சிறிலங்காவுக்கு எதிராக அனைத்துலக பொருளாதார தடையை எதிர்பார்க்கும் ஐரோப்பிய நிதி நிறுவனங்கள்!

EU-flagEசிறிலங்காவுக்கு எதிராக அனைத்துலக பொருளாதார, வர்த்தக, நிதித் தடைகள் அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கும், ஐரோப்பிய ஏற்றுமதி கடன் வழங்கும் நிறுவனங்கள், தமது வரைவு உடன்பாடுகளில், தடைகள் குறித்த உட்பிரிவுகளை சேர்க்கத் தொடங்கியுள்ளன.

இதற்கமைய, சிறிலங்கா மீது பொருளாதாரத் தடையோ கட்டுப்பாடுகளோ விதிக்கப்பட்டால், ஏற்றுமதிக்கடன் காப்புறுதிகள் இடைநிறுத்தப்படும்.

இதன் விளைவாக, கடன் ஆபத்தைச் சுட்டிக்காட்டி கடன்களுக்காக வட்டி வீதங்களை அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது சிறிலங்காவுக்குப் பாதகமாக அமையும் என்றும் கருதப்படுகிறது.

சிறிலங்காவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுவதற்கான சூழல் தற்போது தென்படாத நிலையிலும், ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்துக்கமைய, மேற்கொள்ளப்படும் போர்க்குற்ற விசாரணையின் விளைவாக, இத்தகைய தடைகைள் விதிக்கப்படலாம் என்று ஐரோப்பிய கடன் வழங்கும் நிறுவனங்கள் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.

ஐ.நா சாசனம் மற்றும் பிரகடனங்களை மீறிச் செயற்பட்டதற்காக ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்காவும் இணைந்து, சிரியா, வடகொரியா, ஈரான், ரஸ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக, பொருளாதாரத் தடைகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்று சிறிலங்கா மீதும் பொருளாதாரத் தடை அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமது உடன்பாடுகளில் அதுகுறித்த உட்பிரிவுகளையும் ஐரோப்பிய கடன் வழங்கும் நிறுவனங்கள் சேர்க்கத் தொடங்கியுள்ளன.

இதற்கு சிறிலங்கா அரசாங்கத்தின் தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

TAGS: