சிறீலங்காவின் தெற்கில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவன் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர் ஒருவர் நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டடிருந்தார். அத்துடன் குறித்த பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கின்ற 10 பேருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்ததுடன் பல்கலை வளாகத்துக்குள் தமிழ் மாணவர்களை விடுதலைப் புலிகள் என சித்தரித்தும் துண்டுப்பிரசுரம் ஒட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ் மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித் தாக்குதலுக்கும் தமிழ் மாணவர்கள் மீது விடுதலைப்புலிகள் இயக்க சாயம் பூசுவதற்கும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் ஆசிரியர் சங்கம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது
மிக கொடூரமான தமிழின தாக்குதல் இன்னும் இலங்கையில் தலைவிரிததாடுகிறது.அதற்கு மேற்கண்ட இனவெறித் தாக்குதல் ஓர் எடுத்துக்காட்டு.தமிழ் ஈழம் என்ற ஓன்று பிறக்காத வரை இந்த மரண வாழ்கையில் இருந்து ஈழத் தமிழருக்கு விடுதலையே இல்லை.மிக கீழ்த்தரமான கொடூரமான எண்ணங்களை கொண்டவன் சிங்களவன்.அக்காலம் தொட்டு இக்காலம் வரை சிங்களவனின் செயலபாடுகள் அகிம்சை,மனிதநேயம்,இனங்களிடையே ஒற்றுமை என்ற கோட்பாடுகளிலிருந்து விலகியே உள்ளது.இனியும் ஒரு இலங்கைக்குள் இரு தேசிய இனம் என்பது சரிப்பட்டு வராது.ஒரு உறைக்குள் இரண்டு கத்திகள்,ஒரு போத்தலில் இரண்டு தேள்கள் என்பதெல்லாம் எக்காலத்திற்கும் எத்தேசத்திற்கும் ஒத்துவராதவை.மாநில சுயாட்சிகுகூட ஒத்துபோக மறுக்கும் இந்த சிங்கள வெறியனோடு எப்படித்தான் தமிழர்கள் பேர் போடா முடியும்?