சிறிலங்காவிற்கான அமெரிக்க தூதர் மிச்சேல் ஜேசிசன் ஐ.நா பாதுகாப்புச் சபையில் அமெரிக்காவின் துணைப் பிரதிநிதியாக நியமிக்கப்ட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்தப் பதவிக்கு இவரது பெயர் முன்மொழியப்பட்டிருந்த நிலையில் அமெரிக்க செனற் இவரது நியமனத்தை உறுதிசெய்துள்ளது. ஏற்கனவே ஐ.நா பாதுகாப்புச்சபையில் அமெரிக்காவின் சார்பில் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக உள்ள சமந்தபாவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவருடன் இணைந்து மிச்சேல் ஜே சிசன் பணியாற்றவுள்ளார்.
மிச்சேல்ஜே சிசனுடன் கடும் முரண்பாட்டை கொண்டுள்ள சிறிலங்கா அரசு இனிவரும் காலங்களில் ஐ.நாவில் பலத்த நெருக்கடிகளை எதிர்கொள்ளும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சபாஷ்! இது ஒரு நல்ல முன்னேற்றம்.தமிழீழ மக்களுக்கு இவரின் மூலம் ஒரு நல்ல தீர்வு பிறக்கட்டும்.படுகொலை செய்யப்பட்ட லட்சகணக்கான தமிழர்களின் ஆத்மா சாந்தியடையட்டும்.
வாழ்க தமிழ்!
வளர்க தமிழினம்!
வெல்க ஈழத் தமிழர் போராட்டம்.
அதுக்கு ஏன் நீங்க ரெண்டு பெரும் அந்த புகை படத்தில் நெருக்கமா இருக்கேங்க ?