இலங்கையில் யுத்த காலத்தில் நடைபெற்ற யுத்த மீறல்கள் குறித்த விசாரணைகளை ஐ.நா மனித உரிமை ஆணையகத்தின் விசாரணைக் குழு உத்தியோகபூர்வமாக இன்று ஆரம்பித்துள்ளது.
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் இவ்விசாரணைக் குழு 10 மாதங்கள் விசாரணைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவின் இடைக்கால அறிக்கையை எதிர்வரும் செப்டெம்பர் 27ஆம் நாள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் மாநாட்டில் சமர்ப்பிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
10 மாதங்கள் நடைபெறவுள்ள இந்த விசாரணைகளின் குழு ஆலோசகர்களாக மார்ட்டி அத்திசாரி, சில்வியா கட்ரைட் மற்றும் அஸ்மா ஜஹங்கிர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இலங்கைக்குள் விசாரணைகளை மேற்கொள்வதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.