கூட்டமைப்பினர் எங்கு சென்றாலும் இறுதியில் என்னிடமே வரவேண்டும்: ஜனாதிபதி சீற்றம்

modi_mahinda_002இந்தியாவுக்கு சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு குழுவினர் செல்லவுள்ளதை அறிந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடும் சீற்றமடைந்தாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்த தனது கடும் அதிருப்தியை பிரதிநிதி ஒருவர் மூலமாக ஜனாதிபதி, சம்பந்தனிடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இந்த விஜயம் குறித்து அரசாங்கத்திற்கு தகவல் எதுவும் தெரிவிக்கப்படாதது குறித்த தனது கடும் ஏமாற்றத்தை ஜனாதிபதி தனது பிரதிநிதி ஊடாக வெளிப்படுத்தியுள்ளார்.

‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இந்திய விஜயம் என்னையும் அரசாங்கத்தையும் நெருக்கடிக்குள் தள்ளுவதை நோக்கமாக கொண்டது. கூட்டமைப்பினர் அரசாங்கத்தை மாற்ற விரும்புகின்றனர். அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான முறுகல் நிலைக்கு இதுவும் ஒரு காரணம்.

tna_members_003வட மாகாண சபை அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியதாலேயே நான் ஆளுநரை மாற்றவில்லை. சம்பந்தனும் அவரது கட்சியினரும் எங்கு சென்றாலும் இறுதியில் என்னிடமே வரவேண்டும். என்னிடம் வராவிட்டால் அவர்களால் தீர்வுகள் குறித்து பேச முடியாது’  என தன்னுடைய பிரதிநிதி ஊடாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எனினும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், ஜனாதிபதியின் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

‘நான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், நாங்கள் அரசியல் தீர்வொன்றிற்காக  பாடுபடுகிறோம், இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் எங்களுடைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதற்காக நாங்கள் அங்கு செல்கிறோம்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு இந்தியப் பிரதமர் துணை போகமாட்டார்!- ஞானசார தேரர்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி துணை போக மாட்டார். முன்பிருந்த ஆட்சியாளர்கள் இனப்பிரச்சினை தீர்வு குறித்து பல அழுத்தங்களைக் கொடுத்து வந்துள்ளனர். புதிய பிரதமர் மீது எமக்கு பூரண நம்பிக்கை இருக்கிறது என பொதுபலசேனா செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மேற்கத்தேய நாடுகளின் பகடைக் காய்களாக மாறியுள்ளனர்.

தமிழ் மக்களுக்கு அதிதியாவசிய தேவைகளை விடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தாம் அரசோச்சும் வகையில் வடக்கு கிழக்கு இணைந்த தனிநாட்டைக் கோருகின்றது.

இலங்கை சுயாதீனமான நாடாகும். எனவே வெளிநாட்டுத் தலையீடுகளுக்கு நாம் இடமளிக்க முடியாது.

இருந்தும் இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி நிலைமையை உணர்ந்து யதார்த்தமாக செயற்படுபவர்.

எனவே அவர் மீது முழு நம்பிக்கை இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

TAGS: