இதுதான் இன்றைய உலகத தமிழர்களின் சவால்.! ஆதி தமிழன் .பிறகு திராவிடன் என்ற பிரிவில் எந்த குறிப்பிட சமயத்துக்கும் சொந்தமில்லாமல் சமயத்தை (நேரம்) பார்த்து தமிழர்கள் கோட்டையில் பூந்து சுகம் காணும் கொட்டங்களை அடக்வே உலகத தமிழர் பாதுகாப்பு இயக்கம்.
உலகத்தலைவர்களை காத்திடுமா உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்று கடந்த 18/8/2014 தமிழ் மலரில் கேள்வி கேட்டிருந்தார் பண்டார் ஸ்ப்ரிங் ஹில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத தலைவர்.திரு மா .சசாசி மாணிக்கம் அவர்கள்.
உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கதின் நோக்கம் நீங்கள் நினைப்பது போல தலைவர்கள் மக்களை ஏமாற்றி சண்டைக்கு அனுப்புவது அல்ல. ம இ கா ,கோவில் ,பள்ளிகூடங்கள் போல மக்களிடம் வசூல் செய்து வாயில், வயிற்றில், இரண்டாம் வீடுகளுக்கு போட்டுககொள்வது அல்ல!
தமிழர்கள் குறித்த பின் நோக்கு வரலாறு அறிந்து போதித்தல் / முன்னோக்கு குறித்த பாதுக்காப்பு சிந்தனை தெளிவு அடைதல். இதுவே இன்றைய பாதுகாப்பு சிந்தனை.
நீங்கள் உங்கள் செய்தியில் குறிப்பிட்ட வர்ணனைகள் யாவும் அரசியல் ரீதியிலும், சமூக சங்கங்கள் ரீதியுலும் ஒரே பித்தலாட்டமாய் போய் சமுதாயத்தை இதரவர்கள் நாமம் போட்ட பட்டியலில் நாங்கள் மெதிப்பட தயராக இல்லை.
கடந்த ஆண்டு மட்டும் பாரிசன் இதுவரை 540 மில்லியனும் பாகாதான் இதுவரை 200 மில்லியனும் இந்தியனுக்கு தந்தார்களாம் . தமிழர்கள் பட்டியலில் ஈசல் போல ஏய்ச்சி தின்னவர்கள் பட்டியல் இதுவரை வெளி இடாக்க் காரம் ஏன்? உங்களை போன்ற அரசியல்( ஊனர்கள்) வாதிகளுக்குதான் வெளிச்சம்.
உண்மையில் தமிழச்சி காமாச்சி உரையில் ” நாமெல்லாம் மலேசியா தமிழர்கள் இந்தியர்கள் அல்ல” என்ற உண்மை வெளிப்பாட்டை எதிர்த்து நீங்கள் பத்திரிகையில் “நாமெல்லாம் மலேசியா இந்தியர்கள்” செய்தி எழுதி இருந்தீர்கள். அதற்கு நான் “இல்லை நாங்கள் மலேசியா தமிழர்கள்தான்” இதுதான் எங்கள் பாதுக்காப்பு போராட்டம் என்று பதில் தந்தேன் . அதற்கு நீங்கள் இப்போது கொள்ளை புறத்தில் வேலி கிழித்து எங்கள இயக்கத்தை மேய்ந்து இருக்றீர்கள்.
நீங்கள் ஒரு ஆசிரியர் என்றும் ம இ கா தலைவர் என்றும் அறிகிறேன்.இதில் கோவில் தலைவராகவும் உள்ளீராம்.
பாதுகாப்பு என்ற வார்த்தையின் அர்த்தம் உங்கள் சிறிய வாத்தியான் சிந்தனைக்கு விளங்காமல் போனால் நீங்கள் எங்ககளிடம் கற்க, கேற்க வேண்டும். எங்கள் இயக்க கொள்கை புரியாமல் உளறக்கூடாது. இப்படிதான் உங்கள் முன்னால் ம இ கா தலைவனும் கேட்டான்.
பாதுக்காப்பு என்றால் சிந்தனையில் இன பாதுக்காப்பு அக்கறை வேண்டும். உனக்கு அது கிடையாது காரணம் உனக்கும் தமிழர் இனத்துக்கும் உறவே இல்லை. ஆனால் தமிழர்களை காட்டிக்கொடுத்து
அவர்களுடையதை பிச்சிக்க படைத்த திராவிட இடையர்கள் நீங்கள். தமிழ் படிப்பீர்கள் ,ஆசிரியர் வேலை செய்வீர்கள் , மாடு டின்ன்பீர்கள் கோவில் தலைவர்கள் ஆவீர்கள் ,ம இ கா வில் ஓட்டை போடுவீர்கள் இந்தியன் என்று கோசம் போடுவீர்கள் ..வீடுதோறும் மட்டும் மஞ்சள் துணி போட்டு வேட்டு வைப்பீர்கள்.
சமீபத்தில் கூட தமிழ்ப்பள்ளி பிள்ளைகள் பற்றி எழுதி இருந்தீர்கள். நீங்கள் ஒரு ஆசிரியர்தானே ? நீங்களே உங்களை பார்த்து கேற்க வேண்டிய கேள்வியை யாரை பார்த்து கேட்டீர்கள் ?வெக்கமா இல்லையா? தின்பதெல்லாம் தமிழ் சோறு, சிந்தனை மட்டும் மலையாள மாங்காய்த்தனமா? சசாசி!
2013- 2025 வரைக்குமான கல்வி கொள்கை மன்னாங்கட்டி என்றெல்லாம் தமிழ்ப்பள்ளிக்கும் UPSR /PT 3 என்றெல்லாம் குழப்பி தமிழ் மொழிக்கு ஆப்பு அடிச்சானுங்க உங்கள் மலையாள ,தெலுங்கன் உங்கள் வாதிய்யான் அதிகாரிகள் வாத்து கூட்டங்கள் . என்ன செய்தீர்கள்.
இதை எல்லாம் பார்த்துகொண்டு ஆய்வுகள் செய்வதுதான் தமிழர் பாதுகாப்பு இயக்கம். இதுக்கெல்லாம் காசு உங்க அப்பனா தருவான்? கேள்வி கேக்க வக்கு இருந்தால் முதலில் “சிந்திக்கனும்” அதுக்குதான் எங்கள் பாதுகாப்பு .சொம்மா கோழி போல நானும் முட்ட போட்டேன் என்று காலையில் கொக்கரித்து விட்டு மறுபடி முட்ட போட …..முயற்சி பண்ணககூடாது? புரியும் என்று நினைக்கிறேன் தெரியாவிட்டால் அன்வாரிடம் கேக்கவும்.
எங்களுக்கு சிந்தனை சொல்ல உனக்கு அறிவு போதாது.எங்கள் உலக இணைப்பு உனக்கு தெரியாது .பழ நெடுமாறன் தமிழர் தேசியம் , சீமான் நாம் தமிழர், தமிழர் களம் , தமிழ் தேசம் ,மலேசியா தமிழர் சார்ந்த இயக்கங்கள் ,தமிழ் ஈழம் என்று எங்கள் இயக்கம் தமிழர் சிந்தனை பாதுகாப்பில் இணைந்துள்ளோம். எங்களுக்கு வேண்டியதை தேடி வருகிறோம் . உங்கள் ஊனமான பழைய போக்கிரித்தனம் ஏமாற்றி வசூல்தனம் எல்லாம் எங்களுக்கு தேவை இல்லை. கிடையாது.
ஏன் ஸ்ரீ முருகன் நிலையம் 27 மில்லியனை சமுதாயத்தை காட்டி வாங்கினார்கள் அவர்களை பார்த்து கேக்க வேண்டிய கேள்வியை எங்களிடம் கேக்க கேவலமாய் இல்லையா? இன்சூரன்ஸ் , YSS அறவாரியம், கலைஞர்கள் நிதி என்று எம்மாற்று வேலைகள்.இன்னும் சோதியோடு கிரிம்சன் ஊழல் ஏலம் எல்லாம் எழுத வேண்டுமா?
உன் கேள்வியை மைகாவை தின்னவனை கேள். டெலிகொம்,தெநாகா, டோனியை கேள், ஞனலிஙகதை கேள்.விஜென்றனை கேள். செல்வனாதனை கேள். ராம ஐயரை கேள். வெல்பாரியை கேள். கூடி கெடுத்து மலேசியா தமிழர்களை மாற்றனுக்கு ஓட்டை போட்ட வேலை கேள்.
அமைதியாய் எங்கள் இன பாதுக்காப்பு தேடி எங்கள் பகைவன் என்றோ மறைந்தான் இன்று திராவிடன் திமிரால் வந்துள்ள புதிய ஆபத்தை வெல்ல களம் காணவுள்ள எங்களை நீ திசை மாற்றி சீண்ட வேண்டாம்.
தமிழர்கள் அறமும் வீரமும் வெல்ல பாதுகாப்பு தேடி போகிறோம்.தமிழன் நாடு ஈழம் உரிமைதான் எங்கள் பாதுக்காப்பு. BN பாகாதான் எச்சில் சோற்றுக்கு அரசியல் நடத்த வில்லை. உலகத்தமிழனை தட்டி எழுப்ப தீட்டும் சங்கோசை.” பாதுகாப்பு” என்பதின் பொருள் புரிந்து பேசவும், எழுதவும் இல்லையேல் சங்கு கழியும்!
தமிழன் வரலாறு தெரியாமல் நாங்கள் பாதுகாப்பு வலயம் பின்னவில்லை…மீண்டும் ஒரு வரம்பு எழுதவே பாதுகாப்பு.
இதில் இதரவர்களுக்கு இனி இடம் இல்லை “தாய் வழி தமிழன்
தமிழ் வழி தமிழன்” இதர மொழியான் அவர் அவன் மொழியை பார்க்கட்டும்.
உணர்வில் தமிழனாய் உயிரும் கொடுப்போம்
புணர்வின் செயலால் புரிவோம் தமிழ் பணி இணக்கம்.
இது எங்கள் மனக்குரல்! இதோ எங்கள் இலக்கு !!
உலக அரங்கில் தமிழர் என்ற பழந்தமிழர் வார்த்தை இடம் பெற
பாதுகாப்பு வேண்டும்.
தமிழ் நாடு என்ற மொழிவாரி அழுத்தம் மாறி தமிழர் நாடு என்ற இனம் காக்கும் பாதுகாப்பு வேண்டும்
தமிழ் ஈழம் மலர தமிழர் நாடு மட்டுமே நம் இலக்கு
தமிழ் ஈழம் தமிழர்களை உலக நாடுகள் ஏற்று அவர்களுக்கு
அவரவர் வாழ் நாடுகளில் அகதிகள் நீக்கி பிரஜை உரிமை தரவேண்டும்
தமிழர் வாழும் அவரவர் நாடுகளில் தமிழர் தேசியம் என்ற அரசியல் கட்சிகள் தோற்றுவிக்க வேண்டும்.
12 கோடி தமிழர்கள் உலக தர வங்கி நடத்த தமிழ் தலைவன் உருவாக வேண்டும்
உலக தமிழர் தேசியம் எனும் கலாச்சார மையம் வேண்டும்
உலகில் தமிழன் தனி சிறப்பு பெற தமிழன் இண்டியன் பட்டியலில் இருந்து விடுபட வேண்டும்
தமிழ் நமது தாய் மொழி என்ற உலக விழா தொடுக்க வேண்டும்
தமிழ் உலக மொழி என்பதால்.உலக நாடுகள் அதன் பல்கலை கழக உரிமங்களில் தமிழ் பயிலும் ஆய்வுப்பிரிவுகள் நடத்திட வேண்டும் அதில் தமிழ் சென்செளர்கள் நியமனங்கள் இடம் பெற வேண்டும்
தமிழ் நாட்டுக்கு வெளியே தமிழ் இடைநிலை பள்ளிகள் அமைவதற்கான உருமாற்று திட்டங்கள் வேண்டும்
எல்லா ஜாதிகளையும் அழித்து தமிழன் என்ற ஒரே ஜாதியும் எம்மதமும் சம்மதம் எனும் சமய நெறியும் வளர்க்க வேண்டும்.
தமிழன் பிறப்பு பத்திரங்களில் தமிழன் என்ற பதிவு வேண்டும்
தமிழன் தமிழனுக்காகா US 1.00 மாதந்திர வங்கி சேமிப்பு செய்ய வேண்டும்
தமிழனுக்கு தனி தீவு தனி குடியரசு அமைக்க உலக நாடுகளை கேக்க வேண்டும்
தமிழன் என்ற தொலை காட்சி நிலையம் அமைக்க வேண்டும்.
களம் காலம் கருதி நேர நிர்ணய விசியத்தில் தமிழன் தமிழனாக எழ தன குடும்பத்தில் தமிழன் தமிழில் பேர் வைக்க வேண்டும்.
இந்த உன்னத நோக்கில் உலகதமிழர் பாதுகாப்பு இயக்கம் சேவை செயலாக்கம் பெற உணர்வாளர் தமிழர்களை பாதுக்காத்து வருகிறோம்.
ஈராண்டுகளை தப்பாக கணக்கிடுபவன் பத்தாண்டுகளை எமந்திருப்பான் என்கிறார்கள், இப்படிதான் கடந்த 1000 ஆண்டுகளை உலக தமிழன் இழந்து அவனுக்கு என்று மண் இல்லாமல் இருந்ததை இழந்து உள்ளான். உலக நாடுகளில் புலம் பெயர்த்துள்ள தமிழர்கள் அவரவர் வாழ் நாடுகளில் தமிழராய் எழுவோம் தமிழர் நாடும் தமிழ் ஈழமும் நம் முன் உரிமை. என சிறியோர்க்கு ஞாபகம் செய் சங்கே முழங்கு.
உலகத் தமிழர் பாதுக்காப்பு மையம்
அம்பாங் தமிழர் சமூக நல இயக்கம்
தமிழர் களம்
நாம் தமிழர் தமிழர் நாடு
நாம் தமிழர் மலேசியா
தமிழர் பணிப்படை
தமிழர் தேசியம்
தமிழ்த்தேசம்
மலேசியா தமிழர் மாணவர் இயக்கம்
-Pon Rangan
[email protected]
அருமை! அருமை! எழுதுங்கள், எழுதுங்கள். தினசரி பத்திரிக்கையில் வந்த செய்திக்கு ஏன் மின் ஊடகத்தில் விளக்கம்.
அமாம் இவர் …சங்க நாதா முருகவேல்…கணக்கு எங்கே காமி பார்போம் …..அம்பங்க் PKR தலைவர்
சசி சாசி ஒரு மளையல பகவதி உனக்கு என்ன தெரியும்ம் தமிழர் வரலாறைபற்றி ……வெளியே செல்லட ……என் இனத்தை பற்றி பேச உனக்கு அருகதை இல்லை………
** எங்கள் உலக இணைப்பு உனக்கு தெரியாது .பழ நெடுமாறன் தமிழர் தேசியம் , சீமான் நாம் தமிழர், தமிழர் களம் , தமிழ் தேசம் ,மலேசியா தமிழர் சார்ந்த இயக்கங்கள் ,தமிழ் ஈழம் என்று எங்கள் இயக்கம் தமிழர் சிந்தனை பாதுகாப்பில் இணைந்துள்ளோம்**
தமிழ் நாட்டைச் சேர்ந்த இந்த சந்தர்ப்ப வாத அரசியல் வாதிகளா
துணை ???
** தமிழ் ஈழம் தமிழர்களை உலக நாடுகள் ஏற்று அவர்களுக்கு
அவரவர் வாழ் நாடுகளில் அகதிகள் நீக்கி பிரஜை உரிமை தரவேண்டும் **
முதலில் மேலே நீங்கள் குறிப்பிட்ட தலைவர்கள் தமிழ் நாட்டில்
உள்ள ஈழத் தமிழர்களுக்கு பிரஜை தகுதியை பெற்றுத் தரட்டும் !?
வெள்ளையன் லட்ச்சக் கணக்கான ஈழத் தமிழர்களுக்கு செய்திருக்கும் நன்மையை இன்னும் அறியாமல் இருந்தால் ;
ஒருமுறை போய் பார்த்து …,விபரம் அறிந்து …தமிழன் வாழும்
தமிழ் நாட்டில் ஏன் இப்படி ??? என்று மேலே சொன்ன தமிழனிடம்
கேளுங்கள் .
பிரஜா உரிமை மட்டும் அல்ல …, திறமைகேற்ற தொழில் ,வீட்டு
வசதி …,தொழில் இல்லாதோருக்கு மாதாந்திர ஊதியம் …,இன்னும்
அடுக்கிக் கொண்டே போகலாம் !
ஒன்றுக்கு இரு தமிழர் தொலைக் காட்சி அலை வரிசைகள் …,தமிழர்கள் நடத்துவது !!!
தமிழ் நாட்டானின் தமிழின் தரத்தை விட 100 மடங்கு உயர்வானது ,
வெறும் தமிழ் … தமிழ் …தமிழில் தான் எல்லாம் !!!
ஆயிரம் சங்கங்கள் எங்களுக்கு இருந்தென்ன பயன் ???
நெருப்பாக ஒன்று இருந்தாலும் அதில் வீரியம் வேண்டுமே ???
முதலில் இந்த சங்க சாக்காடுகளை தூக்கி எரிந்து விட்டு; அவனவன்
தானும் தன் குடும்பமும் உயர வழி தேடட்டும் !!!
வெறுமனே இந்தோநேசி யனையும்…,பங்களா தேசியையும் …,
மியன்மார் காரனையும் …, இங்கே அவன் புரியும் முன்னேற்றமான
நடப்புகளையும் கண்டு புலம்புவதால் பயன் ஏதுமில்லை !!!
உலகத் தமிழர் பாதுக்காப்பு இயக்குனர் திரு பொன் ரங்கன் அவர்களுக்கு வணக்கம். திரு. முகுந்தா, சிலாங்கூர் இந்தியன் செம்பர் ஆப் கோமாஸ் அவர்களின் உரையை கேளுங்கள், தமிழ் மொழியால் வர்த்தகத் துறையில் வெற்றி பெற முடியாது என்று கூறுகிறார். அவர் கூறியது சரி இல்லை என்று கூற வந்தவரோ ஆங்கிலத்திலேயே தனது கருத்தை தெரிவித்துள்ளார். வர்த்தகத்தில் சிறந்து விளங்கும் சீனர்கள் என்ன ஆங்கிலத்திலா தனது வர்த்தகத்தை நடத்தி வெற்றி பெற்றுள்ளனர். உங்களின் கருத்தை எழுதவும் நன்றி.
https://www.facebook.com/photo.php?v=780219045340935&set=vb.100000585413009&type=2&theater
இந்த சொற்கள் கேட்க நன்றாக இருக்கின்றன.இதற்கு செயல் வடிவம் காண வேண்டும் எனில் இந்த எண்ணம் கொண்டவர்கள் முதன் முதலில் ஆண்டுக்கு ஒருமுறை கோலா லம்பூரில் ஒன்றுகூட வேண்டும். ஒவ்வொரு கூடுதலிலும் நம் சமுதாய நலனுக்கான ஒரு செயல் இருக்க வேண்டும்.உணர்சிகரமான உரைகள் மட்டும் போதாது.தமிழின ஒற்றுமைக்கு குருதியின் இறுதி ஓட்டம் வரை செயல் படுவோம்.
போகராஜா குமாரசாமி wrote on 21 August, 2014, 22:42
உலகத் தமிழர் பாதுக்காப்பு இயக்குனர் திரு பொன் ரங்கன் அவர்களுக்கு வணக்கம். திரு. முகுந்தா, தலைவர், சிலாங்கூர் இந்தியன் செம்பர் ஆப் கோமாஸ் அவர்களின் உரையை கேளுங்கள், தமிழ் மொழியால் வர்த்தகத் துறையில் வெற்றி பெற முடியாது என்று கூறுகிறார். அவர் கூறியது சரி இல்லை என்று கூற வந்தவரோ ஆங்கிலத்திலேயே தனது கருத்தை தெரிவித்துள்ளார். வர்த்தகத்தில் சிறந்து விளங்கும் சீனர்கள் என்ன ஆங்கிலத்திலா தனது வர்த்தகத்தை நடத்தி வெற்றி பெற்றுள்ளனர். உங்களின் கருத்தை எழுதவும் நன்றி.
உலகத் தமிழர் பாதுக்காப்பு மையம்
அம்பாங் தமிழர் சமூக நல இயக்கம்
தமிழர் களம்
நாம் தமிழர் தமிழர் நாடு
நாம் தமிழர் மலேசியா
தமிழர் பணிப்படை
தமிழர் தேசியம்
தமிழ்த்தேசம்
மலேசியா தமிழர் மாணவர் இயக்கம்.
https://www.facebook.com/photo.php?v=780219045340935&set=vb.100000585413009&type=2&theater
ஆனால் அதையே வெங்கட் ராமசாமி நாய்கண் சொன்னால் சரி,மத்தவங்க சொன்னா வாரி வரிஞ்சு கட்டின்டு வருவியலோ பேஸ் பேஸ்,நாராயண நாராயண.
பெரியாரின் தாக்கம் எந்த அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தால் இந்தக் காயீ போன்றப் பார்ப்பண குறைமதியினருக்கு பெரியாரின் மீது இத்துனை அடங்காத கோபம் அடம்பிடித்துக்கொண்டிருக்கும் என்பதை ஒரு கனம் நினைத்துப் பார்க்கிறேன். இந்த பார்பண அடிவருடிகளுக்கு மட்டும் ஏன் பெரியார் மீது இத்துனைக் கோபம் வரவேண்டும்? என்று இந்த நன்றிகெட்ட தமிழினத்திற்கு மட்டும் ஏன் புரியமாட்டேன் என்கிறது?
தமிழரே வெங்கட் ராமசாமி நாய்கண் ஒரு நாழிதலில் எழுதியதாக,”தமிழ் மொழி எதற்கும் உபயோகில்லை”என்று ஒரு சகோதரி ஆதாரத்தோடு செம்பருத்தியில் முன்வைத்ததை வாசித்ததை சொன்னேன்,நாய்கண்,ணை பற்றி எழுதினால் ஏன் சிலறுக்கு கோபம் தொத்துன்டு வருது. நீறும் நாய்கண்ணோ.தமிழர்களே அரியாது தந்திரமாக கூட்டத்தில் நுழைந்து,அவர்களின் சிந்தனையைில் அயல் நாட்டு கலாச்சாரத்தை புகுத்தி கலை,கலாச்சாரத்தை கெடுத்து ஜாதிவாரியாக பிரித்து பிறப்புப்பத்திரம் வறை பதிவு பெற செய்த கயவனை பற்றி எழுதினால் சிலறுக்கு கோபம் வருது.அவதிபடுவது மக்கள் உலகில் எங்கே போனாலும் வருமே ஜாதி முகவரி,வாழ்க நாராயண நாமம்.
பெரியவர் சொன்னது தமிழர் முன்னேற்றத்திற்கு. நல்லதைச் சொன்னால் கேட்டுக் கொள்ள வேண்டும்.
பெரியாரின் முழுப்பெயரைச் சொல்லும் போது அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். மகிழ்ச்சியையே மறந்து விட்ட மனிதனுக்கு இப்படியாவது மகிழ்ச்சி கிடைக்கட்டுமே! பெரியார் இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்!
Anonymous wrote on 30 August, 2014, 21:37
பெரியவர் சொன்னது தமிழர் முன்னேற்றத்திற்கு. நல்லதைச் சொன்னால் கேட்டுக் கொள்ள வேண்டும்.
Anonymous ஆணா? பெண்ணா? தெரியவில்லை. நீங்கள் எந்த பெரியவரை கூறிப்பிடுகிறீர்? தமிழக பெரியாரா?
உங்கள் கவனத்திற்கு – மிக வருத்தத்துடன், நாம் இங்கு நல்லதை கூறுவோமானல் புனைப்பெயர் தேவையில்லையே? ஒருவர் தன் பெற்றோர் கொடுத்த பெயரை மறைத்ததால் பெற்றோரை அவமதித்ததுப்போல் வைத்துக்கொள்ளலாம். இந்தப் பகுதி தமிழ்ப் பகுதி, அந்த புனைப்பெயரையும் ஆங்கிலத்தில் எழுதியதை தமிழ் தாயை அவமதித்ததுப்போல் வைத்துக்கொள்ளலாம். Anonymous ஆணா? பெண்ணா? தெரியவில்லை. எனது பொதுவான கருத்து கருத்தை புரிந்து மாறினால் போதும், ஆகவே உங்களின் விளக்கம் தேவையில்லை. நன்றி.
abraham thare wrote on 23 August, 2014, 14:22
போகராஜா குமாரசாமி சார், மொழிக்கும் வர்த்தகத்துக்கும் சம்பந்தமில்லை. சீனர்கள் இந்த நாட்டுக்கு வந்த போது அவர்கள் தொழிலாளர்கள் தான். அவர்கள் வர்த்தகத்தில் ஈடுபாடு காட்டிய போது சீனப் பத்திரிகைகள் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தன. அதனால் அந்த மொழி வர்த்தக மொழியாக மாறியது.தமிழ்ப் பத்திரிகைகள் தமிழ் நாட்டுத் திராவிடக் கட்சிகளின் செய்திகளையும் அதன் பின்னர் சாமிவேலுவின் ம.இ.கா. அடாவடித்தனங்களையும் போட்டு நமது கவனத்தை வேறு திசைகளுக்குச் செல்லாமல் மிகவும் கவனமாக இருந்தன. இப்போது அனைத்து தமிழ்ப்பத்திரிக்கைகளும் அரசியல்வாதிகளின் கையில் இருப்பதால் இன்னும் நாம் அவர்களின் பிடியில் இருந்து மீளவில்லை. இப்போது ஓரிருவர் நம்மிடையே வர்த்தகம் செய்பவர்கள் தங்களது சுய முயற்சியில் வந்தவர்கள். அல்லது வர்த்தகப் பாரம்பரியம் உள்ளவர்கள். நமது பத்திரிகைகள் அதிகம் அடாவடித்தனமான செய்திகளையே போடுவதால் நமது தமிழ் மொழி ‘அடாவடி மொழியாக’ மாறிவிட்டது. ஏன் இங்கு செம்பருத்தியில் கருத்து சொல்லுபவர்கள் கூட அடாவடித்தனமாகத் தானே எழுதுகிறார்கள்! வெளியே எப்படி வெட்டு, குத்து என்று நாம் பார்க்கிறோமோ அதையே இங்கு எழுத்தில் வன்மத்தைக் காட்டுகிறார்கள். நமது பத்திரிகைகள் வர்த்தகத்துக்கு மாறும் வரை தமிழ் அடாவடி மொழியாகத்தான் இருக்கும். அன்பு பாசம் எல்லாம் இப்போது நமது மொழியில் இல்லை. திரு முகுந்தன் ஒரு மலையாளி. அவர் சொல்லுவதிலும் உண்மை இல்லை. நாம் வர்த்தக சமூகமாக மாறும் வரை தமிழ் ஏளனமாகவே பார்க்கப்படும்.
உலகத் தமிழர் பாதுக்காப்பு மையம்
அம்பாங் தமிழர் சமூக நல இயக்கம்
தமிழர் களம்
நாம் தமிழர் தமிழர் நாடு
நாம் தமிழர் மலேசியா
தமிழர் பணிப்படை
தமிழர் தேசியம்
தமிழ்த்தேசம்
மலேசியா தமிழர் மாணவர் இயக்கம்
-Pon Rangan
திரு பொன் ரங்கன் அவர்களுக்கு வணக்கம், நீங்கள் இத்தனை இயக்கதின் வழி பொதுப் பணிகள் செய்வது கண்டு மகிழ்ச்சி. உங்களுடைய நடவடிக்கை பட்டியலில் பல திட்டங்களை வாசித்தேன்
1.பண பலம் (பொருளாதாரம் பலம்)
உங்களின் திட்டங்கள் செயல் படுத்த பண பலம் (பொருளாதாரம் பலம்) அவசியம்.
உங்களுடைய நடவடிக்கை பட்டியலில் (தமிழன் தமிழனுக்காகா US 1.00 மாதந்திர வங்கி சேமிப்பு செய்ய வேண்டும்) என்ற வரிகளைவிட வேறு எந்த பொருளாதார திட்டம் இருப்பதாக தெரிக்கப்படவில்லை. அப்படி இருப்பின் எமது மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.
இன்று இந்த நாட்டில் இயங்கிவரும் எல்லா பொது இயக்கமும் இதனையே செய்கிறார்கள் (பல இயக்கம் செயல் படவும் இல்லை).
நம்ம தமிழர்களின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டுமானல் நமது பொருளாதாரம் உயர வேண்டும். பொருளாதாரம் என்பது நமது உடலில் இருக்கும் இரத்ததிற்கு ஈடாகும். உடலில் இரத்தம் குறைந்தால் உடலின் நலம் குன்றிவிடும், அதனால் பல நோய்கள் தோன்றும். அதேப் போல் தான் நமது பொருளாதாரம் குன்றினால் நமது சமூகத்தில் பல எதிர்மறையான பிரச்சினைகள் தோன்றும். இப்போது இந்ந நாட்டில் நமது சமூகத்தில் உள்ள பிரச்சினைகளை நீங்கள் நன்கு அறிந்து இருப்பீர்கள். ஆகவே இந்த பிரச்சினைகளின் பட்டியல் தேவையில்லை என்று நினைக்கிறேன்.
நம்ம தமிழர்களின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டுமானல் நமது பொருளாதாரம் உயர வேண்டும். அதோடு நமது சமூகத்தில் உள்ள பிரச்சினைகளை களைய சமூகச் சேவையும் இணத்துக் கொண்ட திட்டம் சமூக தொழில் முனைவோர் திட்டம். இந்த திட்டத்திற்கு இணயான மாற்றுத் திட்டம் இந்த நாட்டிலே இந்தியர்களுக்கு (தமிழர்களுக்கு) இல்லை என்று கூறுவேன்.
இந்த சமூக தொழில் முனைவோர் திட்டம் குறித்த முன்னோட்ட கட்டுரையே { சமூக தொழில் முனைவோர் என்றால் யார்? ………….(போகராஜா குமாரசாமி) Monday, Oct 21, 2013 3:39 pm}.
உங்களின் கவனத்திற்கு, எமது சமூக தொழில் முனைவோர் திட்டத்திலே உங்களின் திட்டம் ((தமிழன் தமிழனுக்காகா US 1.00 மாதந்திர வங்கி சேமிப்பு செய்ய வேண்டும்) (மலேசிய வெள்ளி சுமார் 3.00) அடங்கியுள்ளது.
சமூக தொழில் முனைவோர் கட்டுரையினை வாசிக்காதவர்கள். இந்த தலைப்பை ( சமூக தொழில் முனைவோர் என்றால் யார்? -.(போகராஜா குமாரசாமி) Monday, Oct 21, 2013 3:39 pm}. மக்கள் கருத்துப் பகுதிக்கு சென்று வாசிக்கவும்.
2. தமிழ் மொழி பலம், தமிழ் மொழி வளர்ச்சி
உங்களின் கவனத்திற்கு திரு. முகுந்தா, தலைவர், சிலாங்கூர் இந்தியன் செம்பர் ஆப் கோமாஸ் அவர்கள் தமிழ் மொழி அன்பும் பாசத்தை வளர்க்க உதவினால் போதும், வர்த்தகத்திற்கு ஆங்கிலமே தேவை என்று கூறுகிறார். இவரின் உரை குறித்த கருத்தினை இரண்டு முறை எழுதியும் (போகராஜா குமாரசாமி wrote on 21 August, 2014, 22:42 , போகராஜா குமாரசாமி wrote on 30 August, 2014, 16:54 ) நீங்கள் கருத்து எழுதவில்லை.
திரு. முகுந்தா கூறுவது சரியேன்றால் வகுப்பு ஆறு வரை தமிழ் கல்வியே போதும் ஏதற்கு உங்களின் நடவடிக்கை பட்டியலில் உள்ள திட்டம் (தமிழ் உலக மொழி என்பதால். உலக நாடுகள் அதன் பல்கலை கழக உரிமங்களில் தமிழ் பயிலும் ஆய்வுப்பிரிவுகள் நடத்திட வேண்டும் அதில் தமிழ் சென்செளர்கள் நியமனங்கள் இடம் பெற வேண்டும்
தமிழ் நாட்டுக்கு வெளியே தமிழ் இடைநிலை பள்ளிகள் அமைவதற்கான உருமாற்று திட்டங்கள் வேண்டும்)
உங்களின் கவனத்திற்கு, எமது சமூக தொழில் முனைவோர் திட்டத்திலே தமிழ் மொழியினை வர்த்தக தொடர்பு மொழியாகவும், தமிழர்கள் மாத குறைந்தது மலேசிய வெள்ளி 5,000 சாம்பாதிக்கவும், அதே நேரத்தில் சமூக பணிகள் செய்வதும் அடங்கியுள்ளது.
நம்மைப் போன்றே தொழிலாளியாக வந்த சீனர்கள் அவர்களின் சீன மொழியை பொருளாதார மொழியாகக் கொண்டு இன்று பொருளாதாரத் துறையில் ஆட்சி செய்கிறார்கள்.
இந்த தாட்டில் இன்று தமிழ் இஸ்லாமிய அன்பர்களும், தமிழ் செட்டியார் அன்பர்களே தமிழ் மொழியை தங்களது வியாபாரத்திற்கு தொடர்பு மொழியாக பயன்படுத்தி வருகிறார்கள்.
நீங்கள் (திரு பொன் ரங்கன்) சார்ந்துள்ள அமைப்பு போன்றே இந்த நாட்டில் பல அமைப்பு, மன்றம், இயக்கம், சங்கம், அரசியல் கட்சிகள் இயங்குகின்றன. நீங்கள் பணம் கொடுங்கள் நாங்கள் சேவை செய்கிறோம் என்கிறார்கள். அதோடு அரசாங்க மானியத்தை நம்பியே செயல் திட்டமும் அமைந்திருக்கும்.
இந்த நாட்டில் சீனரின் பொருளாதார வலிமையை யாரும் அசைக்க முடியாது. ஆனால் சமூக தொழில் முனைவோர் திட்டத்தின் வழி பலரை (விரும்பி செயல் படுவோர்) மாதம் குறைந்தது மலேசிய வெள்ளி 5,000 சாம்பாதிக்க முடியும். அதோடு நம்மிடையே ஏற்பட்டுள்ள பல சமூக பிரச்சனைகளை களைய உதவ முடியும்.
இரண்டு மில்லியனுக்கு குறைவாக இருக்கும் நம்மிடையே பல அரசு சாரா அமைப்பு, மன்றம், இயக்கம், சங்கம், அரசியல் கட்சிகள், ஏழு தமிழ் தினசரிகள் இருப்பது நல்லதே என்றாலும். இவர்களால் நமது சமூக பெறும் நன்மைகள் என்னவென்று பட்டியல் இருப்பின் நமது அடுத்தகட்ட முன்னேற்றத்திற்கு பலமாக அமையக்கூடும். நன்றி
தமிழருக்கு சமர்பணம்.
தமிழரிடம் ஏன் ஆங்கிலம் வழி வணிகம்?
http://www.youtube.com/watch?v=kUuKJ0JHVKU&feature=youtu.be
Published on Oct 6, 2014
கதை,வசனம் – இராச்குமார் பழனிச்சாமி
கலை – மயூரன் மோகன்
ஒளிப்பதிவு – தமிழ் பிரபா
மலேசிய தமிழர் கவனத்திற்கு தமிழ் மொழி தாய் மொழி என்பது உண்மை. ஆனால் வாழும் இந்த நாட்டின் தேசிய மொழிக்கும் நாம் தகுந்த கவனம் செலுத்த வேண்டும் அதை தவிர்த்து உலக மொழி ஆங்கிலம் என்று தமிழ் மொழியையும், தேசிய மொழியையும் தவிர்ப்பது தமிழனுக்கு சிறப்பகாது.