நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளினதும் மனித உரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அகலவத்தையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச மனித உரிமைக் கட்டமைப்பை வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சர்வதேச விவகாரங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு மிகச் சிறந்த ஆற்றல் காணப்படுகின்றது.
இறுதிக்கட்ட போரின் போது அமெரிக்கா கப்பல் ஒன்றை அனுப்பி பிரபாகரனை பாதுகாக்க முயற்சித்தது.
சிவிலியன்களை மீட்கும் போர்வையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அனுமதியளித்தால் கப்பல் ஒன்றின் மூலம் சிவிலியன்களை மீட்க முடியும் என அப்போதைய இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஒ பிளக் தெரிவித்திருந்தார்.
இதன்போது, இந்தியாவும் இவ்வாறு சிவிலியன்களை மீட்பது குறித்து கோரியதாகவும், ஆலோசனை செய்து பதிலளிப்பதாகவும் ஜனாதிபதி, பிளக்கிடம் தெரிவித்தார்.
“கப்பலில் சிவிலியன்களை பாதுகாக்க அனுமதியளித்தால் பிரபாகரனை காப்பற்றிவிடுவார்கள்” என ஜனாதிபதி தம்மிடம் கூறியதாக, மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் ராஜதந்திர அணுகுமுறைகள் பாராட்டுக்குரியவை என மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.