போர்க்குற்ற விசாரணைகளின் போது எவராது குற்றம் இழைத்தவராக கண்டுபிடிக்கப்பட்டால், உரிய தண்டனை நிறைவேற்றப்படும் என்று இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பின் ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் போர்க்குற்ற விசாரணைக்காக புதிய வெளிநாட்டு நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து இராணுவத்துக்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லை.
இலங்கை இராணுவம் ஒழுக்கமுள்ள இராணுவம் என்ற அடிப்படையில் அது தமது கடமைகளை உரியமுறையில் நிறைவேற்றும் என்று தயா ரட்நாயக்க குறிப்பிட்டார்.
உலகில் வேறெங்கும் செயற்படாத மிகவும் அபாயகரமான இயக்கத்துடன் இலங்கை இராணுவம் சண்டையிட்டது.
போரின்போது பொதுமக்கள் நலன்கருதி கனரக ஆயுதங்களை இராணுவம் பயன்படுத்தவில்லை. சிறிய ரக ஆயுதங்களை கொண்டே போரில் சண்டையிட்டது.
இதன் காரணமாக இராணுவத்தில் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டன.
சாட்சியங்களுக்கு இடையூறுகளை இராணுவம் ஏற்படுத்தி வருவதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்துள்ள அவர், படையினர் தொடர்பில் வருகின்ற அனைத்து குற்றச்சாட்டுக்களும் உண்மையானவை அல்ல என்று குறிப்பிட்டார்.
எந்த நாதேறிபயலுங்க உண்மையை பெசியிறிகிங்க,எல்லாம் மலைமுலுங்கி திருட்டு பசங்கள் தானே நீங்கள். அப்பா உங்க பதில் எப்படி இருக்கும்!!
நியாயம் ,நீதி பற்றி பேசும் ஈனப்பிரவியே நீங்கள் யாவரும் ஒரு குட்டையியில் ஊறிய மட்டைகள்தான் !