இலங்கையின் ஒரு பகுதி சீனாவிற்கு தாரைவார்ப்பு?

china_sl_flag_001இலங்கையின் ஒரு பகுதி சீனாவிற்கு தாரை வார்க்கப்பட்டள்ளதாக சர்வதேச இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

திருகோணமலை பிரதேசத்தின் சுமார் 1200 ஏக்கர் காணி, சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

நீண்ட கால குத்தகை அடிப்படையில் இவ்வாறு திருகோணமலையின் ஒரு பகுதி சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு மேம்பாட்டு நோக்கிற்காக இந்த காணியை சீனா பயன்படுத்திக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சீனாவிற்கு காணிகள் வழங்குவதனால் சுமார் 450 தமிழ் முஸ்லிம் குடும்பங்கள் பாதிக்கப்படக் கூடுமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

திருகோணமலை இயற்கைத் துறைமுகத்திற்கு அருகாமையில் உள்ள பகுதியில் அதிகளவான முஸ்லிம் பள்ளிவாசல்களும், இந்து ஆலயங்களும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய பசுபிக் பிராந்திய வலயத்தில் ஆதிக்கத்தை செலுத்தும் நோக்கில் சீனா இவ்வாறு இலங்கையின் திருகோணமலைப் பகுதியில் பாதுகாப்பு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள உள்ளதாக கீறீன் லெப்ட் வீக்லி என்ற இணையத்தளம் தெரிவித்துள்ளது.

காணிகளை குத்தகைக்கு விடுவது தொடர்பில் உடன்படிக்கை ஒன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இணையத்தளத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

TAGS: