அடிவாங்காமல் அருந்தப்பில் தப்பிய சிங்கள புத்த பிக்குகள்: பாதுகாப்பாக தப்பியோட்டம் !

monksவாரணாசி செல்வதற்காக சென்னைக்கு வந்த புத்த துறவிகள்- யாத்ரிகர்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இலங்கை அரசின் இராணுவ இணையதளத்தில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா பற்றி சமீபத்தில் அவதூறு கருத்து வெளியாகியது. இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இலங்கைக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்று வருவதையடுத்து வியாபாரம் சுற்றுலா என பல்வேறு நோக்குடன் தமிழகத்திற்கு வரும் சிங்களவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்திற்கு வருகிற இலங்கைவாசிகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசிக்கு புனித யாத்திரை செல்வதற்காக இலங்கையை சேர்ந்த புத்தமத துறவிகள் மற்றும் யாத்ரிகர்கள் 140 பேர் சென்னை வந்தனர்.

அவர்கள் எழும்பூர் கென்னத் லேன் பகுதியில் உள்ள புத்த மடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டிருந்தனர். அங்கிருந்து நேற்று மாலை 140 பேரும் துப்பாக்கி ஏந்திய பொலிஸ் பாதுகாப்போடு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு வேனில் பத்திரமாக அழைத்து வரப்பட்டு ‘கங்கா காவேரி எக்ஸ்பிரஸ்’ ரெயிலில் (12669) வாரணாசிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதேபோன்று இலங்கையிலிருந்து நேற்று மாலையில் 107 பேர் கொண்ட புத்தமத யாத்திரிகர்கள் குழுவினர் விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்து இறங்கினார்கள். அவர்கள் விமான நிலையத்திலிருந்து போலீஸ் பாதுகாப்புடன் சென்டிரல் ரெயில் நிலையம் அழைத்து வரப்பட்டு ‘சென்னை-டெல்லி கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ்’ ரெயிலில் (12615) மத்திய பிரதேச மாநிலம் போபாலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இலங்கையை சேர்ந்த புத்தமத யாத்திரிகர்களின் பாதுகாப்பிற்காக ரெயில்வே பாதுகாப்பு படையினர், ரெயில்வே பொலிசார் மற்றும் மாநகர பொலிசார் என மொத்தம் 100-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்.

துப்பாக்கி ஏந்திய பொலிசாரும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்- இலங்கைக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருவதால் இலங்கைவாசிகளை பாதுகாக்கும் பொருட்டு பலத்த ஏற்பாடுகளை செய்துள்ளோம். இலங்கைவாசிகளை புத்தமடம் மற்றும் விமான நிலையங்களிலிருந்து அழைத்து வந்து ரெயிலில் ஏற்றி அனுப்பும் வரையிலும் 2 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தோம் என்றார். இது மிகவும் சாமர்தியமாகவும் மற்றும் ரகசியமாகவும் நடைபெற்றுள்ளது. இந்த விடையம் தமிழக உணர்வாளர்களுக்கு தெரிந்திருந்தால், சிங்கள புத்தபிக்குகளின் நிலை கவலைக்கிடமாக தான் இருந்திருக்கும். அடி பின்னி எடுத்திருப்பார்கள்.

இந்த நேரத்தில் கூட இவர்கள் யாத்திரை என்று சென்னை செல்கிறார்கள் என்றால் பாருங்களேன்…

TAGS: