திருகோணமலை துறைமுக பகுதியில் 1200 ஏக்கர் நிலத்தை சீனாவுக்கு வழங்குவதற்கு கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு!

tna_logoதிருகோணமலை துறைமுகம் அமைந்துள்ள பகுதியிலுள்ள சுமார் 1200 ஏக்கர் நிலத்தை,  நீண்ட கால குத்தகை அடிப்படையில் சீனாவுக்கு வழங்குவது தொடர்பான விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு  தனது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் செவ்வாய்  மற்றும்  புதன்கிழமைகளில் கூடவிருக்கும் கிழக்கு மாகாண சபையின் இம்மாத அமர்வின் போது, இவ்விடயம் தொடர்பில்  விவாதிப்பதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் கே. துரைராஜசிங்கம் தனி நபர் பிரேரணையொன்றை   சபையில்  முன் வைத்துள்ளார்.

இது தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சரின்  பதிலை எதிர்பார்த்து அவர் முன்னறிவித்தல் கொடுத்துள்ள தனி நபர் பிரேரணையில் தெரிவிக்கப்ட்டுள்ளதாவது,

திருகோணமலை துறைமுகம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 1200 ஏக்கர் நிலம் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்துக்காக சீன நாட்டிற்கு நீண்ட கால குத்தகையில் வழங்கப்படவிருப்பதை கிழக்கு மாகாண முதலமைச்சர் அறிவாரா?

இது தொடர்பாக  கிழக்கு முதலமைச்சருடன் அல்லது கிழக்கு மாகாண அமைச்சர்கள் வாரியத்துடன் ஆலோசிக்கப்பட்டதா?  போன்ற வினாக்களை உள்ளடக்கிய அவரது பிரேரணையில், குறித்த காணி குத்தகைக்கு வழங்கப்படும் நிலை ஏற்படும் போது 450 இற்கும் மேற்பட்ட தமிழ், முஸ்லிம் குடும்பங்கள் பாதிக்கப்படுவதோடு, இந்து,இஸ்லாமிய  மத வழிபாட்டு தலங்களும் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளதென்றும் அவரால் முன் வைக்கப்பட்டுள்ள அந்தப் பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

TAGS: