போரின் போது சிவிலியன்கள் கொல்லப்படவில்லை என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புப் படையினர் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என அரசாங்கம் தொடர்ச்சியாக கூறி வந்தது.
இறுதிக்கட்ட போரின் போது சிவிலியன்கள் கொல்லப்படவில்லை என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாக காணப்பட்டது.
எனினும், பொதுமக்கள் உயிரிழப்பு;ககள் தொடர்பிலான அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றிற்கோ அல்லது கூட்டணி கட்சிகளுக்கோ அறிவிக்காது ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றையும் அதற்கு ஆலோசனை வழங்கும் வெளிநாட்டு நிபுணர் குழு ஒன்றையும் அரசாங்கம் நியமித்துள்ளது.
வடக்கு மக்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கு உண்மையாகவே அக்கறையிருந்தால் ஐக்கிய நடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருக்க வேண்டும்.
அரசாங்கம் சர்வதேச விசாரணைகளில் பங்கேற்று குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கவில்லையென்றால் அதனை நிரூபிக்க முடியும்.
மாறாக ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழுவின் நடவடிக்கைகளை வெறுமனே விமர்சனம் செய்வதில் அர்த்தமில்லை.
இவ்வாறு நடந்து கொள்வதனால் அரசாங்கத்தின் மீதான குற்றச்சாட்டுக்கள் நாளுக்கு நாள் உயர்வடையும்.
அரசாங்கம் இந்த நிலைமைகளை புரிந்து கொள்ளாமை வருத்தமளிக்கின்றது.
இறுதியில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அரசாங்கத்தையே பாதிக்கும் என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஐயா, நான் பள்ளி மாணவர்களின் கட்டுரையைத் திருத்தும் வழிமுறைகள் தொடர்பான நூல்களைத் தேடியும் கிடைக்கவில்லை. ஆதலால், தங்களின் உதவியை நாடுகிறேன்.