கதிர்காமக் கந்தனையும் விட்டு வைக்காத ராஜபக்ஷவினர்: சில்லறைகளை அள்ளும் சஷீந்திர

kathirka_kanthan_001கதிர்காம முருகன் ஆலயத்தில் உள்ள உண்டியல்களில் சேர்ந்து வரும் காணிக்கைகளில் 80 வீதத்திற்கும் அதிகமான தொகை சாக்கு பைகளில் போடப்பட்டு ஆலயத்திற்கு வெளியில் எடுத்துச் செல்லப்பவதாக ஆலயத்தின் பூசகர்கள் தெரிவித்துள்ளனர்.

கதிர்காம ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே சஷீந்திர ராஜபக்ஷவின் தேர்தல் பிரசார செலவுகளுக்காக உண்டியில் பக்தர்களால் போடப்படும் சில்லறைகள் மற்றும் நாணயத்தாள்கள் இவ்வாறு எடுத்துச் செல்லப்படுவதாகவும் அவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

பக்தர்கள் பூசைத் தட்டுகளில் வைத்து வழங்கும் காணிக்கைகளில் 50 வீதத்தை இதுவரை பெற்று வந்த பஸ்நாயக்க நிலமே, தற்போது அதனை 80 வீதமாக அதிகரித்து கொண்டுள்ளதாகவும் தேர்தல் பிரசார செலவுகளுக்காக அவர் இவ்வாறு ஆலய பணத்தை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக ஆலய நிர்வாகம் மற்றும் ஊழியர்களின் சம்பளம் போன்றவற்றை செலுத்துவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.

அரசியல் அதிகாரத்திற்கு வரும் முன்னர் சஷீந்திர ராஜபக்ஷ மெட்ரோபொலிடன் என்ற நிறுவனத்தில் சாதாரண நிறைவேற்று விற்பனை அதிகாரியாக இருந்தாகவும் அரசியல் அதிகாரம் மற்றும் கதிர்காம ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே ஆகியவற்றினால் கோடிஸ்வரராக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.

சஷீந்திர ராஜபக்ஷ தனது தேர்தல் பிரசார செலவுகளுக்காக 500 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளார்.

இதில் பெருந் தொகையை அப்பாவி மக்களின் வாக்குகளை பெறுவதற்காக இலவசங்களை கொடுப்பதற்கு ஒதுக்கியுள்ளார்.

எது எப்படியிருப்பினும் இம்முறை ஊவா மாகாண சபைத் தேர்தலில் சஷீந்திர ராஜபக்ஷவிற்கு கிடைக்கும் வாக்குகள் 50 வீதத்தில் குறையக் கூடும் என அரசாங்கத்தின் ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

TAGS: