இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் ஆருப் ராஹா இன்று மாலை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து பேசப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தாம் இலங்கையில் பாதுகாப்பு அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்புக்கள் பயன் தருபவையாக இருந்தன என்று இதன்போது இந்தியத் தளபதி குறிப்பிட்டார்.
கூட்டுப் பயிற்சிகள், பாதுகாப்பு ஒத்துழைப்பு உட்பட்ட விடயத்தானங்கள் இதில் அடங்கியிருந்ததாக ராஹா ஜனாதிபதியிடம் கூறினார்.
ராஹா, கடந்த செவ்வாய்க்கிழமையன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன்பின்னர் அவர், இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உட்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்து உரையாடினார்.
கடந்த ஜனவரியில் இந்திய விமானப்படைத் தளபதியாக பதவியேற்ற ராஹா, தமது உத்தியோகபூர்வ முதல் பயணமாகவே இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.
இந்திய விமானப்படை தளபதியின் சந்திப்புக்களின் போது இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சிங்ஹா உட்பட்ட இந்திய அதிகாரிகள் உடனிருந்தனர்.