இலங்கை சீனாவுடன் கொண்டுள்ள வலுவான உறவுகள் குறித்து இந்தியாவுக்கு எந்த கவலையுமில்லை – சு.சுவாமி

swamy_mahindaஇலங்கையும் சீனாவும் தமக்கிடையே வலுவான உறவைப்பேணி வருகின்றமை தொடர்பில் பா.ஜ.க. தலைமையிலான இந்திய அரசுக்கு எந்தக் கவலையும் இல்லை.

இவ்வாறு தெரிவித்திருக்கிறார் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கொழும்பில் நடைபெறும் பாதுகாப்புக் கருத்தரங்கில் கலந்துகொண்டு சீன பிரதிநிதிகள் குழு எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுக்கு ஒரு நாடு குறித்து மாத்திரமே கவலையுள்ளது. அந்த நாட்டை சேர்ந்த தீவிரவாதிகள் தமிழ்நாடு ஊடாக இந்தியாவுக்குள் ஊருடுவ இலங்கையைத் தளமாக பயன்படுத்துகின்றனர். இந்தியா இதுகுறித்து இலங்கைக்குத் தெரியப்படுத்தியுள்ளது.

இலங்கை சீனாவுடன் கொண்டுள்ள வலுவான உறவுகள் குறித்தோ பொருளாதார வர்த்தக துறைகளில் அந்த நாடு இலங்கையுடன் இணைந்து செயற்படுவது பற்றியோ இந்தியாவுக்கு எந்த கவலையுமில்லை.

அவர்களுடன் உறவு வைத்திருக்காதீர்கள் என்று சொல்ல எங்களுக்கு அதிகாரமோ, உரிமையோ இல்லை. சொன்னாலும் அவர்கள் கேட்கமாட்டார்கள்.

சீன ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தை இந்தியாவும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளது.

TAGS: