இடம்பெயர்ந்த மக்களுக்கான இந்தியாவின் வீட்டுத் திட்டத்தின் கீழ் சிறிலங்காவின் இராணுவத்தினருக்கும் வீடுகளை ஒதுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இது தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹாவிடம் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
இடம்பெயர்ந்த மக்களுக்கான 50 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை கட்டம் கட்டமாக இந்திய அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் வன்னியில் சிங்கள படைத்தரப்பினருக்கு இந்த வேலைத்திட்டத்தின் கீழ் வீடுகளை ஒதுக்க வேண்டும் என்று பசில் ராஜபக்ஷவினால் கோரப்பட்டுள்ளது.
எனினும் இந்திய உயர்தானிகர் இதற்கு உடன்டியாக பதில் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.