குறுகிய மனப்பான்மையை விட்டு செயற்படும் போது 13வது அரசியல் அமைப்பு, தமிழக மீனவர் பிரச்சினை மற்றும் கச்சத்தீவு பிரச்சினை என்பவற்றை தீர்த்துக் கொள்ள முடியும் என்று இலங்கை தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சுதர்சன் செனவிரட்ன இந்திய நாளிதழ் ஒன்றுக்கு இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
வரலாறுகளை பகிர்ந்து கொள்ளல், இராஜதந்திர நடவடிக்கைகள், பொருளாதார நட்பு மற்றும் அரசியல் நட்பு என்ற அடிப்படையில் இலங்கையும் இந்தியாவும் பிரச்சினைகளுக்கு தீர்வை காணலாம் என்று சுதர்சன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள் என்று அனைவருடனும் தொடர்புகளை பேணவுள்ளதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசத்துடன் தாம் ஆராய்ச்சிக்காக கன்னியாகுமரி மற்றும் புதுக்கோட்டை ஆகிய இடங்களுக்கு சென்றதாக குறிப்பிட்டுள்ள சுதர்சன், அங்குள்ள மக்களின் உபசரிப்பு ஒரு தாய் உடன் இருப்பதை போன்று இருந்தது என்று சுதர்சன் சுட்டிக்காட்டியுள்ளார்.