இலங்கை விவகாரம்! சர்வதேசத்தினால் உன்னிப்பாக அவதானிக்கப்படுகிறது!– ஆங்கில இதழ்

ramaposha-mahindaதென்னாபிரிக்காவின் உப ஜனாதிபதி சிறில் ரமபோஸாவின் இலங்கை விஜயம் தொடர்பிலும், அமைச்சர் ஜி.எல். பீரிஸின் இந்திய விஜயம் தொடர்பிலும் சர்வதேசத்தில் கவனம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கில செய்தித்தாள் ஒன்று இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பதற்காக இந்தியாவின் ஜி பார்த்தசாரதி, ரமேஸ் பண்டாரி, நோர்வேயின் எரிக் சொல்ஹெய்ம், ஜப்பானின் யசுசி அகாசி போன்ற பலரும் முயற்சித்தனர். எனினும் அந்த முயற்சிகள் யாவும் இறுதியில் சாத்தியப்படவில்லை.

எனினும் இந்தியாவின் தலையீட்டால் உருவான 13வது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் மாத்திரம் இன்னும் பேச்சுக்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

இந்தநிலையில் ரமபோஸாவின் விஜயமானது சர்வதேசத்தில் உன்னிப்பாக அவதானிக்கப்படுகிறது.

நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினையை தாமே தீர்த்துக்கொண்ட நாடு என்ற வகையில் தென்னாபிரிக்கா சிறப்பு பெறுகிறது.

இலங்கையை பொறுத்தவரை உள்நாட்டு தீர்வு ஒன்று வலியுறுத்தப்படுகின்ற போதும் அதற்கான வாய்ப்புகளை அரசியல்வாதிகள் மேற்கொள்ளவில்லை.

குறிப்பாக ஆளும் கட்சியில் உள்ள விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் ரமபோஸாவின் தலையீட்டுக்கும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.

எனினும் அரசியலில் விரோதத்தை கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஈபிடிபியும் ரமபோஸாவின் தலையீட்டை வரவேற்கின்றன.

இந்தநிலையில் சர்வதேச விசாரணையும் இலங்கை மீது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எனவே தமது பிரச்சினைக்கு தாமே தீர்வை காண வேண்டிய நிலை இலங்கைக்கு சவாலாக உள்ளது.

மறுபுறத்தில் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இந்தியாவுக்கு சென்று இலங்கையின் தற்போதைய நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளதுடன், இந்தியாவின் நிலைப்பாட்டையும் அறிந்து வந்துள்ளார்.

எனவே இலங்கையில் அடுத்து வரும் காலங்கள் முக்கியமானதாக அமைந்திருக்கும் என்று அந்த ஆங்கில இதழ் எதிர்வு கூறியுள்ளது.

TAGS: