தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் நில அபகரிப்புக்கள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது – எஸ்.சஜீவன்

sanjeeவலி.வடக்கில் உள்ள காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையினை இடித்தழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினர், தொழிற்சாலையில் உள்ள இரும்புப் பொருட்களை இரவோடு இரவாக தென்னிலங்கைக்கு கடத்திச் செல்கின்றனர் என்று வலி.வடக்கு மீள்குடியேற்றக் குழுவித் தலைவர் எஸ்.சஜீவன் தெரிவித்துள்ளார்.

மேலும் வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து முகாங்களில் தங்கியுள்ள மக்களை அங்கேயே நிரந்தரமாக குடியமர்த்தவும் திட்டமிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று நண்பகல் யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-

தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் நில அபகரிப்புக்கள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. குறிப்பாக எங்களுடைய வலி.வடக்கில் உள்ள 24 கிராம சேவகர் பிரிவில் குடியேற வேண்டிய 9948 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் இன்னும் மீள்குடியேறுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டு இன்றுவரைக்கும் முகாங்களிலும், தனியார் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றார்கள்.

இவ்வாறு முகாங்களில் உள்ள மக்களை அந்த முகாங்களிலேயே நிரந்தரமா குடியமர்த்துவதற்கான முயட்சிகள் தற்போது சிறிலங்கா அரசாங்கத்தினால் செய்யப்பட்டு வருகின்றது. குறிப்பாக முகாங்கள் அமைந்துள்ள காணிகளை உரிமையாளர்களிடம் இருந்து பணம் கொடுத்து வாங்குதவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந் நடவடிக்கையினை மேற்கொண்டுவரும் சிறிலங்கா இராணுவத்தினர் தெல்லிப்பளை பிரதேச செயலர் ஊடாக விபரங்களை திரட்டி முகாங்கள் அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையலில் மக்களிடம் இருந்து உயர்பாதுகாப்பு வலையம் என்ற போர்வையில் அபகரித்து வைத்துள்ள காணிகளில் தங்கியுள்ள சிறிலங்கா இராணுவத்தினர் தமக்கு தேவையான வற்றை செய்து வருகின்றார்கள்.

குறிப்பாக விளையாட்டு மைதானம், ஜனாதிபதி மாளிகை, கோட்டல்கள், விவசாயங்கள் செய்து கொண்டு இருக்கின்றார்கள். இவ்வாறு இராணுவத்தினர் சகல வசதிகளோடு இருந்து கொண்டு அந்தக் காணிகளின் சொந்தக் காரர்களை நிர்கதியாக்கியுள்ளனர்.

இதற்கு முன் இருந்த இராணுவ தளபதி செய்தவற்றிற்கு ஏட்டிக்குப் போட்டியாக புதிதாக யாழ்.வந்த கட்டளைத்தளபதியும் செயற்பட்டு வருகின்றார்.

எவ்வறவுக்கு எவ்வளவு தூரம் தமிழ் மக்களை நடுத்தெருவில் விடலாமேல அந்தளவிற்கு அவர்களுடைய செயற்பாடுகள் அமைந்து கொண்டிருக்கின்றது. இது கண்டிக்கப்பட வேண்டியது.

ஏற்கனவே இராணுவத்தினால் கையகப்படுத்தி வைக்கப்பட்டிருக்கின்ற காணிகளில் உள்ள மக்களுடை சொத்தக்கள், ஆலயங்கள், பாடசாலைகள் இடித்து மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது புதிய தொரு பிரச்சினை அங்கு ஏற்பபட்டுள்ளது.

வலி.வடக்கு மக்களுடைய சொத்தாக இருக்கின்ற ஏறத்தாள 3,500 பேர் வேலைசெய்யக் கூடிய காங்கேசன்துறை சீமொந்து ஆலை தற்போது இடிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.

கடந்த ஒரு வாரமாக இந் நடவடிக்கையினை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றார்கள். எங்களுடைய சொத்துக்களை திட்டமிட்டு இராணுவம் அழிக்கின்றது.

இவ்விடிப்பு நடவடிக்கை தொடர்பாக வலி.வடக்குப் பிரதேச சபைக்கு அறிவிக்கப்படவில்லை. மேலும் சீமெந்து தொழிற்சாலையில் உள்ள இருப்புக் கேடர்கள் மற்றும் இரும்புப் பொருட்கள் இரவோடு இரவா தென்னிலங்கைக்கு கடத்திச் செல்லப்பட்டுகின்றது.

இவ்விரும்புக் கடத்தலிற்கு சிறிலங்கா இராணுவம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.

இவ்விடையத்தில் வடமாகாண சபையும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தகுந்த நடவடிக்கை எடுத்து மக்களுடைய சொத்துக்களை காப்பாற்ற வேண்டும் என்றார்.

TAGS: