வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஓர் பயங்கரவாதியல்ல என லங்கா சமசமாஜ கட்சியின் தென் மாகாண சபை உறுப்பினர் பெத்தேகம சமித தேரர் தெரிவித்துள்ளார்.
அடிப்படை உரிமைகள் என்பது அனைவருக்கும் சமமானதேயாகும்.
இன அல்லது மதவாத வன்முறைகளை வெடிக்கச் செய்து ஓரமாக இருந்து வேடிக்கை பார்ப்பது பொருத்தமற்றது.
வடக்கு கிழக்கில் பௌதீக ரீதியான அபிவிருத்தி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனினும், பௌதீக அபிவிருத்தியை மக்கள் மனதால் உணரக்கூடிய பின்னணியை அரசாங்கம் ஏற்படுத்தத் தவறியுள்ளது.
வடக்கில் மாகாணசபைத் தேர்தல் நடத்தி முதலமைச்சர் ஒருவர் தெரிவு செய்ய மக்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
வட மாகாண முதலமைச்சராக கடமையாற்றுபவர் முழு இலங்கையினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவர். சர்வதேச ரீதியாகவும் அங்கீகரிக்கப்பட்டவர். சட்டம் தொடர்பில் சிறந்த அறிவாற்றல் உடையவர்.
பயங்கரவாதிகளுடன் விக்னேஸ்வரனுக்கு எவ்வித தொடர்பும் கிடையாது.
எந்த சந்தர்பத்திலும் ஈழக் கோரிக்கையை முன்வைக்க மாட்டார் என்பதே எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும்.
வடக்கு மக்கள் சுதந்திரமாக செயற்பட அனுமதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் இதயங்களில் ஏற்பட்டுள்ள காயங்களை ஆற்றியிருக்க முடியும்.
போர் நிறைவடைந்த உடனேயே படையினர் முகாம்களுக்கு வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும்.
உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடவடிக்கை இதுவாகும்.
போர் இல்லாத காலத்தில் படையினர் வீதிகளில் உோவித் திரிவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
இந்தியா, பாகிஸ்தான், பிரான்ஸ் அல்லது பங்களாதேஸுடன் நாம் போரிடவில்லை.
எமது தேசத்தின் இன்னுமொரு இன சமூகத்தின் இளைஞர்களுடனேயே போரிட்டோம்.
உடனடியாக சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பில் கண்காணிக்க புலனாய்வுப் பிரிவினரை ஈடுபடுத்தியிருக்க வேண்டுமென பெத்தேகம சமித தேரர் சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ளார்.
நல்மதி உள்ளவரின் நல்ல, காருண்யமான கருத்து.