மகிந்தர் மோடியை எப்படி வலைக்குள் விழுத்தினார் : ரகசிய தகவல் !

mahinda_modi_002மகிந்த ராஜபக்ஷ இந்திய பிரதமர் மோடியை தனது வலைக்குள் வீழ்த்திவிட்டார் என்று, கொழும்பில் உள்ள உயர்மட்ட அரசியல் பிரமுகர்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது. இனி இந்தியா குறித்து நாம் கவலைகொள்ளத் தேவையில்லை, என்று மகிந்தரின் பரிவாரங்கள் இந்த அரசியல் பிரமுகர்களுக்கு தற்போது கூறிவருகிறார்கள். இதன் பின்னணி என்ன ? எவ்வாறு மோடி மகிந்தரின் பிடியில் சிக்கினார் ? இதோ வெளிவராத தகவல்கள் , அதிர்வின் வாசகர்களுக்காக !

இந்தியாவில் நரேந்திர மோடி வெற்றிபெற்ற உடனே மகிந்தர் சில திட்டங்களை வகுத்தார். பதவி ஏற்கும் நிகழ்வில் மகிந்தர் கலந்துகொள்ளச் சென்றவேளை இலங்கையில் உள்ள முஸ்லீம்கள் மீது சிங்கள இனவாதிகள் தாக்குதல் நடத்திக்கொண்டு இருந்தார்கள். மோடியின் அரசுக்கு பின்னால் “சிவ சேனா” என்னும் இந்து கடும்போக்குவாத அமைப்பு உள்ளது என்பது பலரும் அறிந்த விடையம். அதிலும் சிவ சேன அமைப்பு சொல்வதையே மோடி காதுகொடுத்து கேட்ப்பார் என்பது இந்தியாவில் உள்ள சிறுபிள்ளைக்கே தெரிந்த விடையம். இன் நிலையில் சிவ சேனா அமைப்புக்கு முஸ்லீம்களை கண்டால் ஆகாது. அவர்களே குஜராத்தில் பாபர் மசூதியை இடித்தார்கள். இதில் மோடிக்கும் பங்கு உள்ளது. இதனால் அமெரிக்கா மோடிக்கு விசா வழங்க மறுத்தது. அவரை அவமானப்படுத்தியது. அந்த வஞ்சம் இன்னும் மோடியின் மனதில் உள்ளது.

momahiஅதனால் தான் அமெரிக்கா முன்னெடுக்கும் சர்வதேச விசாரணை மற்றும் ஐ.நாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணை போன்றவற்றிற்கு தான் ஆதரவு வழங்கப்போவது இல்லை என்று மோடி நேரடியாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை இந்தியா சென்ற மகிந்தர் சிவ சேனா அமைப்பினரை ரகசியமாக சந்தித்துள்ளார். தமது நாட்டில் முஸ்லீம்கள் தாக்கப்படுவது குறித்தும் அவர் கூறியுள்ளார். முஸ்லீம்கள் இலங்கையில் தாக்கப்படுவது சிவ சேனாவைப் பொறுத்தவரை வாயில் வெல்லக் கட்டியை போட்ட விடையம் ஆகும். அதனால் அவர்கள் மகிந்தரை மறைமுகமாக பாராட்டியும் உள்ளார்கள். இதேவேளை பாக்கிஸ்தான் இலங்கையில் ஊடுருவியுள்ளது என்ற கருத்து பற்றி மோடி மகிந்தரை விசாரித்துள்ளார். அப்படி எதுவும் இல்லை என்று கூறிய மகிந்தர் , தாம் அதனை கவனித்து கொள்வதாக கூறியுள்ளார் மகிந்தர்.

நாடு திரும்பிய மகிந்தர் முதல் வேலையாக இரண்டு விடையங்களை செய்துள்ளார். அதில் ஒன்று இலங்கையில் விசா முடிந்தும் தங்கியுள்ள நூற்றுக்கணக்கான பாக்கிஸ்தான் பிரஜைகளை நாடு கடத்த பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இரண்டாவது விடையம் பாக்கிஸ்தான் பிரதமரை தொடர்புகொண்டு இலங்கைக்கான பாக்கிஸ்தான் தூதுவரை மாற்றும்படி கூறியுள்ளார். ஏற்கனவே இலங்கையில் உள்ள பாக்கிஸ்தான் நாட்டு தூதுவர், இந்தியாவில் கைதான பாக்கிஸ்தான் உளவாளியோடு நெருங்கிய தொடர்பில் இருந்தார் என்பது இந்தியப் பொலிசாரால் கண்டு பிடிக்கப்பட்டது. இதற்காக அவரையும் இடம் மாற்றியுள்ளார். இவை அனைத்தையும் மகிந்தரால் அடுத்து அடுத்து அதிரடியாக செய்யப்பட்ட வேலைகள். இதனால் மோடியின் மனம் குளிர்ந்துவிட்டதாம். தற்போதைக்கு இந்த 13ம் திருத்த சட்டம் பற்றி நம் எதுவும் பேச மாட்டோம் என்று மோடி கூறியுள்ளார் என்றும் மேலும் அறியப்படுகிறது.

கிடைத்த வாய்ப்பை கோட்டை விட்ட BTF :

லண்டனை தளமாக கொண்டு இயங்கி வரும் பிரித்தானிய தமிழர் பேரவையின் (BTF) உறுப்பினர்கள் சிலர் இந்தியா சென்று BJP கட்சியின் முக்கியஸ்தர் சிலரை 2 வருடங்களுக்கு முன்னர் சந்தித்தார்கள். அப்போது BJP கட்சி இந்தியாவின் எதிர்கட்சியாக இருந்தது. 2014ல் நடைபெறும் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி கண்டு 2014ல் BJP கட்சியே ஆட்சிக்கு வரும் என்று 2012லேயே எதிர்வு கூறப்பட்டது. இதனால் 2012ல் இருந்தே BJP கட்சியோடு ஈழத் தமிழர்கள் நெருங்கிய உறவுகளை வளர்க்கவேண்டும் என்று அதிர்வு இணையம் மேலும் சில தமிழ் தேசிய இணையங்கள் செய்திகளை வெளியிட்டு வந்தது. இதன் பின்னரே BTF அமைப்பில் இருந்து சிலர் சென்று BJP கட்சியின் முக்கிய பிரமுகர்களை சந்தித்தார்கள்.

இதில் சுஷ்மா சுவராஜையும் அவர்கள் சந்தித்தார்கள். ஆனால் இவர்களால் எதனையும் அழுத்தம் திருத்தமாக கூற முடியவில்லை. கைகளில் எந்த அஜண்டாவும் இல்லாமல் அரசியல் அனுபவம் எதுவும் இல்லாமல் வெறுமனவே சென்று சந்தித்தார்கள். கைகளில் கிடைத்திருப்பது பெரிய வாய்ப்பு என்று இவர்களால் அப்போது சிந்தித்து உணர முடியவில்லை. ஏதோ சென்றோம் சந்தித்தோம், 4 புகைப்படங்களை எடுத்து இணையத்தில் போட்டோம், BTF சந்தித்தது என்று 4 செய்தியை வெளியே விட்டு பெயரைப் எடுத்துவிடவேண்டும் என்று கேவலமான அரசியல் செய்தார்கள். இவர்களுக்கு கிடைத்த வாய்ப்பை வேறு யாராவது பெற்றிருந்தால், அவர்கள் அதனை சரியாகப் பயன்படுத்தி இருப்பார்கள். அனுபவம் இல்லாத நபர்களை அனுப்பி கிடைத்த வாய்ப்பையும் நாசமாக்கினார்கள். இவர்கள் சென்று சுஷ்மாவை சந்தித்த சில தினங்களிலேயே அவர் புறப்பட்டு இலங்கை சென்றார்.

அதாவது BTF போன்ற அமைபுகளால் எந்த ஒரு காத்திரமான நகர்வையும் எடுக்க முடியவில்லை. அப்படி அவர்கள் நல்ல நகர்வுகளை மேற்கொண்டு இருந்தால் சுஷ்மா சுவராஜ் இலங்கை செல்வதை தவிர்த்து இருப்பார் அல்லாவா ? அன்று அவரை இலகுவாக பார்க கூடிய வாய்ப்பு இருந்தது. ஆனால் இன்று அவர் இந்தியாவின் வெளியுறவு துறை அமைச்சர். (குதிரைக்கு கொம்பு முளைத்தது போல). இனி அவரை பார்த்து தமிழ் தேசியம் பேச முடியுமா ? தெரியவில்லை. இவ்வாறு சில ஈழத் தமிழர்கள் தமக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தாமல் இழந்து நிற்கிறார்கள். இதுவே எமது போராட்டத்தின் பின்னடைவுக்கு முக்கிய காரணமாக உள்ளது. இளையோர்களை உள்வாங்கி, பழையவர்கள் தமது அனுபவத்தை அவர்களுக்கு சொல்லி, எமது போராட்ட பாதையை சீராக கொண்டு செல்ல ஏதுவாக வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். போலி அரசியல் நடத்துவதை இனியாவது தவிர்ப்பது நல்லது.

அதிர்வுக்காக:

வல்லிபுரத்தான்.

TAGS: