தமிழ் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தால் அரசு நேரடிப் பேச்சுக்குத் தயார்!- அரசாங்கம்

tna_logoதமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்தியாவுக்கோ வேறு நாட்டிற்கோ சென்று கோரிக்கைகளை முன்வைப்பதில் எதுவித பிரயோசனமுமில்லை. எனவே தமிழ் கூட்டமைப்பு தமது யோசனைகளை தெரிவுக்குழுவின் முன்தான் சமர்ப்பிக்க வேண்டும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் இந்திய பிரதமரை சந்தித்து பேசியது குறித்து நேற்று நடைபெற்ற  ஆளும் கட்சி  ஊடக மாநாட்டில் வினவப்பட்டது. இதற்குப் பதிலளித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

13 வது திருத்தத்திற்கு அப்பால் அதிகாரம் வழங்க முடியாது என்பதை தேவையான ஆதாரங்களுடன் முன்வைத்துள்ளோம்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மோடியிடம் எத்தகைய கோரிக்கையும் முன்வைக்கலாம் ஆனால் ஐக்கிய இலங்கைக்குள் உள்ளக தீர்வு ஒன்றினை காணுமாறு மோடி கூறியிருக்கிறார்.

இந்தியாவுக்கோ வேறு நாட்டிற்கோ செல்வதை விட தமிழ் கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்கு வந்து தமது யோசனைகளை தெரிவிக்க வேண்டும்.

மேலைத்தேய நாடுகள் கை வைத்த எந்த இடத்திலும் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படவில்லை.

தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் நேரடி பேச்சு நடத்த அரசாங்கம் தயாராக உள்ளது. இதுவரை நேரடிப் பேச்சுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடவில்லை. அவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டால் அது தொடர்பில் கவனம் செலுத்தலாம் என்றார் அமைச்சர் பிரேம்ஜயந்த.

TAGS: