காணாமல் போனோர் தொடர்பான போராடங்களுக்கு தடைகளை ஏற்படுத்த முடியாது என்று காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் பொது அமைப்பு எச்சரித்துள்ளது.
கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது உரையாற்றிய அமைப்பின் இணைப்பாளர் நிமல்கா பெர்ணான்டோ, காணாமல் போனோர் பிரச்சினை இலங்கையின் அனைத்து பகுதிகளுக்கும் உரிய பிரச்சினையாகும் என்று சுட்டிக்காட்டினார்.
அது இலங்கையில் உள்ள தமிழ், சிங்கள தாய்மாருடன் ஒன்றித்து போயுள்ள ஒரு வரலாறாக மாறியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
அண்மையில் மருதானையில் காணாமல் போனோரின் உறவினர்கள் நடத்திய கூட்டம் ஒன்று குழப்பப்பட்டது.
இது மதகுருமாரை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறான கூட்டங்கள் குழப்பப்படும் போது அதற்கு பல்வேறு பொய்யான காரணங்கள் கூறப்படுகின்றன. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
காணாமல் போனோரின் உறவினர்கள் தமது உறவுகளின் நிலைமை தொடர்பில் அறிந்து கொள்வதற்கு உரிமையை கொண்டிருக்கிறார்கள்.
இது அவர்களின் ஜனநாயக உரிமையாகும். இந்த ஜனநாயக உரிமையை மதகுருமாரைக் கொண்டு தடுப்பது வெட்கமான செயல் என்று நிமல்கா குறிப்பிட்டார்.
இதேவேளை நிமல்காவை பரிகசிக்கும் வகையில் அண்மையில் புறக்கோட்டை பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
உலகில் வேறெந்த புத்த மத நாட்டிலும் அரசு இந்த அகிம்சை மதத்தை இதுபோன்ற மனித உரிமை எதிர்ப்பு, மனிதநேய மறுப்புக் காரணங்களுக்குப் பயன் படுத்துவதில்லை. இங்கு தின்றுக் கொளுத்த சில பிக்குகள் 5தடி குண்டர்களுக்கு நல்ல ஈடாக உள்ளனர். புத்தமகான் கண்ணீர் கசிவார்.