பிரபாகரனைத் தேடும் தென்பகுதி முஸ்லிம்கள்!

prabakaran_001அண்மையில் நடந்துள்ள அளுத்கம, தர்கா நகர் மற்றும் பேருவளை வன்செயல்களின் எதிரொலி புலிகளின் தேசியத் தலைவர் வே.பிரபாகரனை அப்பகுதி முஸ்லிம்கள் நினைக்கின்றார்கள். தேடுகின்றார்கள்.

சிறுபான்மை இனங்களுக்கு எதிரான வன்முறைகள் எழுகின்ற போதெல்லாம் பிரபாகரனை நினைக்கின்றதை யாராலும் தடுக்க முடியாதுள்ளது.

புலிகள் முஸ்லிம்கள் மீது சில கசப்பான செயல்களைச் செய்திருந்த போதும் இப்போது வடகிழக்கு முஸ்லிம்கள் மட்டுமல்ல ஒட்டு மொத்த முஸ்லிம்களும் தற்போது பிரபாகரன் இல்லாத இடைவெளிதான் இப்போதைய இந்த நெருக்கடிக்கான காரணமாகவுள்ளதாக முஸ்லிம்கள் உணர்கின்றார்கள். முஸ்லிம் அரசியல்வாதிகள் அல்ல.

மக்களின் பாதுகாப்புக் கேடயமாக பிரபாகரன்

யார் எதைச் சொன்னாலும் கடந்த 30 ஆண்டுகளாக வட கிழக்குப் பகுதிகளில் மக்களின் பாதுகாப்புக் கேடயமாக பிரபாகரன் இருந்துள்ளார் என்பது மட்டும் புலனாகின்றது.

பிரபாகரன் வடக்கில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றியது பாரதூரமான செயல்தான், ஆனால் பிரபாகரன் வடக்கில் முஸ்லிம்களைக் கொன்று குவிக்கவில்லை. சில முஸ்லிம்கள் எட்டப்பர் வேலை பார்த்த பின்புதான் முஸ்லிம்கள் வடக்கில் இருந்து முற்றாக வெளியேற்றப்பட்டார்கள் என்பதுதான் உண்மை.

ஆனாலும் வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை வடக்குத் தமிழர்கள் விரும்பவில்லை என்பதுதான் நிஜம்.

ஆனால் கிழக்கில் முஸ்லிம் மக்களை வகைதொகையின்றி கொன்று குவித்தார்கள். காத்தான்குடியில் ஹஜ் புனிதக் கடமை நிறைவேற்றி விட்டு வந்தவர்கள் உட்பட கிழக்கில் அத்தனை கொலைகளையும் செய்தவர்கள் இன்று மாகாண சபையிலும்,மத்திய அரசிலும் கோலோச்சுகின்றார்கள்.

இந்தக் கொலைகாரர்களுடன் இணைந்து கொண்டு முஸ்லிம்கள் கடந்த மாகாண சபையில் ஆட்சி அமைத்துக் கொண்டு குதூகலிக்கவில்லையா?.

பிரபாகரனின் எவ்விதமான உத்தரவுமின்றியே கிழக்கில் அத்தனை கொலைகளையும் செய்துள்ளார்கள். அன்று இந்தக் கொலைகாரர்கள் செய்த படுகொலையால்தான் தமிழ் முஸ்லிம் உறவில் விரிசல் ஏற்பட்டது.

அனால் தமிழ் முஸ்லிம் உறவில் இவ்வளவு பெரிய விரிசலை ஏற்படுத்திவிட்டு இவர்கள் அரசுடன் இணைந்துள்ளார்கள். ஆனால் எங்களைப் பிரித்த மகாபாதகர்கள் இவர்கள்தான்.

இந்தப் படுபாதகர்களுடன் இணைந்து முஸ்லிம்கள் ஆட்சி அமைக்கலாம். ஆனால் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கும் தமிழ் கூட்டமைப்புடன் இணக்க அரசியல் செய்யமாட்டார்களாம்.இது என்ன நியாயம்

முஸ்லிம் விரோதச் சக்திகளுடன் முஸ்லிம்கள் இணக்கமாக இருப்பார்களாம் ஆனால் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கும் கூட்டமைப்பை மட்டும் முஸ்லிம்கள் இன்னும் வேற்றுமையாகப் பார்ப்பதுதான் என்ன வேடிக்கை.

கிழக்கில் நடந்த கொலைக்கு பிரபாகரனுக்கு சம்பந்தமா?

பிரபாகரன் நினைத்திருந்தால் வடக்கில் முஸ்லிம்களைக் கொன்று குவித்திருக்கலாம். ஆனால் அவர் செய்யவில்லை.ஆனால் கிழக்கில் பிரபாகரனுக்குத் தெரியாமல்தான் அத்தனை கொலைகளையும் செய்துள்ளார்கள்.

கிழக்கில் ஏழை எளிய முஸ்லிம் பொலிஸ்காரர்களை தனியாகப் பிரித்து குழி தோண்டிப் புதைத்தவர்கள் இந்த பாதகர்கள்தான். இப்போது இந்தப் படுபாதகர்கள் அரசுடன் ஒட்டிக் கொண்டு கும்மாளம் அடிக்கின்றார்கள்.

அண்மையில் நடந்துள்ள பேருவளை மற்றும் தர்கா நகர் இனவாதச் செயலால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களைச் சந்திக்கச் சென்ற வடமாகாண சபை நியமன உறுப்பினர் அஸ்மினைச் சந்தித்த முஸ்லிம் பெண்கள், புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் எங்களுக்கு இந்த நிலை வந்திருக்காது என்று புலம்பியுள்ளார்கள்.

வடகிழக்கிற்கு அப்பால் இன்று பிரபாகரனைத் தேடும் மக்களாக முஸ்லிம்கள் உள்ளார்கள். காலம் கடந்தாவது மக்களின் காவலனாக பிரபாகரன் இருந்துள்ளார் என்பதை இந்தச் சம்பவம் பறைசாற்றியுள்ளது.

முஸ்லிம்களுக்கு இன்னும் பல பாதிப்புக்கள் வருகின்ற போது பிரபாகரனின் ஞாபகம் வந்து வந்து போகும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை எனலாம்.

-எம்.எம்.நிலாம்டீன்
[email protected].

TAGS: