இராக்கில் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள முன்னாள் அதிபர் சதாம் உசேனின் சொந்த ஊரான திக்ரித் நகருக்குள் ராணுவம் செவ்வாய்க்கிழமை முன்னேறிச் சென்றது.
திக்ரித்தின் தென்பகுதியில் தீவிரவாதிகளின் வசமிருந்த முக்கிய அரசுக் கட்டடங்களையும் ராணுவம் மீட்டுள்ளது.
இது குறித்து ஏ.எஃப்.பி. செய்தியாளரிடம் சலாஹிதின் மாகாண ஆளுநர் அகமது அப்துல்லா ஜுபூரி செவ்வாய்க்கிழமை கூறுகையில், “”திக்ரித் நகரை தீவிரவாதிகளின் வசமிருந்து மீட்பதற்காக இராக் படைகள் செவ்வாய்க்கிழமை காலையில் தாக்குதலை தொடங்கியது. இதன் மூலம் நகரின் தெற்குப் பகுதியை ராணுவம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது” என்றார்.
ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், “”தீவிரவாதிகளின் வசமிருந்த காவல்துறை அகாதெமி, மருத்துவமனை ஆகியவை மீட்கப்பட்டன என்றார்.