ஐக்கிய நடுகள் விசாரணைக் குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கத் தயார் என காணாமல் போனவர்களின் பெற்றோர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் விசாரணை நடாத்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை விசாரணைக் குழு ஒன்றை நியமித்துள்ளார்.
இந்த விசாரணைக் குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்க ஆயத்த நிலையில் இருப்பதாக காணாமல் போனவர்களின் பெற்றோர் ஒன்றியம் அறிவித்துள்ளது.
காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஆவணங்கள், சாட்சியங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவிற்கு வழங்கத் தயார் என அந்த ஒன்றியத்தின் அழைப்பாளர் ஆனந்த ஜயமான்ன தெரிவித்துள்ளார்.
தேவையான சாட்சியங்களை திரட்டும் நோக்கில் வடக்கு கிழக்கில் ஏற்கனவே நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடொன்றில் விசாரணைக் குழுவின் பிரதிநிதிகளை சந்திக்க தாம் ஆயத்தமாகி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவின் முன்னிலையில் சாட்சியமளிப்போரை தண்டிக்கப் போவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.