யாழில் இராணுவத்தில் இணைந்த தமிழ் வாலிபர்களின் சமூகவிரோத செயற்பாடு – அதிர்ந்துபோயுள்ள தமிழ் சமூகம்

jffஈச்சமோட்டை மற்றும் பாசையூர் பகுதிகளில் இருந்து இராணுவத்திற்கு இணைந்த தமிழ் இளைஞர்கள் தற்போது விடுமுறையில் வீடுகளுக்கு வந்துள்ளனர். இவ்வாறு வந்தவர்கள் தாங்கள் இராணுவம் என்றும் தங்களை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்றும் அடாவடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த வகையில் அவர்கள் தங்கள் சமூகத்தை தேர்ந்த பெண் பிள்ளைகளுடன் வரம்பு மீறி சேட்டை விட்டுள்ளனர். இதனையறிந்த பெற்றோர் ஈச்சமோட்டை சனசமூக நிலைய நிர்வாகத்திடம் தெரிவிக்க சனசமூக நிர்வாகம் குறித்த தமிழ் வாலிபர்களை தட்டிக்கேட்டனர். அதனையடுத்து ஈச்சமோட்டை மற்றும் பாசையூர் இளைஞர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது.

அதனை அடிப்படையாக கொண்டு இந்த சனசமூக நிலையம் உடைக்கப்பட்டதுடன் தளபாடங்களும் பொருட்களும் சேதமாக்கப்பட்டதுமாகும். மேலும் தங்களுடன் முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டால் பின்விளைவுகளை எதிர்நோக்க வேண்டும் என்றும், நாங்கள் இராணுவம் எங்களுக்கு இங்குள்ள இராணுவத்தினர் உதவிகளை மேற்கொள்வார்கள் எள்றும் அவர்கள் மிரட்டி வருவதாக அப்பகுதி மக்கள் மேலும் தெரிவித்துள்ளதுடன் குறித்த விடயங்களை பொலிஸ் நிலையத்திலும் பதிவு செய்துள்ளனர்.

குறித்த வாலிபர்கள் தங்களையும் தங்கள் சமூக நோக்கங்களையும் மறந்து இப்படியாக வரம்பு மீறி செயற்படுவது குறித்த ஈச்சமோட்டை மற்றும் பாசையூர் சமூகத்திற்கு மட்டும் அல்லாமல் ஒட்டு மொத்த தமிழ் சமூகத்திற்குமே அவமானமாக கருதப்படுகின்றது.

TAGS: