காணாமல் போனவர்கள் தொடர்பிலான முறைப்பாடுகள் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள மூன்று சட்ட மேதைகளை உள்ளடக்கிய சர்வதேச நிபுணர்கள் குழு, நாட்டை வந்தடைந்துள்ளது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் 4.359 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான ஆணையுடன் இந்த விசாரணை ஆணைக்குழு 2013 ஓகஸ்ட் 15ஆம் திகதிய 182342 வர்த்தமானி அறிவித்தலின் மூலம் நியமிக்கப்பட்டது.
சேர் டெஸ்மன் டி சில்வா தலைமையிலான இந்தக் குழுவில் சேர் ஜெப்ரி நைஸ் மற்றும் பேராசிரியர் டேவிட் எம். கிரேன் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
இந்த ஆலோசனைக் குழுவிடம் ஆணைக்குழுவின் பணிகளுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பாக அவர்களது வேண்டுகோளின் பேரில் விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு ஆலாசனை வழங்கும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தலைமையிலான குழுவினரையும் அவர்கள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
ஜனாதிபதி ஆணைக்குழுவில், திருமதி பிரியந்தி சுரஞ்சனா வைத்தியரத்ன, திருமதி மனோ ராமநாதன் ஆகியோர் இவ்வாணைக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.