இந்தியா – சீனா -பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஐ.நா விசாரணை குழுவுக்கு தகவல் வழங்க மறுப்பு!

china-pakistan-india-flagஇந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு தகவல்களை வழங்குவதனை நிராகரித்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கைக்கு எதிராக விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது சீனா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் பல்வேறு வழிகளில் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தது.

தகவல்களை வழங்க குறித்த நாடுகள் மறுத்துள்ளமை ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவுக்கு சிக்கலை உருவாக்கியுள்ளது.

விசாரணைகளுக்காக வெளிநாடுகளிடமிருந்து தகவல்களை பெற்றுக் கொள்ள உள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை அறிவித்திருந்தார்.

எனினும் விசாரணைக் குழுவின் நடவடிக்கைகளை இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை என சிங்களப் பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.

TAGS: