இனவிகிதாரத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம்

mavai_001யாழ் குடாநாட்டில் இராணுவத்தினருக்கு முகாம்கள் அமைக்க காணிகள் சுவிகரிக்கப்படுவதாக அரசாங்கத்தினால் தொவிக்கப்படுகின்றது. உண்மையில் இராணுவ முகாம் என்ற போர்வையில் சிங்கள குடியேற்றங்களே இந்த மண்ணில் இடம் பெறுகின்றன என் மாவை சேனாதிராசா குறிப்பிட்டார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் காங்கேசன்துறை கிளைத்திறப்பு விழா தெல்லிப்பளை ஆனைக்குட்டி மதவடியில் உள்ள தனியார் இல்லத்தில் இன்று பகல் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுக் செயலாளர் மாவை சேனாதிராசா தலைமையில் நடை பெற்றது.

இந் நிகழ்வில் கலந்துகொண்ட உரையாற்றிய மாவை சேனாதிராசா
எமது மக்கள் நீண்ட காலமாக பரம்பரை பரம்பரையாக வாழந்த பூமியில் வாழ முடியாது அகதி முகாம்களிலும் உறவினர் நண்பர்கள் வாடகை வீடுகளிலும் பயந்த ஒதுங்கி வாழ்கின்றார்கள்.

பரம்பரையாக செய்த விவசாயத்தை, மீன் பிடியை மேற்கொள்ள முடியாது தொழில் இழந்து வாழக்கையை தொலைத்துவிட்டு நாடோடிகளாக காணப்படுகின்றார்கள். இதேவேளை எமது மக்களின் நிலங்களில் வரவிடாது இராணுவம் தடை செய்துவிட்டு அவாகள் அங்க உல்லாச விடுதிகளைக் கட்டி தொழில் நடத்தகின்றார்கள் நீச்சல் தடாகங்களை நீந்துகின்றார்கள்.

இன்று எமது இன விகிதாசாரத்தைக் குறகை;கும் வகையில் அரங்சாங்கம் திட்டமிட்ட முறையில் எமது பகுதிகளில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். எமது மக்கள் இன்று சுமார் இரண்டு லட்சத்திறக்கு மேற்பட்டவதுகள் இந்தியாவில் உள்ள அகதி முகாங்ம்களில் வாழ்ந்து கொண்ட இருக்கின்றார்கள்.

இவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க வேண்டும் என தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். அங்கு சுமார் நூற்றி பதினைந்து முகாம்களில் 68 ஆயிரத்திறக்கு மேற்பட்டவர்கள் வாழ்கின்றார்கள். இதனை ஐக்கிய நாடுகள் சபையும் கூட உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கும் மேலாக மற்றும் சிலர் தனியாக வீடுகளை வாடகைக்குப் பெற்றும் வாழ்கின்றார்கள். இவர்கள் இங்கு வந்து மீண்டும் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேறக் கூடிய நிலமையை இந்தியா ஏற்படுத்தி மீண்டும் இவர்களை தமது சொந்த இடங்களில் குயேற்ற வேண்டும் என்றே நாம் கோருகின்றோம்.

கடந்த காலத்தில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் மக்களுடன் இனைந்து கிழக்கு மாகாணத்தில் மாகாண ஆட்சியை அமைக்க முயன்றோம் ஆனாலும் அது கைகூட வில்லை. இந்த வகையில் முஸ்லீம் மக்கள் தமது துன்பங்களை மறந்து றம்ழான் தினத்தைக் கொண்டாடும் நிலையில் நாம் சில விடயங்களை கூற வேண்டிய தேவையும் அவசியமும் காணப்படுகின்றது.

கடந்த அறுபது வருட காலத்தில் என்றும் இல்லாத அளவுக்கு இன்று சிங்கள அரசும் பௌத்த தேரர்களும் எம் இனத்தை அழிப்பதிலும மற்றும் எமது கலாச்சா அடையாளங்களை இல்லாது செய்வதிலும் கடுமையாக முனைப்புக் காட்டி வருகின்றார்கள்.

மயிலிட்டியில் தந்தை செல்வா காலத்தில் ஒரு துறைமுகம் கட்டப்பட்டு வளமான முறையில் எம்மவர்கள் தொழில் செய்து வந்துள்ளார்கள்; ஒரு காலத்தில் எமது பகுதிகளில் இருந்து முன்னூறுக்கும் மேற்பட்ட லொறிகள் தென்னிலங்கைக்கு மீன் போன்ற கடலுணவுகளை கொண்டு சென்றுள்ளன.

தென்னிலங்கையில் இருந்து வந்த வியாபாரிகளும் கூட எமது மண்ணில் இருந்து பல்வேறு வகையான பொருட்களை வர்த்தக அடிப்படையில் கொண்டு சென்றுள்ளார்கள்.

கடந்த கால தேர்தலின் போது நாம் கூறியதைப் போன்று வடக்கு மாகாண சபையின் அதிகாரங்கள் பற்றியதாகும் முழுமையான அதிகாரத்தை மாகாண சபை கொண்டிராத போதிலும் சில அதிகாரங்களைக் கொண்டுள்ளது.

மத்திய அரசானது கடந்த காலத்தில் மாகாண சபைகளுக்கு இருந்த அதிகாரங்களைக் கூட பறித்தெடுக்கும் நடவடிக்கைகளையே இன்று மேற்க் கொண்டுள்ளது. நிதி விடயம் சம்பந்தமான அதிகாரம் இல்லாத போதிலும் தற்போது ஈரக்கும் கமத்தொழில் அதிகாரம் மற்றும் போக்குவரத்து அதிகாரம் போன்றவற்றையும் ஒற்றையாட்சி அமைப்பின் கீழ் மத்திய அரசாங்கம் பறித்தெடுக்கும் வகையில் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றது.

திவநெகுமதிட்டத்தின் கீழ் பிஸ்கால்வரி போன்றவற்றைச் கூட பறித்தெடுக்கும் செயற்பாட்டில் ஈடபட்டவேளையில் நாம் நீதிமன்றம் சென்றதைத் தொடர்ந்து நீதிமன்றம் அதனை தடை செய்யக் கூடாது என தடுத்துள்ளது.

TAGS: