இந்த நாடு ஒர் பௌத்த நாடு!– அஸ்கிரிய மாநாயக்கர்

udugama_sri_buddharakkhita_001இந்த நாடு ஓர் பௌத்த நாடு என கண்டி அஸ்கிரிய மாநாயக்கர் உடுகம சிறி புத்தரக்கித்த தேரர் தெரிவித்துள்ளார்.

எனினும், பௌத்த மதக் கொள்கைகள் இன்று உதாசீனம் செய்யப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

எவர் ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் தர்மத்தை மதிக்கும் மக்கள் சமூகமொன்றை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

இன்று தாய் தந்தையை கொலை செய்தேனும் பணம் பாதிக்க நினைப்பவர்களே அதிகமாக உள்ளனர்.

மேற்கத்தைய கலாச்சாரம் நாட்டுக்கள் புகுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் கலாச்சார விழுமியங்களை பேணிப் பாதுகாப்பதற்கு எவரும் ஆர்வம் எடுத்துக் கொள்வதில்லை.

அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் முதலாளிமாருடன் இணைந்து நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்கின்றனர்.

இது ஓர் பௌத்த நாடு என்பதனை சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்லக்கூடிய வகையில் நாம் செயற்பட வேண்டும்.

அவ்வாறு செய்யாவிட்டால் நாட்டை முன்னோக்கி நகர்த்த முடியாது.

அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து செய்படுவதன் மூலம் வெளிநாட்டு சக்திகளின் அழுத்தங்களை முறியடிக்க முடியும்.

இவ்வாறு இணைந்து செயற்பட்டால் வெளிச் சக்திகளின் அழுத்தங்களை வெற்றிகரமகாக எதிர்நோக்க முடியும்.

நாட்டின் சமூகம் பாரியளவில் சீரழிந்துள்ளது என புத்தரக்கித்த தேரர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள் அஸ்கிரிய பீடாதிபதியை நேற்று சந்தித்த போது புத்தரக்கித்த தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

TAGS: