் இவர்களை எப்படிக் கவிழ்ப்பது என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அது சீனர்களுக்குக் கை வந்த கலை! நாமும் அதே கலையைப் பயன்படுத்துவோம்! நமது மொழியைப் பாதுகாப்போம்!
(கோடிசுவரன்)
very simple Mr.கோனாரு, தமிழ் பள்ளிகளை மலேசியா இந்திய வம்சாவளிகள் புறக்கனிப்பதால், தமிழ் மொழியும் மலேசியா அரசாங்கத்தால் புறக்கனிக்கப்படுகிறது…..
மலேசியாவில் தமிழ் மொழிக்கு அங்கிகாரம் தரப்படவில்லை என்று நீங்கள் ஆதங்கபடுவது வேதனையான விசயமே , அனால் தமிழ் நாட்டில் இருந்து இங்கே இறக்குமதி செய்யப்படும் எல்லா பொருளிலும் தமிழ் உள்ளதா? அங்கே அவர்கள் தாய்மொழியை எந்த அளவுக்கு மதிப்பு கொடுத்திருந்தால் இங்கேயும் அது பிரதிபலித்திருக்கும் . தாய்லாந்தில் செய்ய படும் ஷேம்போவில் குடா அவர்கள் தாய்மொழி உண்டு . தமிழர்களுக்கு மாத்ரு பாசை மோகத்தை விட பிற பாசை மோகம் அதிகம் . தமிழ் பள்ளிகளிலே ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் பேசுவதையே அதிகம் விரும்புகின்றனர் . உலகில் உள்ள அணைத்து நாட்டிற்கும் /மாநிலத்திற்கும் தேசிய மொழி ஒன்று உண்டு தமிழ் நாட்டை தவிர காரணம் அங்கே ஆங்கிலம் தான் தேசிய மொழி .
தமிழர்களின் பணம் வங்கிகளுக்கும் ..விமான சேவைகளுக்கும் தேவை ….அனால் தமிழ் மொழி தேவை இல்லை …இதற்கு ஆப்பு இப்பொது அடிக்காவிட்டால் ..நாளை இதை விட மோசமான சம்பவங்கள் நடக்கலாம் …..அரபு மொழிக்கு மலேசியாவில் பொது இடங்களில் கொடுக்க பட்டு உள்ள நிலை பரம்பரை பரம்பரை ஆக வாழும்t தமிழர்களின் மொழிக்கு கொடுக்க படவில்லை …ஓவொரு மாதமும் தமிழ் பயண எண்ணிக்கை விமான சேவைகளில் குறையுமானால் நிச்சயம் ஆராய தொடங்குவார்கள் ….தமிழை புறக்கணிக்கும் வங்கி களுக்கும் இதை செய்யலாம் முதலில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் உள்ள வங்கிகளில் புறக்கணிப்பை தொடங்கலாம் ஒரு 3 மாதம் சூடு கொடுத்தால் காலில் வந்து விழுவார்கள் ..யூதர்கள் இந்த யுக்தியை பாவித்துதான் உலகை ஆளுகின்றார்கள்
தமிழ் நாட்டில் தாய்மொழியை கீழிருப்பு செய்தது திட்டமிட்ட சதி! வெகு நாற்களுக்கு அல்ல!
மேலே குறிப்பிட்டுள்ள தொழில் அதிபர்கள் தமிழ் பேசுவார்களா? தமில் பேசுவார்களா? டமில் பேசுவார்களா? முதலில் தமிழனை தமிழில் பேச சொல்லுங்க, சீனன் எவ்வளவு பெரிய இடத்தில் இருந்தாலும் சீன மொழியில்தான் பேசுவான், ஏற் ஆசியா தலைவர் டமில் பேசுவாரா?
தலையே வலிக்குது நடப்பதை பார்த்தல்.2018
வாடிக்கையாளர்களே ஒரு நிறுவனத்தின் வருமானத்தை நிர்ணயிப்பவர்கள் …..யூதர்கள் தங்கள் இனத்திற்கு எதிராக ஒரு வங்கி நடந்தால் ….முழு பண வைப்ப்பையும் எடுத்து விடுவார்கள் அபோது வங்கி அரோகரா …..துணிந்து ஒரு வங்கிக்கு செய்து பாருங்கள் .வங்கி மேனேஜர் உங்கள் வீடு தேடி வருவார்கள் …செல்வந்தர்கள் தேவை இல்லை ..1000 கணக்கான சாதாரண வாடிக்கையாளர்கள் இதை செய்யலாம் …பெரும் பணகாரகளுக்கு வியாபார கடன் சாமானிய மக்களின் வைப்பில் இருந்தே வங்கி வழங்குகின்றது …சிலர் இந்த கடனை கூட திருப்பி கொடுபதில்லை ….
துப்பு கேட்ட தமிழ் நட்டு தமிழன் தமிழை மறந்து ஆண்டுகள் பல அகிவிடன ..சுரணை கேட்ட பிறவிகள் தமிழை தலைவனாக ஏற்ட்கவில்லை ….தமிழ் நடிகர்களை மதிபதில்லை …ஆக இந்த பிறவிகளை பற்றி எழுத வேண்டாம் …உலகின் அதி கூடிய விரல் அடையாளம் பத்திரங்களில் இடும் மக்கள் இந்த தமிழா நாட்டில் தன உண்டு ….காரணம் படிப்பு அறிவு கிடையாது பல அரசியல் வாதிகளுக்கு கையெழுத்து எப்படி வைப்பது என்று வகுப்பு நடத்துவார்களாம்
மீண்டும் சொல்கிறேன்! ஒரு கவிஞர் ஆணித்தரமாக சொல்கிறார், ‘தமிழே தமிழனுக்கு உயிராம், அந்தத் தமிழனே தமிழுக்குத் தூக்குக் கயிறாம்.’
இங்கு மலைக்காரர்களும் ,சீனர்களும் ஓற்றுமையாகத்தான் இருக்கின்றார்கள் ஆனால்,ஒரு காலத்தில் ஒற்றுமையாக ஒரு தாய் பிள்ளைகளாய் இருந்தர்கள் நமவர்கள் இன்று அப்படி இல்லையே ?இந்திய ர்கள் என்ற அடிப்படைலிர்ந்து விலகி தமிழர்கள் , மலையாளிகள் , தெலுங்கர்கள் ,சிலோநீஸ்கள், சீக்கியர்கள் என்றும் அவன் மேல்ஜாதி ,இவன் கீழ்ஜாதி என பிரிதளபட்டுளோம் ஜாதிக்கென தனி தனி சங்ககள் இந்த பிரிவினையை தெரிந்துகொண்ட பி என் அரசாங்கத்திற்கு வசதியாக போய்விட்டது {ஊர் இரண்டு பட்டால் க்கஊட்டாடிக்கு கொண்டடமம் } ஒற்றுமை இல்லா இரண்டு எருதுகள் கதைதான் நினைவிற்கு வருகிறது , ஜாதிகள் அடிப்படையல் மானியம் பெற்றுகொள்வது இத்தனை ஜாதிகள் என்பதை அரசாங்கத்திடம் புள்ளி விவரம் தருவது நாம் தானே தமிழனே தமிழனுக்கு துரோகி ஆகிறான் , ஜாதி வேறு பாடு இன்றி நாம் அனைவரும் ஒர்ர் அணியாக நின்றால் எதையும் சாதிக்கலாம் “ஒற்றுமையை வாழ்வதாலே உண்டு நன்மையே “!
தமிழன் ஒற்றுமை இல்லாத வரை தமிழுக்கு கிடைக்கும் மரியாதை கானல் நீரே.உணர்வாலும் செயலாலும் ஒன்றுபடுவோம்.அதுவே நம்மை முன்னெடுத்து செல்லும் .
அரசாங்கம் முதலில் தமிழுக்கு மரியாதை கொடுக்கட்டும்.அலுவலகங்களில் தமிழ் மொழி அறிவுப்பு பலகை உண்டா? அரசாங்கமே தமிழை மதிக்கவில்லையே! மற்ற நிறுவனங்கள் தமிழை மதிக்குமா?
இந்தியாவை பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? அவர்கள் தமிழ் பேசினால் என்ன அல்லது வேறு மொழிகள் பேசினால் என்ன. நாம் நம் மலேசியாவை பற்றி மட்டுமே சிந்திப்போமே. நாம் நடத்தும் சின்ன சின்ன நிகழ்வுகளில் / கூட்டங்களில் தமிழை பேசி வளர்த்தால்தான் அந்த தமிழ் பற்று அனைத்து தமிழர்களிடமும் இருந்தால் தான் அரசாங்கத்திடம் நமது முறையீட்டை ஆணித்தரமாக அடித்துபேச முடியும். அதை முதலில் செய்வோம். நீங்கள் குறிப்பிட்டது போல செய்வதற்கு நான் தயார். அதுபோல் நமது தொழிலதிபர்களும் மற்றவர்களும் இதை செயல்படுத்தினாலே ஒழிய மாற்றத்தை காண முடியாது. நான் உயிரோடு இருக்கும் போதே இதை பார்க்க எனக்கு ஆவலாகத்தான் இருக்கிறது.
பொதுவாக நாம் தேவை இல்லாத விஷயத்தைப் பேசுகிறோம். கட்டுரையாளர் சொல்லுகின்ற விஷயத்தைப் பற்றி மட்டுமே நாம் பேசுவோம். மங்கை அவர்கள் சொன்ன ஒரு விஷயம் ஏற்றுக் கொள்ளக் கூடியதே. இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து மலேசியாவுக்குள் பொருள்கள் இறக்குமதி ஆகின்றன. மலேசியாவுக்குள் வருகின்ற பொருள்களில் தமிழ் இடம் பெற வேண்டும் என்று இறக்குமதி செய்யும் வியாபாரிகள் அங்குள்ளவர்களிடம் நெருக்குதலை ஏற்படுத்த வேண்டும். இது சாத்தியமே. முடியவில்லை என்றால் அவர்களின் பொருள்களைப் புறக்கணிப்போம்!
இந்நாட்டில், தமிழ், கடைசி உயிர்ப்பாலுக்காக தவித்துக்கொண்டிருக்கிறது.. இதற்கு, மலேசிய இந்தியர்களே காரணம். உரிமையை இழந்து, மாற்றானிடம் கையேந்தும் நிலையில் நமது இந்தியர்களின் நிலைமை போய்க்கொண்டிருக்கிறது. இந்தியர்கள் ஒருசேர்ந்து தமிழை வாழவைக்க முயற்சிப்போம். இல்லையேல், சங்கூதுவது உறுதியே!!!!! தமிழ் மொழியை படிப்பதால் யாது நன்மை? இம்மொழி வெறும் தமிழ் ஆசிரியர் பணிக்கும் தமிழ் பத்திரிகை துறைக்குமே ஏற்றது என்ற எண்ணத்தை மாற்றவேண்டும். இந்தியர்களுக்கு தாய்பாஷை வெவ்வேறாக இருப்பினும், தமிழ்மொழியை நமது இந்தியர்களின் ஒற்றுமை மொழியாகக் கொள்ளலாமே!! கொள்ளவும் வேண்டும். அரசியல் முதல் வணிகம் வரை எல்லாத் துறைகளிலும் சிறிது சிறிதாக தமிழுக்காக அழுத்தம் கொடுக்க முயற்சிக்கலாம். மாற்றியமைப்பது நமது கையிலேயே உள்ளது. ஒற்றுமையே பலம்.!!!!! ஒற்றுமையே ஊக்கம் தரும்!!!!! வாழ்க தமிழ்!!!!!
அனைத்து மலேசிய இந்திய மக்களே, நான் ஒரு மலையாளி, படித்து வளர்ந்ததோ தமிழ்ப்பள்ளியில். என் பிள்ளைகளும் தமிழ்ப்பள்ளியிலேயே படித்து இன்று பல்கலைக்கழகத்தில் நிபுணத்துவ படிப்பை மேற்க்கொண்டு வருகிறார்கள். வீட்டில் தாய்பாஷையை பேசினாலும், என் உயர்வுக்கு தமிழே அஸ்திவாரம். தெலுங்கு பாஷை மட்டும் பேசத் தெரிந்த என் நண்பனிடம் தமிழிலேயே பேசி பேசி இன்று அவரும் சரளமாக தமிழ் மொழியை பேசுகிறார். என்னைப்போல் நீங்களும் முயற்ச்சிக்கலாமே இந்திய மக்களே!!!!
தமிழை யாரும் புரக்கணிக்கவில்லை,திராவிட போக்கே அருவறப்பை தருகிறது.நாராயண நாராயண.
நாம் ஒவ்வொருவரும் தமிழில் வங்கியில் ,விமான நிலையத்தில் தமிழ் மொழியை கொண்டு வர பாடு பட
வேண்டும் தனியாகவே கேட்டுகொண்டால் கண்டிப்பாக வெற்றி காண முடியும் ,காசோலைகளில் தமிழில் எழுதும்
திட்டம் அமுலுக்கு எப்படி வந்தது ,சும்மா கென்னத் ஸ்வரனிடமும் (ஸ்ரீ லங்கா காரன் )மற்ற தொழில் அதிபர்களிடம் கெஞ்ச வேண்டாம் ,சில இடங்களில் அலுவலங்களில் சீன .மலாய் .ஆங்கிலத்தில் நுழை வாசலில்
உங்கள் காலனியை கழற்றி வையுங்கள் என்று எழுதி இருப்பதை கண்டு அந்த அலுவலக அதிகாரியிடம் ஏன் தமிழில் எழுதவில்லை என்று கேட்தற்கு தமிழர்களுக்கு
எழுதி நினைவூட்ட தேவை இல்லை காரணம் தமிழர்கள்
தங்கள் கலச்சாரத்தில் மற்றவர்களின் அலுவகத்தில் ,வீடுகளில் தங்களது காலனியை கழற்றி வைத்து விட்டு
செல்லும் நல்ல பழக்கம் இருப்பதால் கதவில் ஓட்டும் ஸ்டிகர் தயாரிக்கும் நிறுவனம் மரியாதையை தெரியாதவர்களுக்கு மட்டும் அவர்கள் மொழியில் அடித்து கொடுத்தார்கள் என்று அந்த சீன அதிகாரி சொன்னவுடன் மெய் சிலிர்த்து போனேன் நைனா .
கிடைத்த வாய்ப்புகளை விட்டுவிட்டு நரியைப்போல எட்டாத கனிகளைப்பார்த்து சீசி இது புளிக்கும் என வாய்க்கிழிய பேசுகிற இனமாக நாம் இருக்கிறோம். ஏர் ஆசியாவில் தமிழில் டிக்கெட் போட வாய்ப்பு தந்தார்கள், எத்தனை பேர் பயன் படுத்தினோம்.யாரும் பயன்படுத்தாததால் எடுத்துவிட்டார்கள்?? இதற்க்கு யாரை குறை சொல்லப்போகிறிர்கள்!! செம்பருத்தியில் இத்தனைப்பேர் எழுது கிறிர்களே, உங்களில் எத்தனைபேர் சொந்தமாக காசோலை வைத்திருக்கிறிர்கள் அதில் எத்தனைபேர் தமிழில் எழுது கின்றிர்கள், சொல்லுங்கள் பார்க்கலாம், நாம் எல்லாம் வெறும் வெத்து வேட்டுகள், புது கொக்கோ கோலாக்கள்,உணர்ச்சி வயப்படுவோமே ஒழியே உணர்வாய் சிந்திக்க மாட்டோம், கழிவறை, இழு,தள்ளு,காலணிகளை அகற்றுங்கள்,இன்னும் பலவற்றை நாமே ஓட்டிகளாக (ஸ்டிகர்) தயார் செய்து பிரச்சனைதான் ஒட்டித்தான் பார்ப்போமே!! எத்தனைபேர் தயார்??
நண்பா! கென்னெத் ஈஸ்வரன் மட்டும் அல்ல, ஞானலிங்கம் போன்ற யாழ்ப்பாணத் தமிழர்கள் பலர் தொழில் அதிபர்களாக இருக்கின்றனர். நம்மைப் போன்ற பல தமிழர்கள் அவர்களிடம் வேலை செய்கின்றனர்.அவர்கள் தொழிலதிபர்கள் மட்டும் அல்ல அவர்களும் தமிழர்கள். அவர்களுக்கும் தமிழின் மீது பற்று உண்டு. அனைத்துத் தரப்பினரும் ஒரு பிரச்சனையைக் கையில் எடுக்கும் போது அந்தப் பிரச்னைக்கு வலு அதிகம். தனி முயற்சியும் பலன் தரும் என்பது உண்மையே. தனி முயற்சியாக இருந்தாலும் நாம் அனைவருமே முயற்சி செய்ய வேண்டும். ஏர் ஏசியா தமிழில் டிக்கெட் போட வாய்ப்புத் தந்தார்கள் என்பது புதிய செய்தி. ஆனாலும் பயண முகவர்கள் தான் இதனைத் தக்க வைத்திருக்க வேண்டும். நாம் போவதெல்லாம் பயண மிகவர்களிடம் தானே. தனிப்பட்ட முறையில் நாம் அறிந்திருக்க நியாயமில்லை. நன்றி!
ஐயா abraham, ஏர் ஏசியா தமிழில் டிக்கெட் போட வாய்ப்பு தந்தார்கள் என்பது புதிய செய்தி அல்ல. அது சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலான பழமை செய்தி. டோனி ஒரு தமிழராய் இல்லாவிட்டாலும் உலகிலேயே விமான டிக்கெட் பதிவிற்கு கணினி வாயிலாக தமிழ் மொழியில் வாய்ப்புக் கொடுத்தவர் அவர் ஒருவர்தாம் என்பது எனது கணிப்பு. பயன்படுத்துவோர் மிகக்குறைவாக இருந்ததால் அதனை மூடிவிட்டனர். மூடியதற்காக நாம் ஏர் ஏசியாவைக் குறை சொல்ல முடியாது. “செம்மொழி கமழும்” தமிழர் நாட்டில் கூட இந்த வாய்ப்பு இல்லை..!! ‘செம்மொழி காவலரின்?!’ SUN குழுமம் நடத்தும் Spice Jet-ல் கூட கணினிமூல பயணப் பதிவிற்கு தமிழ் மொழியில் வாய்ப்பு இருக்கிறதா..?! செம்மொழி சும்மா ஏட்டு அளவில்தான் – அரசியலுக்காக. ஏர் ஏசியாவின் அந்த வாய்ப்பு நிறுத்தப்பட்டது பயண முகவர்கள் தவறு அன்று. சீன பயண முகவர்கள் கூட ஆங்கிலத்தின் மூலமே இதனை செய்கின்றனர். இந்த வசதி தனிப்பட்டவர்கள் தங்கள் கணினி மூலம் ஏர் ஏசியா விமானப் பயண டிக்கெட்களை பதிந்துக்கொள்ள ஏற்படுத்தப்பட்ட ஒன்று. நாம் இதிலும் கோட்டை விட்டோம்.
நம்ம’அரசாங்கம்’ தமிழைப் புறக்கணிக்க வில்லையா? கட்டுரை ஆசிரியர் நாட்டை விட்டு அஞ்ஞாத வாசம் போய் இப்போதுதான் நாடு திரும்பினாரா? 1. தமிழ்ப்பள்ளிகளில் இப்போது தமிழே இல்லை தெரியுமா? 2. அரசாங்க அகப்பக்கங்களில் கூட மருந்துக்குக் கூடதமிழ் இல்லை…ஆனால் ஜப்பான் மொழி, பிரெஞ்சு மொழி, ஜெர்மன் மொழிகள் உண்டு தெரியுமா? அரசாங்ககட்டிடங்களில் கூட சீனமொழி அறிவிப்பு உண்டு. இது புறக்கணிப்பு இல்லையா? 24 மணி நேரம் தமிழ் பேசுகிறோம் என்று மார்தட்டிக் கொள்ளும் வானொலிகூட பூஜ்ஜியம் என்று சொல்வதில்லை. அதுசமஸ்கிருதமாம்…ஆனால் ஜீரோ (Zero) என்று சொல்லாமாம். தமிழா இது என்ன தமிழா? ‘மாதிரி’ என்பதைக்கூட மாறி என்றும் மேறி என்றும் சொல்கிறார்கள். நாட்கள் என்பது நாள்பட்ட கள்ளாம். எனவே, நாள்கள் என்றுசொல்ல வேண்டுமாம் (இன்னும் குடியைப் பற்றியே எண்ணும் நாம் அல்லவா நல்ல ‘குடி’ மக்கள். அப்படியானால் பழங்கள் என்பது ‘பழமையான கள்’ அல்லவா? எனவே பழங்கள் என்பதை எப்படி சொல்வதாம்? இப்படி இவர்கள் அடிக்கும் கூத்துக்கள் அடுக்கிக்கொண்டே போகலாம்..இந்த வானொலியின் அதிகாரி ஒரு பட்டி மன்றத்துக்கு ஏற்பாடு செய்வாரானால், நான் கலந்து கொண்டு விவாதிக்கவும் தயார். இந்த வானொலி அரசு வானொலி அல்லவா? இது தமிழைப் புறக்கணிக்கிற செயல் அல்லவா?
ஒரு காரணம் சொல்லுங்கள் ஏன் தமிழ் மொழியை மற்ற மொழி போல் அரசாங்கம் தனியார் விளம்பரத்தில் பயன்படுத்த வேண்டும் மென்று.வேண்டாமென்று கூறவில்லை ஏன் வேண்டும்?,ஒருவர் கேட்டிருந்தார் நம்மவர் எத்தனைபேர் செக் புக்கில் தமிழில் சைன் போடுகின்றனர் யென்று,வாழ்க நாராயண நாமம்.
படித்தது . பேஸ் புக் – தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரம் – Tamil History and Culture
என்னுடைய கிராமத்து நண்பன் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகின்றான்.. நான் சென்னைக்கு சென்ற போது அவனை பார்க்க அவனது நிறுவனத்திற்கு சென்றேன்… ஊரில் இருக்கும் போது “எல மக்கா எப்படி இருக்க” என கேட்பவன் அங்கு ” Hi, How are you” என ஆங்கிலத்தில் கேட்கிறான். என்னடா இப்படி ஆங்கிலத்தில் விசாரிக்குற என கேட்டதற்கு… இங்கே எல்லாம் அப்படி தான் ஆங்கிலத்தில் பேசினால் தான் மதிப்பார்கள் என சொல்கிறான்.
நிறையா பேர் இப்போ இப்படி தான் இருக்காங்க. தமிழ்நாட்டிலேயே தமிழில் பேசுவது அவமானம் என நினைக்கின்றனர்… ஆங்கிலம் என்பது அறிவு அல்ல அது ஒரு மொழி தான். நாகரிகம் என்ற பெயரில் நம் தமிழ் மொழியை நசுக்காதீர்கள். – #ஸ்டீபன்
ஒற்றைக் குச்சியை உடைக்க இயலும்.கட்டுக் குச்சிகளை உடைக்க இயலாது.ஒரு காளை தனியாகப் புலியிடம் மாட்டிக்கொண்டால் வெல்லமுடியாது. கூட்டமாக காளைகள் இருந்தால் புலி ஓடிவிடும் என்றெல்லாம் இளம்பிராயத்தில் எங்கள் கால பள்ளியில் படித்தது.இத்தகையக் கதைகள் எல்லாம் ஒற்றுமையின் வலிமையை நமக்கு இளம் பருவத்திலேயே உணர்த்தி உள்ளத்திலே பதிக்கவேண்டும் எனும் மனோதத்துவம்தான்.
ஒரு காலத்தில் நகைக்கடைகளில் நம்மவர்கள்தாம் ஆதிக்கம். நம்மவர்ளுக்கு நகைக்கடைகளில் தனி மரியாதை. நம்மோடு ஒப்பிடும்போது மலாய்க்காரர்கள் குறைந்த கரட் தங்கத்தை வாங்குவார்கள். செம்பு போல காட்சிதரும் அந்த நகைகளை வாங்குவதற்குக்கூட சிலரையே கடைகளில் பார்க்கலாம்.அவர்களின் பொருளாதர நிலை அப்படி. அவர்களுக்குக் போதியக் கல்வி இல்லை, அரசு வேலைகளில் அவர்கள் ஆர்வம் காட்ட முடியாத நிலை. அரசு அதிகாரங்கள்,அந்த வலிமையைக்கொண்டு எல்லாவற்றையும் சிறப்புச் சலுகை எனும் பெயரில் ஓரினமே அபகரிப்பு எனும் நிலை மாத்திரம் அல்ல, எப்படியெல்லாம் மற்ற இனத்தவரைத் தடவிக்கொடுத்தே ஓரங்கட்டுவது,அவர்களின் பொருளாதார வாய்ப்புகளைக் கட்டாயமாக அபகரிப்பது, மற்றவர்களின் தாய்மொழியில் கைவைப்பது என்பதுவரை கடந்த 57 ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. மலாய்க்காரர்களின் பலம் உச்சத்திற்கு வந்தபோது அவர்களின் போக்கு எல்லைகள் கடந்ததைக்கண்ட இன்றைய தலைமுறை கத்தி கூச்சல் போடுகிறது இருக்கும் கொஞ்சம் உரிமையையும் தற்காத்துக்கொள்ள. இதையும் புரிந்தும் புரியாமலும் நடிக்கிறது நம்மில் ஒரு கூட்டம். ஆழமான கல்வி இன்மை,தேவையான பயிற்சி இன்மை, சாதி மதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்ததினால் ஒற்றுமையாக இணைந்து காரியமாற்ற இயலாமை, அரசியல் மூலமாக குறுக்கு வழிகளில் முன்னேற முயன்று தன் இனத்தையே காட்டிக்கொடுத்தும் போட்டுக்கொடுத்தும் ஆதாயமடைந்தமை என பல வகைகளில் இந்ந இனம் சீரழிவை சந்தித்துக்கொண்டிருக்கம் இந்த நேரத்தில் எல்லோரும் (மன்னிக்வேண்டும் உணர்வுள்ள ஒரு சிலர் மட்டும் ) மொழி காக்க கத்துகின்றனர். மற்றவர்களோ மிகவும் மிதப்பாக உணர்வே இல்லாமல், இன உணர்வற்று, மொழியுணர்வற்று, வரப்போகிற ஆபத்தை உணராது ஏனோதானோவென்று அரசியல் கூத்தடித்துக்கொண்டிருக்கின்றனர். வாய்ச்சவடால் அடிப்பதிலும், வணங்கா கழுத்துடையவர்களாகவும், எதற்கெடுத்தாலும் முஷ்டியை உயர்த்துபவர்களாகவும் இருக்கின்றனர். ஆனால் நம் நம் தலைக்கு மேலே தொங்கும் ஆபத்தை அறியாமல். இந்த நிலையில் தமிழ் இங்கு இல்லை , அங்கு இல்லை என்று ஆதங்கப்படுவதும், ஒற்றுமையாக இருப்பதாக எண்ணிக்கொண்டு போராட நினைப்பதும் வெற்றி பெறுமா?
வீழ்ந்த இனம் எழுவதற்கு பொருளாதாரமே சரியான ஆயுதம். யூதர்கள் அறிவையும் பொருளாதார பலத்தையும் கொண்டே தாங்கள் முட்டாள்தனமாக இழந்துவிட்ட தங்களின் நாட்டைத் திரும்பவும் பெற்றனர். உலக பொருளாதாரத்திலும் சரி, விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளிலும் சரி எல்லாம் அவர்களுடைய கைகளில். இதைத்தான் வள்ளுவனும் இந்த இனத்திற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னமேயே “பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை” என்று சொல்லிச் சென்றான். வணங்கா கழுத்துள்ள இந்த இனம், தானும் படிக்காமல் படித்தவன் சொன்னாலும் கேட்காத இனம், மனம்போல உணர்வற்று இருந்து , எல்லாவற்றையும் இழந்து , இன்று தலைக்கு மேலே வெள்ளம் வரப்போவதைக் கண்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக கூச்சலிடுகிறது. நமக்கு வாழத் தெரியவில்லை என்றால் வாழ்ந்து கெட்டவனையும் அவன் மீண்டெழுந்த வகையினையும் பார்த்தாவது வாழப் பழகுங்கள். குறிப்பு( நம்மவன் சொன்னால்தான் நாம் கேட்கமாட்டோமே. எப்பொருள் யார்? யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருளாவது காணலாம் அல்லவா?) முடிந்தால் நாம் எப்டியெல்லாம் ஏமாற்றப்பட்டோம் என்பதையும், இந்த ஏமாற்று வித்தையிலும் சீனர்கள் எப்படி இன்னும் தன் மொழியையும் காத்துக்கொண்டு பொருளாதாரத்தையும் விட்டுக்கொடுக்காமல் தங்களின் கரங்களில் வைத்திருக்கும் மந்திரத்தையும் உண்ணுப்பாகப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள். கண்ணீரோடு… இரத்தக் கண்ணீரோடு விடைபெறுகிறேன் தமிழினமே!
நீங்கள் ஒரு வீடு வாங்குகிறீர்கள் வீட்டை ரினுவேஷன் செய்யவேண்டும் சீனர்/இன்டோனேசியா/தமிழர்,யாரிடம் குத்தகை கொடுப்பீர்.பணம் இந்த சமுதாயத்தை சீர்படுத்தாது,கல்வி(அறம்)ஒன்றே நன்னெரியை போதிக்கும்.சீனனிடம் தரமான சேவை ஆதலால் எவறும் அவனை விட்டு விலகுவதில்லை,நம்மிடம் என்ன தகுதி இருக்கு யாராவது சொல்லுங்கள் பார்போம்,பாம்பும் கறையான் கதை,விரண்டாவாதம்,சூப்பர்,வாழ்க நாராயண நாமம்.