இலங்கைத் தமிழர் நிலைமை குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் பேசத் திட்டமிட்டுள்ளோம் என்று இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்களான மாவை. சேனாதிராசா, எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.
இது தொடர்பாக நேற்றைய தினம் டில்லியில் நிருபரிடம் அவர்கள் கூறுகையில்,
இலங்கைத் தமிழர்களின் உணர்வுகளை தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடமும் எடுத்துரைக்கத் திட்டமிட்டுள்ளோம்.
அடுத்த முறை இந்தியா வரும்போது சென்னையில் ஜெயலலிதாவை சந்திக்க வாய்ப்புக் கிடைக்கும் என்று நம்புகிறோம்.
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்தியாவில் உள்ள மத்திய, மாநில அரசுகள் இணைந்து இலங்கைக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டும் என்றனர்.
விவேகமான முடிவு!
தமிழர்கள் அனைவரும் இலங்கைத் தமிழர்களின் உணர்வுகளை மதிக்கிறோம்.
எல்லாம் சரிதான். முதல்வர் அம்மா இந்த நெருக்குதல் மூலம் மத்தியில் தனக்கு என்ன அரசியல் லாபம் கிடைக்கும் மாநிலத்தில் என்ன அரசியல் லாபம் கிடைக்கும் என்றெல்லாம் கணக்குப் பண்ணித்தான் ‘முடியும்.முடியாது’ என்று பதில் கொடுப்பார். அது தானே அரசியல்! அம்மா மட்டும் விதிவிலக்கா என்ன! இனப்பற்று என்று ஒன்று இருந்தால் அவன் அரசியலில் இருக்கமாட்டானே!