மத்திய கிழக்குக்கு இலங்கையிலிருந்து மனித உடல் அவயங்களை கடத்தப்படுகின்றன!- நியூயோர்க் டைம்ஸ்

kidney-exportநியூயோர்க் டைம்ஸ் செய்தி ஒன்றின்படி மத்திய கிழக்குக்காக மனித உடல் அவயவங்களை கொள்வனவு செய்யும், முக்கிய இடமாக இலங்கை உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி இஸ்ரேலை சேர்ந்த ஒப்ஹிரா டொரின் என்ற பெண் இலங்கையில் உள்ள முன்னாள் காப்புறுதி முகவரிடம் இலங்கையில் இருந்து சிறுநீரகம் ஒன்றை கொள்வனவு செய்யுமாறு உத்தரவிட்டிருந்த சம்பவத்தை அடுத்தே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த முன்னாள் காப்புறுதி முகவர் நீண்டகாலமாக உடல் அவயவங்களை கடத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில் சாண்ட்லர் என்ற இந்த முகவர் மூலம் டொரின் சிறுநீரக கொள்வனவுக்காக 200,000 டொலர்களை இலங்கைக்கு அனுப்பிய விடயமும் வெளியாகியுள்ளது.

இந்த சிறுநீரக கொள்வனவு தொடர்பில், இஸ்ரேல் பொலிஸார் வொல்மன் என்பவரையும் சாண்டலர் என்பவரையும் கைதுசெய்துள்ளனர் என்று நியூயோர்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே 2012 ஆம் ஆண்டு டெக்ஸாஸ் கார் சாரதியான 83 வயதான ஜோன் வைஸ்னர் என்பவர், சாண்டலரிடம் இலங்கையில் உடல் அவயவ மாற்றுக்காக 330,000 டொலர்களை வழங்கியதாக நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

எனினும் இந்த கொள்வனவு இடம்பெறுவதற்கு முன்னர் சாண்டலர் இஸ்ரேலிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டமை காரணமாக வைஸ்னர் வழங்கிய ஒரு தொகை பணம் சாண்டலரிடம் இருந்து இஸ்ரேலிய பொலிஸாரால் மீட்கப்பட்டது.

இதேவேளை இலங்கையை தவிர இந்தியா, பாகிஸ்தான், கிழக்கு ஐரோப்பா போன்ற இடங்களும் அவயவ கடத்தல் இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

TAGS: