பொது மக்களின் அனைத்து நிகழ்வுகளையும் இலங்கை அரசாங்கம் தமது புலனாய்வு பிரிவினரைக் கொண்டு வேவு பார்த்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தேசிய சமாதான பேரவை இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
தற்போது திருமணவீடுகள், செயலமர்வுகள், பொது வைபவங்கள், மத வழிபாடுகள் போன்ற அனைத்து நிகழ்வுகளையும் புலனாய்வாளர்கள் கண்காணித்து வருகின்றனர்.
இது பொது மக்களுக்கு மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்பட்ட இந்த நிலைமை தற்போது தென்னிலங்கையிலும் பரவி இருப்பதாக தேசிய சமாதான பேரவை தெரிவித்துள்ளது.
இது கடுமையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயம் என்றும் அது தெரிவித்துள்ளது.