போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டால், வடக்கில் ஏன் இராணுவம் குவிக்கப்படுகிறது?: சரவணபவன் எம்.பி கேள்வி

saravanapavan_001போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது உண்மையென்றால் வடக்கில் ஏன் அவ்வளவு இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வடக்கில் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், சமாதானம் நிலைநாட்டப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

வடக்கில் பாரியளவில் அமைதி நிலவினால் ஏன் அதிகளவான படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் மக்களின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கவே இவ்வாறு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அநீதிக்கு எதிராக 1956ம் ஆண்டுக்கு முன்னதாகவே தமிழ் மக்கள் கிளர்ந்தெழுந்தனர்.

காலத்திற்கு காலம் ஆட்சி செய்த அரசாங்கங்கள் தமிழ் மக்கள் இலங்கையில் வாழ வேண்டுமா என்ற கேள்வியை சிங்கள மக்கள் மனங்களில் ஏற்படுத்தியுள்ளனர்.

பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், ஏன் வடக்கில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது என பாதுகாப்புச் செயலாளரிடம் கேட்கின்றோம்.

தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக கூறும் அரசாங்கம் அதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை என சரவணபவன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற போராட்டமொன்றின் போது, அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

TAGS: