வடக்கு பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டாம் என கூட்டமைப்பிடம் இந்தியா கோரவுள்ளது

srilanka indiaவடக்கு பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இந்தியா கோரிக்கை விடுக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு தமிழர் பிரச்சிகைளை சர்வதேச சமூகத்திடம் எடுத்துச் செல்வதில்லை என்ற உத்தரவாதத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் பெற்றுக் கொள்ளும் முயற்சியல் இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதீய ஜனதா கட்சி ஈடுபட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் உள்நாட்டு பிரச்சினைக்கு சர்வதேச தலையீடு அவசியமற்றது என்பதே பாரதீய ஜனதா கட்சியின் நிலைப்பாடு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பாரதீய ஜனதாக கட்சியின் முக்கிய பிரமுகர்களான சுப்ரமணியம் சுவாமி உள்ளிட்டவர்கள், இலங்கைப் பிரச்சினையில் சர்வதேச தலையீடு அவசியமற்றது என வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட பிரதிநிதிகளை இந்த மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சந்தர்ப்பத்தில் வடக்கு விடயங்களை சர்வதேசமயப்படுத்த வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

TAGS: