இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற சர்வதேச விசாரணைக்குழு தமது விசாரணை அமர்வுகளை மூன்று நாடுகளில் நடத்தவுள்ளது.
இதன்படி, நியூயோர்க், ஜெனீவா மற்றும் பாங்கொக் ஆகிய நாடுகளிலேயே இந்த அமர்வுகள் நடத்தப்படவுள்ளதாக ஐக்கிய நாடுகளின் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
தமது விசாரணை அமர்வை இலங்கையில் நடத்துவதற்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் இலங்கை அரசாங்கத்திடம் அனுமதியை எதிர்ப்பார்க்கிறது.
எனினும் இலங்கை அரசாங்கம் அதற்கு அனுமதியை வழங்கப் போவதில்லை.
தகவல்களின்படி, இலங்கையின் தமிழர்கள், வட அமெரிக்காவில் இயங்கும் தமிழ் உரிமை குழுக்கள், ஐரோப்பியாவிலும் அவுஸ்திரேலியாவிலும் வசிக்கும் தமிழர்கள் மற்றும் குழுக்கள் நியூயோர்க் விசாரணைகளின் போது தமது சாட்சியங்களை பதிவுசெய்யவுள்ளன.
இதேவேளை இலங்கையில் உள்ளவர்கள் ஸ்கைப், விடியோ கொன்பெரென்ஸ், மற்றும் தொலைபேசிகளின் மூலம் சாட்சியங்களை வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுளளது.
இலங்கையில் உள்ளோர் ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் சாட்சியமளிக்க எவ்வித தடைகளும் இல்லை. எனினும் இலங்கையின் அமைச்சர்கள் சாட்சியமளிப்பவர்களுக்கு எச்சரிக்கையை விடுத்து வருகின்றனர்.