மலேசிய விமானம் நொறுங்கிய தடயம் அழிக்கப்படுகிறது? உக்ரைன் பரபரப்பு குற்றச்சாட்டு

mh17மலேசிய விமானம் நொறுங்கிய இடத்தில் உள்ள தடயத்தை ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் அழித்துவருவதாக உக்ரைன் அரசு பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளது.

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு கடந்த 17ம் திகதி புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் எம்எச்-17 விமானம் ரஷ்ய எல்லையில் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இதில் விமானத்தில் பயணம் செய்த 298 பேரும் பலியாகினர். விமானம் நொறுங்கி விழுந்த இடத்திலிருந்து சுமார் 200 கி.மீ. தொலைவில் உடல்கள், விமானத்தின் பாகங்கள் சிதறி உள்ளன.

இப்பகுதி, உக்ரைன் அரசுக்கு எதிராக போரில் ஈடுபட்டு வரும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கிறது. இதனால், ரஷ்யா ஆதரவுடன் கிளர்ச்சியாளர்கள் விமானத்தை சுட்டு வீழ்த்தியிருப்பதாக உக்ரைன் அரசு கூறி உள்ளது.

இதற்கிடையே, சம்பவ இடத்தை பார்வையிட்ட பிறகு உக்ரைன் அரசு பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளது. அரசு வெளியிட்ட அறிக்கையில், தற்போது நடத்திருப்பது சர்வதேச குற்றமாகும்.

இதனால், ரஷ்ய அரசு உதவியுடன் கிளர்ச்சியாளர்கள் விமானம் விழுந்து கிடக்கும் பகுதியில் தடயங்களை அழித்து வருகின்றனர்.

இதுவரை 38 உடல்களை அவர்கள் அப்புறப்படுத்தி உள்ளனர். அவற்றை, கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள டோனெட்ஸ்க் நகருக்கு கொண்டு சென்று தீவைத்து எரித்துள்ளனர்.

அதே போல விமான சிதறல்களையும் அவர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர் என கூறப்பட்டுள்ளது.