இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் பலாத்கார மற்றும் சுயாதீனமற்ற ரீதியில் காணாமல் போனோருக்கான நடவடிக்கை குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை மனித உரிமை காப்பாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பழிவாங்கல்களும் நிறுத்தப்படவேண்டும் என்று அந்த குழு கேட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் 13வது பிரகனடத்தின்படி இலங்கை அரசாங்கம் விசாரணைகள், முறைப்பாடுகள், ஆலோசனைகள், விசாரணைகளின் சாட்சிகள் போன்ற விடயங்களில் உரிய நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருக்கவேண்டும்.
இந்தநிலையில் காணாமல் போனோர் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமையை ஐக்கிய நாடுகள் குழு வரவேற்றுள்ளது.